மண்ணில் வாழ்மின்னு அலகில்சீர் வன்னிலங்கை பொன்போல் மன்னும் மனு நீதி கண்ணும் திரை சேரும் கலையது திருந்தோதி முறையது வாழ்ந்த பலர். முன்னுமில்லையது கேளா செங்கதிரோன் வெடித்தான் பகட் போது வடவைதான் முகம் புலர்ந்து குவலயம் பண்ணி-சோலையிட் சிறப்புற. கண்ணும் கட் பட்டு,பாதகம் பழந்தமிழ் மறைமொழியும் சிதறி-கனியற்றரறு போல மலர்மகள் பொங்கு கங்கு ஊடு போகி தொலைந்தனள் உயிர் பதைக்க. வெங்குமில்லையது போல் பழி பாவம் பொருளில்லார் போருள்கொண்டார் பொருளற்று போதுமின் முன் பொருளோ பொருளாகி உயிர் போதும் நிலையறவாய். அவைகுலைந்து சபை சரிந்து மறுமை நீதியோழிந்து கடைவாசல் மாய்தலெனும் பேருண்மை கொண்டு நட்கனவு கண்டாரை நமன் கொண்டனனே. துயர் மிகு மாந்தர் துடிப்பதுவுமிறை பொறுக்க செவியற்றோ கிடந்தவன் கோபுரஞ்சரிய கல்லெனக்கிடந்தவன் மணிமுடிதரித்தவன் மண்ணேயானான். பின் முன் வந்தவன் கேடு புரிந்தான் ஈகாடு ஆகாடு சாகாடு பூகாடு ஒன்றே போகாது போகாது பாவாது வந்த கொலைன்ஞனின் அறம்பாடி. பக்கமும் துக்கமும் நீருரூக்கொண்டதெந்தாகாரமும் இவ்வளவில் நீளும் நெடு...