வானத்தின் வசந்தத்தை யாரோ விடுத்துச் சென்ற படகில், மகாவலி ஓடிக் கொண்டிருந்தது. அதன் மருங்கில் கிளைத்த மரங்களை வீடு கட்டிக் கொண்டிருக்கும் குச்சு வீடுகளை வாழ்தலின் உச்ச இடமாக நான் கனவுகண்டுகொண்டிருந்தேன். வாரி இறைக்கும் மணல் டக்ற்றறொன்றில் பணி புரிபவளாக இருக்க விரும்பினேன். நதியின் புல் முளைத்த திட்டுக்களில் கங்கூன் அரியும் பெண்ணாக இருக்க என்னை மிகவும் நேசித்தேன் ஒரு கோடை காலத்தில் காய்ந்து கிடந்த மகாவலியின் சொறிச் சிரங்கை கைகளால் பிளந்து விட்டுக் கொண்டே கற்கள் கடைந்து இரத்தினக்கல் பொறுக்கிக் கொள்ளவும், பொழிதல் ஓய்ந்த ஆற்றுப்படுக்கையில் 'சாயிலா' போல நீந்திக் கொண்டு போகவும் ஆசைப்பட்டேன் ஒ..சாயிலா... எனக்கு நீச்சல் சொல்லித் தந்தவள்... அவளுக்கு நீண்ட கூந்தல்... மகாவலியின் நீளத்தில் பாதி இருப்பதாக பீற்றிக் கொண்டாள் ! கூந்தலின் தேவை பற்றி அறிந்திராத எனக்கு, ஒரு பெடியனைப் போல இருப்பது சவுகரியமாகவிருந்தது, இருப்பினும் சாயிலா நீண்ட கூந்தலுடைய ஒரு முசுலீம் பெண் ! சாயிலா... நீச்சல்க் காரி சாயிலா போல் நீந்துவது கடினம் ! சாயிலா போ...