இருபத்தியோராம் நூற்றாண்டின் உலகப்போர் நீருக்காக நிகழும் சாத்தியங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளார்கள். ஏற்கனவே சிரியாவில் கடந்த ஆறேழு வருடங்களாக தண்ணீருக்கான யுத்தம் நிகழ்ந்து இலச்சக்கணக்கான மனித உயிர்கள் மரணங்களில் முடிந்தது. இப்போது இலங்கையில்.
பெருமாட்டி பஞ்சாயத்து வட்டப் பிளாச்சிமோடாவில் கோக்காகோலா, நிலத்தடித் தண்ணீரை அண்மையில் உறிஞ்சி, அம்மாவட்ட மக்களால் போராட்டத்தை எதிர்கொண்டது. வாரணாசிக்கு அருகே உள்ள மேஹ்டிகஞ்சில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கோலா நிறுவனத்தை மூட வேண்டி ஏற்பட்டது.
தற்போது, தரமான குடிநீர் கேட்டுக் கிளர்ந்து திரண்ட மக்களை அரசாங்கம் ராணுவம் மூலம் அத்துமீறச்செய்து மக்களை முடக்கிப் போட்டது. பொது மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டது. இருவர் கொல்லப்பட்டனர்.
தமான குடிநீர் கேட்டுத் திரண்டு நின்ற கம்பஹா மாவட்ட வெலிவேரிய ரதுபஸ் ஹெலவில் சிங்கள மக்களுக்கே அரசாங்கம் தனது ஏகாதிபத்திய ஆதிக்கத்தைக் காட்டியுள்ளது. கம்பஹாவில் உள்ள தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய கழிவு நீரானது,அம்மாவட்ட நீர் நிலைகளில் நேரடியாகக் கலந்துள்ளதால், அப்பகுதி மக்களின் நீர்ப்புழக்கம் கேள்விக்குறியாகியுள்ளது. சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நீர் நிலைகளும், வீட்டுப்பாவனைக் கிணறுகளும் அப்பகுதியில் புழக்கத்துக்குத் தோதில்லாததாக மாறியிருக்கிறது. கிணற்று நீர், பிரதேச சுகாதார ஆணையாளரால் பரிசோதிக்கப்பட்டு மாசடைந்து பயன்பாட்டுக்கு உகந்ததில்லை என்று சுகாதாரப்பத்திரம் வழங்கப்பட்டது.
வழமைபோல இடதுசாரிகளையும்,அம்மாவட்ட மக்களையும் தவிர எந்தவொரு பெரு வணிக நிறுவனமோ, அரசியல் ஆதரவாளர்களோ இதில் தலையிடவில்லை. ஆனால் ஸ்ரீ தம்ம தேரர் சாகும் வரை மக்களது போராட்டம் தொடங்கிய நாளில் இருந்து உண்ணாவிரதமிருந்தார். இவரது குரலும் பின்னடைந்தது.
ஏற்க்கனவே மாவிலாறு அணைக்கட்டில் தொடங்கிய வடக்கு யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை குருதியோடி அணைந்தது. இப்போது கம்பஹாவில்.
வடக்கிற்கும், தெற்கிற்கும் வெவ்வேறான நீர்த்தன்மைகள்,வெவ்வேறான அரசியல் என்று இதனை எந்தவகையிலும் தமக்கொண்ணாதவொன்றாக மக்கள் பார்ப்பார்களாயின் குஷ்டம் தான். மக்கள் பற்றிய பிரக்ஞையற்ற ஏகாதிபத்திய நாடொன்றில் மக்களின் தேவை அனைவருமே ஏதிலி தான்.
நிலா லோகநாதன்
2013
Comments
Post a Comment