கொழும்பு தேசிய கலை இலக்கியப் பேரவையின் கடந்த மார்ச் மாதப் (2012) பாடிப்பறை நிகழ்வில் செய்யப்பட்ட இரண்டு கவிதைகளைப்பற்றிய நயப்பு இது. தோராயமாக நினைவில்லைஎன்றாலும், ஒரு குத்துமதிப்பாகப் பதிந்திருக்கிறேன். பலர் இது Remarkable என்றார்கள். அப்பிடியென்ன இருக்கெண்டு ஆவணப்படுத்திப் பாப்பமே எண்டு தான், வேற ஒண்டுமும் இல்லை :) இரண்டு கவிதைகளைப் பற்றி நயக்கச் சொன்னார்கள். என்னுடைய முதலாவது தேர்வு சில்வியா பிளாத்தினுடைய Resolve என்கிற அமெரிக்கக் கவிதை. அதை நான் தமிழ்ப் படுத்தியிருக்கிறேன், ஒருஉத்தேசத்துக்காக இரு மொழியிலயும் தரலாம் எண்டு இருக்கிறன். முதல்ல கவிஞரைப் பற்றிச் சொல்ல வேணும், சில்வியா பிளாத் (Sylvia Plath, 1932 -1963 ) ஒரு அமெரிக்கப் பெண் கவிஞர், புதின மற்றும் சிறுகதை எழுத்தாளர். எழுத்தாளராக புகழ் பெற்ற பின்னால் தனது சக கவிஞரான டேட் ஹியூக்சை மணந்தார். உளச் சோர்வினால் நெடுநாட்கள் பாதிக்கப்பட்டிருந்த பிளாத் தன் கணவரை பிரிந்து சில ஆண்டுகள் வாழ்ந்தார். 1963ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது வாழ்வு மற்றும...