முன்னமொரு சகுனிகள் முடிந்து வைத்த கதைகள் பல பின்னையொரு பொழுதிலே பேச்சவிழ்ந்த கதைகள் பல மன்னுமொரு காதல் மருந்தடித்த கதைகள் பல மாட்டிவைத்த அவன் கதையை மாய்ந்து மாய்ந்து- உரைத்தன பல என்னையொரு நாளில் நீ அடித்துரைத்த கதையும் பல ஏக்கமொருநாளில் ஏங்கி வழிந்த கதையும் பல தோற்க வழியின்றி என்னைத் தோற்பித்த கதையும் பல தாக்க வழியின்றி எனைத் தகர்ப்பித்த கதையும் பல இருட்டிளுந்தன் பேர்தனை இடித்துரைத்த கதைகள் பல இன்னுமின்னும் இங்கிதமில்லாப் பங்கமும் பல கதை அழுக்கு என்று ஆர்ப்பரித்த ஆயிரங்கதை அன்றொருநாள் சொல்லிச் சொல்லி அழுத கதை பாடிப் பரவசம் காண முனைந்த பல கதை, பாடு பொருள் மட்டும் மாறாத பரிதவிப்பும் ஒரு கதை நாடி ஓடி வருங்கனவில் நான் நலிந்து போனதும் ஒரு கதை தேடி இனிதேடி தேய்ந்து போனதும் தொடர...