Skip to main content

Posts

Showing posts with the label மொழி

Sri Lanka, Beginning of Ethnic Conflict and State Language Implementation. Part-2

      BEGINNING OF  ETHNIC CONFLICT IN SRI LANKA  -Part 2  அரசகரும மொழியாக்கம் மற்றும் இலங்கை இனப்பிரச்சினைக்கான ஆரம்பம் .  1948 இல் ஏற்பட்ட அரசியல் மாற்றமானது இலங்கையின் மொழிக் கொள்கையில்  ஏற்படுத்திய மாற்றங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இனப்பிரச்சினையை உண்டு பண்ணின. 1956இல் திரு. பண்டார நாயகம் அவர்களது  ஐக்கிய மக்கள் முன்னணி ஆட்சி பீடம் ஏறியது. ஆட்சிக்கு வந்து 24மணி நேரத்தில் சிங்களம் அரசகரும ,நிர்வாக மொழியாக மாற்றப்படும் என்ற கோரிக்கையுடனேயே அரசு பதவிக்கு வந்தது. சிங்கள மக்களைப் பொறுத்த வரையில் அது ஒரு சிறப்பான நடவடிக்கையாயும் தேர்தல் வாக்கு மூலம் நிறைவேற்றப்படும் உன்னதமான தருணமாயும் இருந்தது .      ஆனால் தமிழ் மொழிக்கு, மக்களுக்கு, அரசினது கடப்பாடு  இல்லாத இச் செயல்  இனவாதத்தை மேலும் அதிகரிக்கும் செயலாக  அமைந்தது. சிங்கள மொழி அரச கரும  மொழியாக்கப் பட்டதன் காரணமாக பல தமிழ் அரச ஊழியர்கள் ஓய்வு பெற நிர்ப்பந்திக்கப் பட்டனர். பலர் வெளி நாடுகளுக்கு வேலை வாய்ப்பு...

Sri Lanka, Beginning of Ethnic Conflict and State Language Implementation. Part-1

      அரசகரும மொழியாக்கம் மற்றும் இலங்கை இனப்பிரச்சினைக்கான ஆரம்பம்.   மொழியானது தொடர்பாடலுக்கும் அறிவைப் பெருக்குதலுக்குமான  ஒரு கருவியாகும். ஒரு நாட்டில் வாழும் மக்களின் பிரதானமான தொடர்பாடல் மையம் மொழி, அது பெரும்பான்மை, சிறுபான்மை  இரு சாராருக்கும் பொதுவானதே. இருப்பினும் பொது வழக்கில் அரச  கரும மொழியாக தத்தமது   சுய   மொழிப் இருப்பது குறித்ததே இன்றைய அச்சம்.  '' உங்களுக்கு இரு மொழியுடனான தேசமா? அல்லது ஒரு மொழியுடனான இரு தேசங்களா வேண்டும் ? எமது நாட்டின் சுதந்திரத்திற்கும் அதன் உட்கூறுகளின் ஒற்றுமைக்கும் ஆனா  வழி,  சமத்துவம் என்றே நம்புகிறோம் . இல்லையென்றால், ஒரு சிறிய நாட்டிலிருந்து இரத்தம் சொட்டுகின்ற துண்டாகிப் போன இரு நாடுகள் தோன்றும் -'' இலங்கையின் தேசிய மொழியாக சிங்கள மொழி மட்டும் என்று சட்டம் -1956நிறைவேறிய போது கலாநிதி கொல்வின் ஆர் டீ சில்வா தெரிவித்தது . இன்றும் இதுவே நாட்டில் இரு மொழி அமுலாக்கம் என்றவுடன் ஞாபகத்திற்கு வருகிறது.    ...