உ யிரியல் ரீதியாக இப்பிரபஞ்சத்தில் ஆண் பெண், இடை நிலைப்பாலினர் என மூவகைப் பாலினம் மனிதர்கள் எனும் இனப்பிரிவில் காணப்படுகின்றது. [இனம் என்பது, ஒரே குறிப்பிட்ட நிலப்பரப்பில் பொதுவான பண்பாட்டுடன் வாழக்கூடிய பொது இயல்புடையவை ] இந்த மூவகையில் ஆண் , பெண் எனும் இரண்டு பாலினங்கள் மனித உலகின் இனவிருத்திக்கும்,அவற்றின் நிலவுகைக்கும் ஆதாரமாயுள்ளதால் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. இவை இரண்டும் இயல்பாகவே ஒன்றை ஒன்று ஆக்கிரமிக்கவும், ஒன்றை ஒன்று ஆதரிக்கவும் வார்ப்புப் பெற்றவை. ஆண் மட்டும் உள்ள ஓர் சமூகத்தை கற்பனை பண்ணிப் பார்க்கையில் சமுகத்தில், பெண் அமர்த்தப்பட்டுள்ள இடமும், பெண் மட்டுமே உள்ள சமூகத்தைக் கற்பனை பண்ணிப் பார்க்கையில் ஆணின் சமூக...