Skip to main content

Posts

Showing posts with the label அப்பா

அப்பா, நீங்கள் கையாலாகாதவரா?

இரண்டு கலைகளை ஒன்றாக நேசிப்பதையிட்டு, ஒன்றுக்கு நிறம் பூசுதலையும், இன்னொன்றுக்கு நிறம் மக்கி விடுதலையும் பிரிவினையாகக் கொண்டிருக்கிறேன். இரு தெரிவுகளையும்  பல் தேர்வுக்கோட்டு வினாவைப் போல் நன்னாங்கு விடைகளை கொடுத்து தெரிவு செய்கிறேன். விடைப்பரப்பு தெளிவில்லாது போகுமானால், குதிரையோடுதலையும் வழக்கமாகக் கொள்வேன். தேடலுக்கு அப்பால் உள்ள புண்ணிய நதிக்கரையில் எனது கலைகளது தெரிவுகள் விரிந்துகொண்டிருந்தது. அப்பா ! திருத்த முடியாத உங்கள்  மகள் கனவுகளில் இருந்து  மீளப் படக் கூடியவள் என்று எப்போதாவது நினைக்கிறீர்களா? பூமியின் நடுவே தொலைந்து போன சிறிய மின்கம்பிகளைப் பரிசோதிக்கப் போவதாய் உங்கள் கடைசி மகள் கூறிக் கொண்டு ஆய்வுகூடமொன்றை சொந்தமாய் அமைக்கையில் நீங்கள் ஏன் தடுக்கவில்லை ?  விஞ்ஞானிக் குழந்தையொன்றைப் பெற்றெடுத்த சந்தோசத்திலிருந்து அப்போதெல்லாம் நீங்கள் மீளவில்லையா? எனது பிறப்பிலிருந்த கயமையை நான் உதாசீனப்படுத்தக் கூடாதென்று நினைத்தீர்களா? பாய்மரக் கப்பல்களைப் பின்னிக் கொண்டு நான் கடல் கடந்து போவேன் என்று சொன்ன போ...

அப்பா சொல்லித்தந்த இசை....

         நீண்ட நாட்களுக்குப் பிறகு வித்தியாசமானதொன்றைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளவேண்டிய ஆசை எழுந்தது.ஆசைகள் எழுவது பற்றி எனக்குக் கூறுவதற்கு எந்தவிதமான தன்னிலைவாதமும் இல்லாவிட்டாலும், எழுந்தமானமான ஆசைகள் பற்றி நினைக்கையில் ஒரு வகையில் சிறு புன்னகையும் எழும். நேரம், அது விட்டுச்செல்லும் இடைவெளிகள்,காலம், அது பதிந்து போன தடயங்கள் இவை எல்லாம் சார்ந்ததாக மனிதனது தேடல்களும், தேவைகளும் நீண்டு கொண்டும், குறுகிக் கொண்டும் போகும். நான் தற்போது தத்துவார்த்தமான சூழ்நிலை பற்றி கிஞ்சித்தும் கதைக்கக் கூடாதென்ற நிலையில் இருக்கிறேன். ஆனமான நினைவு கூறத்தக்க மனோபாவங்கள் ரம்மியமாக இருந்த பொழுதுகளிலான இசையுடன் என் பயணங்கள் பற்றிக் கதைக்கலாம் என்றிருக்கிறேன்.  இசை, இசை ......இசை பட வாழ்ந்த என் நாட்கள் பற்றிக் கதைக்கப் போனால் நிறைய ...இசை என்பது ஓவ்வோருவருக்கும் ஒரு பிரயத்தனம். ஒரு அழகிய மொழி, பேசப்படுதலுக்கும் ,உணரப்படுதளுக்குமிடையேயான புரிதல், சந்தம், ஓசைகளின் கலவை, இன்னும் பிற பிற... என்னைப் பொறுத்தவரை நிகழ்வுகளி...