Skip to main content

Posts

Showing posts with the label Keybord

மேற்செம்பாலையும் மினக்கெட்ட வேலையும்

இசை பற்றி ஏதாவது குறிப்பு எழுதவேண்டும் என்று நினைக்கும் போது மட்டும் நேரம் கிடைப்பதில்லை என்று ஆகிவிடும், அடிக்கடி எழுதும் கவிதைகளை இவ்விடம் புறக்கணிக்க. நேற்று நிலைச் செய்தி/ நிலைபரம் போட்ட, "நினைத்து நினைத்துப் பார்த்தேன் ", '7G, ரெயின் போ கொலனி' படப் பாடலுக்கு அவ்வளவு அமோகமான வரவேற்பு, எல்லாரும் பாதிக்கப்பட்ட மக்கள் தான் போல.ஒரு கட்டத்தில் என்னுடைய நிலைத்தகவலை என்னுடைய பாதுகாப்புக் காரணமாக இரகசிய பாதுகாப்புச் சட்டத்தில் மறைக்க வேண்டியதாய்ப் போச்சு. அதற்குப் பிறகு நிறைய நண்பர்கள் அதனுடைய இசைக் கோர்வை வடிவத்தை முடிந்தால்த் தரும்படி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்கள், [ அவை யாருக்கும் அதை நான் தருவதாக பதில் அனுப்பவே இல்லை எண்டது வேற கதை ] இந்தப் பாடலை நான் கீ போர்ட்டில் வாசித்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாக இருக்கும், இசை வடிவத்தில் வாசிக்கவே கூடாது என்று இறுக்கமாக வைத்திருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. கடைசியாக நண்பி ஒருத்தியின் பிறந்த நாள் வைபவத்தில் வாசித்து, எல்லோருடைய "மூட்" டையும் மாத்தி விட்டதாக ஞாபகம். நண்பிகள் நிறையப் பேர் வீட்டுக்...