வாசவதத்தை, பகவானே உங்கள் கோமள ஹிருதயத்தை திறந்து காட்டியமைக்காக நன்றிகள்.... வாசவதத்தை, என் ஹிருதயத்தில் கோமளத்தின் பரிசுத்தம் இருப்பதைப் போல் அதி உன்னதமான அபிமானமும் உன்மேல் இருக்கின்றது...... சுவாமி, அபிமானம் அசூசைப்படக்கூடியதல்லவே .... வாசவதத்தை உனக்குத் தெளிவில்லை...! பகவான், நான் இப்போது தான் தெளிந்த நதிப்பிரவகம் போலே இருக்கிறேன். எனக்கு எல்லாமுமே ஸ்பஷ்டமாகத் தோதாகத் தெரிகின்றது...., நான் என்ன சொல்லவருகிறேன் என்றால்...., போதும் சுவாமி, எனக்குப் புரிகின்றது.தம்சக்பதுவத்தையும், தர்மொபதேசத்தையும் விரைவாகக் கூற ஆரம்பியுங்கள். எனக்கு ஞானம் வேண்டும்! வாசவதத்தை, இப்போதும் காருண்யம் பற்றித்தான் சொல்லப் போகிறேன். என்னை வதைக்காதே ...! -நிலா