Skip to main content

Posts

Showing posts with the label புரட்சி

ஏனெனில் இதுவே உலகம் முடிந்த இடம்

நாம் கைகள் உயர்த்தி எழும்ப வேண்டும். காசுக்கு விற்க இயலாத இந்த நீண்ட காலக் காத்திருப்பின் அவசியம் பற்றி நிரம்பி வழிகிற பசுமையான நேர்கோட்டின் வீழ்ச்சியில்- வாயைக் காதுகள் மறைக்கும் போது, உரக்கச் சொல்ல வேண்டும். சிறப்பான தருணத்தில் மட்டுமே சிரிக்கும், வெகு சராசரியான பற்களை, நீவி விடவ விட வேண்டும். இன்பம் நிகழுவதாயும் துன்பம் நேருவதாயும் ஏனென்று யோசித்து ஊக்கமற்றதாக்கும் இரண்டு வேறு நடப்புக்கள் இருப்பதை - குழந்தையொன்று கருவிலே வீற்றிருப்பதைப் போல நிச்சயமற்றதாக உணர வேண்டும். அந்நிச்சயமற்ற குழந்தையும் கலைந்து , இன்பமானதல்லாத அதன் இறப்பை நேசிக்கையில், அதை நான் வென்று விடுவேன். இன்னமும் பிறக்காத அதன் கண்களுக்கு உம்முடைய புரட்சியெனும் பொய்யை உரைப்பேன். நீர், எனது சொற்களைக் கூர்ந்து கவனிப்பதால் அவை உமது கொலைகளை நியாயப்படுத்தும் என்றில்லை; உலகில் எல்லாமே ஒரு ஒழுங்கில் உள்ளதென்பதும் தவறு ! தயவு செய்து திருந்தாது இருங்கள் - அதன் பின்பு புது வாழ்வு எழும். ஏனெனில் இதுவே உலகம் முடிந்த இடம். -நிலா