அண்மையில் பரவி வரும் பெண் வெறுப்பு நோய் சம்பந்தமானது, பெண்கள் மீதான இயலாமையை நினைத்துக் குமுறிக் குமுறி எல்லா இடங்களிலும் தமது தலையை பிய்த்துக்கொள்வதும், தாங்கொணா வயிற்றுளைவில் குடலேறிக் கிடப்பவர்களையும் பார்க்க முடிகிறது. மிக நல்லது.மீண்டும் மீண்டும் உங்களது நிலைப்பாட்டினை அருவருப்பு சார்ந்ததாகவே நிரூபித்து வருகிறீர்கள். நீங்கள் நிரூபிக்கவும் தேவையில்லை, உங்களது இயல்பான குணாதிசயங்கள் அதுவாகவே வெளிவருகின்றது. எங்களுக்கு இது வேடிக்கையின்றி ஒரு பொருட் டும் இல்லை. பெண்ணுடலை மோப்பம்பிடித்துப் பார்க்கிற பாலியல் வறுமையும், வசை வறுமையும் கொண்ட கூட்டங்களே, எழுத்தையும், திறன்பாட்டினையும் கூட உங்களால் அதைத்தாண்டிப் பார்க்க முடியவில்லை. உங்கள் மன நோய்களுக்கு தக்க மருந்தினை உங்கள் வயதான காலங்களில் உங்களிடம் தர வேண்டாமே என்று பார்க்கிறேன். எனக்குத்தெரிந்து எந்தப் பெண்ணும் பிச்சை வாங்கிப் புத்தகம் வெளியிடுவதில்லை. எந்த ஆணினுடைய கையாலாகாததனத்தையும் பார்த்துப் பயந்ததும் இல்லை ;இந்தளவு நோய்க்கூறும் இனங்காணப்படவில்லை. பெண்ணியலாளர்கள் , பெண் எழுத்தாளர்...