நீண்ட நாட்களுக்குப் பிறகு வித்தியாசமானதொன்றைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளவேண்டிய ஆசை எழுந்தது.ஆசைகள் எழுவது பற்றி எனக்குக் கூறுவதற்கு எந்தவிதமான தன்னிலைவாதமும் இல்லாவிட்டாலும், எழுந்தமானமான ஆசைகள் பற்றி நினைக்கையில் ஒரு வகையில் சிறு புன்னகையும் எழும். நேரம், அது விட்டுச்செல்லும் இடைவெளிகள்,காலம், அது பதிந்து போன தடயங்கள் இவை எல்லாம் சார்ந்ததாக மனிதனது தேடல்களும், தேவைகளும் நீண்டு கொண்டும், குறுகிக் கொண்டும் போகும். நான் தற்போது தத்துவார்த்தமான சூழ்நிலை பற்றி கிஞ்சித்தும் கதைக்கக் கூடாதென்ற நிலையில் இருக்கிறேன். ஆனமான நினைவு கூறத்தக்க மனோபாவங்கள் ரம்மியமாக இருந்த பொழுதுகளிலான இசையுடன் என் பயணங்கள் பற்றிக் கதைக்கலாம் என்றிருக்கிறேன். இசை, இசை ......இசை பட வாழ்ந்த என் நாட்கள் பற்றிக் கதைக்கப் போனால் நிறைய ...இசை என்பது ஓவ்வோருவருக்கும் ஒரு பிரயத்தனம். ஒரு அழகிய மொழி, பேசப்படுதலுக்கும் ,உணரப்படுதளுக்குமிடையேயான புரிதல், சந்தம், ஓசைகளின் கலவை, இன்னும் பிற பிற... என்னைப் பொறுத்தவரை நிகழ்வுகளி...