இருபத்தியோராம் நூற்றாண்டின் உலகப்போர் நீருக்காக நிகழும் சாத்தியங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளார்கள். ஏற்கனவே சிரியாவில் கடந்த ஆறேழு வருடங்களாக தண்ணீருக்கான யுத்தம் நிகழ்ந்து இலச்சக்கணக்கான மனித உயிர்கள் மரணங்களில் முடிந்தது. இப்போது இலங்கையில். பெருமாட்டி பஞ்சாயத்து வட்டப் பிளாச்சிமோடாவில் கோக்காகோலா, நிலத்தடித் தண்ணீரை அண்மையில் உறிஞ்சி, அம்மாவட்ட மக்களால் போராட்டத்தை எதிர்கொண்டது. வாரணாசிக்கு அருகே உள்ள மேஹ்டிகஞ்சில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கோலா நிறுவனத்தை மூட வேண்டி ஏற்பட்டது. தற்போது, தரமான குடிநீர் கேட்டுக் கிளர்ந்து திரண்ட மக்களை அரசாங்கம் ராணுவம் மூலம் அத்துமீறச்செய்து மக்களை முடக்கிப் போட்டது. பொது மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டது. இருவர் கொல்லப்பட்டனர். தமான குடிநீர் கேட்டுத் திரண்டு நின்ற கம்பஹா மாவட்ட வெலிவேரிய ரதுபஸ் ஹெலவில் சிங்கள மக்களுக்கே அரசாங்கம் தனது ஏகாதிபத்திய ஆதிக்கத்தைக் காட்டியுள்ளது. கம்பஹாவில் உள்ள தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய கழிவு நீரானது,அம்மாவட்ட நீர் நிலைகளில் நேரடியாகக் கலந்துள்ளதால், ...