Skip to main content

Posts

Showing posts with the label கவிதை

அப்பா, நீங்கள் கையாலாகாதவரா?

இரண்டு கலைகளை ஒன்றாக நேசிப்பதையிட்டு, ஒன்றுக்கு நிறம் பூசுதலையும், இன்னொன்றுக்கு நிறம் மக்கி விடுதலையும் பிரிவினையாகக் கொண்டிருக்கிறேன். இரு தெரிவுகளையும்  பல் தேர்வுக்கோட்டு வினாவைப் போல் நன்னாங்கு விடைகளை கொடுத்து தெரிவு செய்கிறேன். விடைப்பரப்பு தெளிவில்லாது போகுமானால், குதிரையோடுதலையும் வழக்கமாகக் கொள்வேன். தேடலுக்கு அப்பால் உள்ள புண்ணிய நதிக்கரையில் எனது கலைகளது தெரிவுகள் விரிந்துகொண்டிருந்தது. அப்பா ! திருத்த முடியாத உங்கள்  மகள் கனவுகளில் இருந்து  மீளப் படக் கூடியவள் என்று எப்போதாவது நினைக்கிறீர்களா? பூமியின் நடுவே தொலைந்து போன சிறிய மின்கம்பிகளைப் பரிசோதிக்கப் போவதாய் உங்கள் கடைசி மகள் கூறிக் கொண்டு ஆய்வுகூடமொன்றை சொந்தமாய் அமைக்கையில் நீங்கள் ஏன் தடுக்கவில்லை ?  விஞ்ஞானிக் குழந்தையொன்றைப் பெற்றெடுத்த சந்தோசத்திலிருந்து அப்போதெல்லாம் நீங்கள் மீளவில்லையா? எனது பிறப்பிலிருந்த கயமையை நான் உதாசீனப்படுத்தக் கூடாதென்று நினைத்தீர்களா? பாய்மரக் கப்பல்களைப் பின்னிக் கொண்டு நான் கடல் கடந்து போவேன் என்று சொன்ன போ...

மூக்கினால்ப் பாருங்கள் ...

                                                                                             என்னிடத்தில் எஞ்சியிருப்பது ஒன்றே ஒன்று மட்டும், அது என் பற்றியதல்ல -  அது , வெட்ட வெளி நிலத்தின் ஊடு பாயும் கதிர்க் கற்றையிலிருந்து, பிளந்து வரும் ஏழாவது நிறத்தின் மக்கிப் போன சாயம் தாங்கிய நிழல் ! அது ஒரு வகை பெருமிதம் ; களிப்பு ! என்னில் இருந்து நிழல் விலகத் தொடங்கும், கடைசிப் பௌர்ணமியின் இருட்டில், அதனது சாயம் வெளுத்துக் கொண்டு போக ஆரம்பிக்கும்... என் மூக்கை தொடர்ந்து உற்று நோக்கினால் , என் வெளுத்த சாயம் வெளியேறுவதை எல்லோரும் அவதானிக்க முடியும்! கண்களினால் பார்ப்ப...

இந் நதி தீரம் நமக்குச் சொந்தமானது.....

                                                          சித்திரை போய் வைகாசி வந்தாலும் ஆழம் குறையாத அகன்ற நீர்ப்பரப்பு தெளிந்த மனம் போல சிதறாத வான் நிழல் நாணம் பற்றிச் சிந்திக்காத நாமிருவர்-நம்மிடையே நலிந்து தோற்றுப் போன வெட்கம்; சிக்கனம்; இன்னும் பிற கக்கணம். நீண்ட மணற்பரப்பில் நீர் துள்ளி ஓடும் மீன்களற்ற தாழை மடல் கசங்கிக் கிடக்கும். ஆற்றங்கரையின் வளைந்த மூங்கிலுக்குள் கீச்சிடுவேன் நான். கருதுதல் ஒரு பிழையுமஅல்லவே ?-நாங்கள் வாதித்திருப்போம் ! வசந்தங்கள் போய் கோடை வருகையில், குளம் குட்டி மீன்களும் குறுனிப் பேத்தைக்களுமாய்  தவம் கிடக்கும். நல்ல கொக்குகளிற்கு நளினம் பிடிபடாது ! நமக்கென்ன கொக்கு துரத்தும் வேலையா? கொஞ்சம் கூடி பற்றைக்குள் படுத்திருப்போம். புள் உரசு...

மறுக்க அழையுங்கள்...

                                                              நான் கொதிக்கும் உலையில் இருந்து விடுபட்டு- அந்தம் ஒழிக்க, எனக்கென இருக்கும் ஒரு பகலோ இருபகலோ போதாமல் போகும். வாமன உருவத்தில் இருந்த வலி காணாமல் நீண்டு பெரும் இராக்கதனாய் அவதரிக்கும். பார்- நீ ஒரு நாள் சினம் கொண்டு எழுதலில் இருக்கும் தீவிரம் அனுதினம் எனக்குள்ளே பொங்கிப் பிரவகிக்கும். கடல் ,வெளிகள் ,மவுன மலைகள் தாண்டி எதிரொலிக்கும். யாரையும் வாழப் பிரியப்படாமல்- ஓசை முறித்துக் கொள்ளும் -உணர்வலைகள் ! பொங்குதலில் உள்ள லாபகரம் என்ன தெரியுமா? ரகசிய சந்திப்புகளில் புரியாத வார்த்தையற்ற விரவும் வெளிகள்- தாம் ! புல் நுனியில் காலம் பனி தட்டி எழுந்து கூத்தாடும். புலர்தலுக்கு முன்னே பூப்பெய்தும். புருட சுகம் ஒன்றினையே  புணர்ந்தலையும் ; புல்லுருவி வாழ்க்கையில் இருந்து வெளியேறும். நல்லினக்கமில்லா  நகைப்புக்களை  நர...

நினைவு உரு மாறல்.

தேவி எழுந்தாள், தென்மேற்காய் எழுந்தாள் ஆதி நிலவரம் அங்கங்கே நிற்க தேவி எழுந்தாள் பணிந்து போகிற பண்பான குரலில் முன்னெப்போதும் இல்லாத குரலில் தனது பலவீனம் பகை உணர்வானதெனக் கூறினாள். அக வலிமையையும் தன்மானத்தையும் தனக்கு உணர்த்தியதற்காக  எல்லா ஆள்வோருக்கும் நன்றி கூறினாள் மாட்சிமை தாங்கிய ஒரு கனவுக்காக, மற்ற நினைவுகளையெல்லாம் தர மறுப்பதாகக் கூறினாள் ஈட்டி பாய்ந்து கொன்ற  மேகங்களின் காம்புகளில் பெய்யக் கூடாத  மழைகளைப் பற்றி கவலை கொள்ளாமல் புரட்சிகளைக் கருத்தரிக்க நீ தேவையில்லை என்றாள்.   ***  தாகங்களை ஏரிகள் அறிந்தில்லாத ஒரு இரவில், பறவைகள் தம் கூட்டில் இயல்பாக  நித்திரை செய்த ஒரு இரவில் மனிதர்கள் வேட்டைக்குப் போக மறுத்த ஒரு இரவில், நம்பமறுத்த பொத்தல் ஒன்றை  அவள் கைகள் தாங்கிப் பிடித்தன. அழிந்து வருகிற நேயத்துக்கு அவள்  இரங்கற் பா பாட ஒத்துக் கொண்டாள். போராட்டமும், நிசமும் கலந்து போன வாழ்வில்,  நிச்சயமாய் அவனுக்கு குருதி சிந்தும். துயர் துடைத்து...

ஏனெனில் இதுவே உலகம் முடிந்த இடம்

நாம் கைகள் உயர்த்தி எழும்ப வேண்டும். காசுக்கு விற்க இயலாத இந்த நீண்ட காலக் காத்திருப்பின் அவசியம் பற்றி நிரம்பி வழிகிற பசுமையான நேர்கோட்டின் வீழ்ச்சியில்- வாயைக் காதுகள் மறைக்கும் போது, உரக்கச் சொல்ல வேண்டும். சிறப்பான தருணத்தில் மட்டுமே சிரிக்கும், வெகு சராசரியான பற்களை, நீவி விடவ விட வேண்டும். இன்பம் நிகழுவதாயும் துன்பம் நேருவதாயும் ஏனென்று யோசித்து ஊக்கமற்றதாக்கும் இரண்டு வேறு நடப்புக்கள் இருப்பதை - குழந்தையொன்று கருவிலே வீற்றிருப்பதைப் போல நிச்சயமற்றதாக உணர வேண்டும். அந்நிச்சயமற்ற குழந்தையும் கலைந்து , இன்பமானதல்லாத அதன் இறப்பை நேசிக்கையில், அதை நான் வென்று விடுவேன். இன்னமும் பிறக்காத அதன் கண்களுக்கு உம்முடைய புரட்சியெனும் பொய்யை உரைப்பேன். நீர், எனது சொற்களைக் கூர்ந்து கவனிப்பதால் அவை உமது கொலைகளை நியாயப்படுத்தும் என்றில்லை; உலகில் எல்லாமே ஒரு ஒழுங்கில் உள்ளதென்பதும் தவறு ! தயவு செய்து திருந்தாது இருங்கள் - அதன் பின்பு புது வாழ்வு எழும். ஏனெனில் இதுவே உலகம் முடிந்த இடம். -நிலா

எதிர்க்காமல் இருத்தல் என்றால் சார்பாக இருத்தலுமே ; ஆம் !

நீ என்ன தேவைக்காக என்னை நோக்கிப் படையெடுத்து வருகிறாய் என்றோ, என்ன தேவைக்காக  உன் முரட்டுப் படைகளை என்னிடம் அனுப்புகிறாய் என்றோ  நான் இதுவரைக்கும் தெளிந்ததில்லை.  இருந்தும் என் தேவை குறித்து உன்னிடம் நான் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். சொல்லப் பட்ட தேவைகளுக்குள் இருந்து தெளிவாக, சொல்லப் படல் எனும் வார்த்தையில்  மழுப்பிய வார்த்தைகளை நீ கண்டு பிடித்துத் தருகிறாய். நான் சொல்லாத ஒவ்வொரு வார்த்தையையும் எனக்குள்ளே நீவி விட்டு,  அடிக்கோடிட்டுக் காட்டுகிறாய். எனக்கு எல்லாக் கோட்டுக்குப் பக்கத்திலும்  இன்னொரு கோட்டைப் போட்டு பெரிதாக்கும்  பணி தெரியவில்லை.  உனக்குத் தெரிந்திருக்கிறது. கோடுகள் பற்றி சமாமாயோ, சமாந்தரமாயோ  நாங்கள் வாழ்வது பற்றி  நான் உனக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறேன்.  நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்,  என் கேள்விகள் பதில்கள் அற்றுப் போனவையாக  உன்னிடம் மட்டும் சோர்ந்து விடுகின்றன. மறுபடியும் ஒரு நாளும்  நான் உன் கனவுக்குள் வலுக்கட்டாயமாக ப...