Skip to main content

Posts

Showing posts with the label எஞ்சாமி

எஞ்சாமி நீயி எப்ப வருவ?...

ஒண்ணுமே சொல்லாம போன எஞ்சாமி ! குத்தமொன்னு சொல்ல- குமுறியழ நீங்க இல்ல- ஒன்னுக்கு ஒண்ணா உசிரா வளத்துப்புட்டேன்-  உக்காந்து தேத்திவிட -நீங்க இல்ல எஞ்சாமி ! இவ கிடக்கா சிறுக்கியின்னு இம்புட்டும் இரங்காம- விறைப்பா நீரு, வில்லங்கமாப் போனீரு, கண்ணுக்குள்ள நீரு வரப்பத் தாண்டுது-  ஆத்தில தண்ணி அடிச்சிகிட்டு ஓடுது- எருக்கம் வித கையிருக்கு- அரளி வித அரைச்சிருக்கு-  எஞ்சாமி நீயி எப்ப வருவ?........... ஒத்தையில நட்டு வெச்ச மரம் போல வாடி நிக்கேன்- வாடிய பயிருக்கு வாழ கொஞ்சம் பச்சை கொடு. கத்தியில கட்டி வெச்ச  காய் போல காஞ்சிருக்கு- காயெல்லாம் தேஞ்சு என் வாய் போல பொளந்திருக்கு- வேணாஞ்சாமி நான் உன்னைக் குறை சொல்ல எல்லாத் தப்பும் எம்மெல்ல எஞ்சாமீ- குடை பிடிச்சு இங்காரும்  நெய் விளக்கு  ஏத்துவாரோ? கோடியில யாரும் கொடி வெச்சு தூத்துவாரோ ? ஐப்பசியில் மழை பேஞ்சு ஆவணியில் காத்தடிச்சா சித்திரையில், செங்கரும்பு சீனிபோல தித்திக்கும்முன்னு, ஒத்தையில போன எறும்புகளைப் புடிச்சி வெச்சி- ஒத்தடம் கொடுத்த...