Skip to main content

Posts

Showing posts with the label கடவுள்

மரபழிந்த ஓவியங்களும் , முரணான என் கவிதைகளும்...

                       வெளிச்சம் குறைவாய்......              காலை நேர  கைசிகப் பண்ணினது நாதத்தில், மல்லிகை இதழ்கள் விரிகின்றது தேனின் திரவியத்தை சுமந்து கொண்டு, யாகாவாரினும் நாகாக்க- நான் தவறியதால் சயங்கொள்ள முடியவில்லை. சாய்மனையில் இருக்கின்றேன் எதுவும் இயலாதபடிக்கு..., விமோச்சனப் பலன் காண கௌளீயைத் தேடினேன் - இல்லையது என் முகட்டிலே . விட்டத்திற்கு வேறுபட்டதாய் நிற்கிறது - கூரையின் தாவாரம். தாவர சங்கமங்களை எல்லாம் தாரை வார்த்ததட்குப் பின்னும் மண்ணும் ,மழையும் ,மடுவும் கூடிய சங்கமமொன்று தேவையாய் இருக்கிறது. முதுமையின் பலம் , சாவுக்கு அந்தம் பிடிக்கிறதா ? தெரு முனையிலிருக்கின்ற நாய்க்குத் தெரிகிறது - என் சாவின் ஜனனம் -அது ஊளை செய்து நமனை எதிர் கொள்கிறது , சில காலமாய்..... பழுத்த இலையின் இருப்பு எத்தனை காலம் ? சவங்காவிகளுக்கா பஞ்சம் இங்கு......? காலை நேரம் - நியமம் தவறாமல் கைசிகப் பண் ...