Skip to main content

Posts

Showing posts with the label தேவதேவன்

ஓசைஒலியெலாம் ஆனாய் நீயே........

இது ஒரு பதில்க்கவிதை ; அவ்வளவு  விளக்கம் இப்போதைக்குக்  காணும் என்ன ? ;)   பிரஜாப சங்கல்பத் தீயினின்றும்  எழுந்து வருகிறது-எனக்கான கீதம். ஆழமான லோகத்தின் ஜென்ம அதரங்களிலிருந்து சாபத்தின் சன்னல் வழியே எழுகிறது-அது, மந்தமான சாத்தானின் பிடியிலிருந்து அதர்மத்தின் இழைகளில் பயணிக்கும் என்னை, ஆலகால விடத்தினின்றும் அருட்சிக்கப்பட்டு நிருதூழியமான-எனது நனவிலி மனதுடன் உரையாடல் வைக்கிறது. தேவதேவனின் குமிழிகளுக்குள் ஒளிந்திருக்கின்ற காலச்சக்கரம்  எந்திரம் போல சுழழுகிறது- இது  ஏந்திழை சம்பந்தமானது. சதசித்து சம்மந்தமாக –ஒரு சச்சிதானந்த பிம்பம் தொடருகின்றது- நெடுநாளாய், அது  நித்திய கைங்கூலியத்திலிருந்து ஈடேற்றமற்ற எனதான்மாவைப்பிளக்கிறது.- அதற்குள்,  நியமம் தவறாத அகிற்புகை கிளம்புகிறது- உன் இசை சம்பந்தமாக....... சவரிக்கப்படாத என் அந்தங்களில் மோட்ச நிருவாணம் உணர்த்தப்படுகிறது! அதீதத்தின் அதீதமே, தேவ தேவா – உன் இரட்சிப்பு  எத்துனை ஆகாம்மியமானது? ரஸமானது? இன்னல் தரும் உன் இசை...