Skip to main content

Posts

Showing posts with the label Mocking Bird Song

Lullaby for you இரண்டோ மூன்றோ கடைசித் தாலாட்டுக்கள் ....

தாலாட்டு என்பது எல்லா நாகரீகத்தினதும் மிக அடிப்படையான வளர்ச்சியையும்,எல்லாக்கலாசார மக்களதும் உருவகங்களைக் காட்டக் கூடிய மிகச் சிறிய பொக்கிஷம். தமிழிலே எழுந்த இயல்பான தாலாட்டுப் பாடல்கள் வாய் மொழியூடாக சொலவடைகளை இணைத்து எழுந்தவை. ஆங்கிலத்திலும், பிரெஞ்சு மற்றும் பாரசீய மொழிகளிலும் அவ்வாறே ஆயினும் அங்கு தொட்டில்ப் பாடல்கள் என்று ஆங்கில ஆக்கத்தில் அழைக்கப் படும் இவற்றை எழுதிய,இசைவடிவமைத்தவர்களைப் பற்றிய குறிப்புக்களை சேகரித்து வைத்திருக்கிறார்கள். எங்களுக்கு பிற்கால  பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் எழுந்த குழந்தைப் பாடல்களுக்கு மட்டுமே அதற்கான ஒரு சில ஆதாரங்கள் இருக்கின்றன. ஐரோப்பிய, இலத்தீன் அமெரிக்க, கிழக்குப் பிராந்தியங்களில் இவாறான தகவல்கள்  ஏராளமாக நூற்றாண்டு வரிசைப்படிக் களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கின்றன.  ஒரு நாகரிக சமுகத்தின் வளர்ச்சி நிலையாக தாலாட்டுப் பாடல்களைக் கொள்ளுவதே பொருத்தமானதாகும். எவ்வளவோ காலங்களுக்குப் பின் தாலாட்டுப் பாடல்கள் பற்றி தேவையற்ற  எண்ணக்கரு இன்றைய காலையில் விரிவுரையில் இருக்கும் போது  ஒரு வித்தியாசமான மனநிலையில் வ...