ருக்மால் செனவிரெத்தின ஆகிய கணவனும் துலாஞ்சலி பியுமிகா வன்னப்புகே ஹிமேஷ் ருக்மால் செனவிரெத்தின ஆகிய மனைவியும்.... இ ண்டைக்குக் காலமை நடந்த நிசக் கதை, , தொழில் நிமித்தமா அலுவலகத்தில் (வருசத்தில ஒரு நாள்த் தான் தொழிலுக்கே போறது, அதில தொழில் நிமித்தமா வேறயா எண்டு கேக்கப்படாது ) மனைவி -கணவன் இருவருக்கும் விவாக இரத்துக்கான கவுன்சிலிங் வழங்க வேண்டி இருந்தது. அவர்கள் தம்பதிகளாகி ஏழு வருடம். இவ்வளா காலமும் எப்பிடி ஒண்டாக் குப்பை கொட்டினாங்களோ எண்டு மூக்கில விரல் வைக்கிரளவுக்கு அலுவலக அறைக்குள் நுழையும் போது சென்சார் செய்யப்பட வேண்டிய வார்த்தைகளோடு வந்து சேர்ந்தீச்சினம். சில வார்த்தைகள் எங்கையோ எனக்குக் கேட்டாப் போல இருந்தாலும் சரியா விபரம் அறிய முடியேல்ல, எனக்கொரு நண்பர் இருக்கிறார்,சென்சார் வார்த்தைகளில வல்லவர் ; இனிமேல், ஏதாவது கிரகக் கோளாரில அவரோட கதைக்க முடியிற போது , அவரிட்டைக் கேட்டால்ச் சொல்லுவேர் என்று அவற்றைக் கண்டும் காணாததுமாகக் குறிப்பெடுத்து வைப்பமா எண்டு யோசிக்கிறதுக்குள்ள , ரெண்டு ...