சித்திரை போய் வைகாசி வந்தாலும் ஆழம் குறையாத அகன்ற நீர்ப்பரப்பு தெளிந்த மனம் போல சிதறாத வான் நிழல் நாணம் பற்றிச் சிந்திக்காத நாமிருவர்-நம்மிடையே நலிந்து தோற்றுப் போன வெட்கம்; சிக்கனம்; இன்னும் பிற கக்கணம். நீண்ட மணற்பரப்பில் நீர் துள்ளி ஓடும் மீன்களற்ற தாழை மடல் கசங்கிக் கிடக்கும். ஆற்றங்கரையின் வளைந்த மூங்கிலுக்குள் கீச்சிடுவேன் நான். கருதுதல் ஒரு பிழையுமஅல்லவே ?-நாங்கள் வாதித்திருப்போம் ! வசந்தங்கள் போய் கோடை வருகையில், குளம் குட்டி மீன்களும் குறுனிப் பேத்தைக்களுமாய் தவம் கிடக்கும். நல்ல கொக்குகளிற்கு நளினம் பிடிபடாது ! நமக்கென்ன கொக்கு துரத்தும் வேலையா? கொஞ்சம் கூடி பற்றைக்குள் படுத்திருப்போம். புள் உரசு...