எனக்கும் நிலவறைக்குமான நெருக்கம்- பூமிக்கும் அதன் பிளவணுக்களுக்குமான தூரத்திலும் குறுகி விட்டது- பல காலம் மலர்ந்த நீலோட்பலத்தின், நெடுஞ்சாண் கிடை நிலை -இன்றைக்கு ஆகாமியமாயச் சரிந்தொழிகின்றது- எனக்குமிருக்கின்றது- வேதனையின் பிரதி பிம்பம். நெடுகாலத் தபோவனச் சாயலின் நிழல்- தபஸ்வியாக என்னை சயனிக்கக் கூறியது. ஹம்..... பெரு நாட்களின் கணக்குப் படி, தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும் நானாகிய ஆணவம். இருந்தும், மெல்லச் சாவென விடப் படுகிறது- சஞ்சலமான இமை முகத்தால். பெருஞ்சல்லாபத்தின் பேரில் நிருவாணந்தாங்கிய கோளச்சிலைகளை- கட்டியணைக்கிறேன்,- சிலை விலகி ஓடுகிறது. சாலை வண்டிகளுக்கு எனது பெருந்துன்பம் தெரியா... புகை கக்குகிறது எனது மரணந்தாங்கிய நடையில். உருவகங்களில், பேதைமை நிறைந்து, திவலைகளாக உருண்டு நிழல்த்தருக்களுள் ஒழிந்து கொண்டு- அப்பப்பா....ஏகப்பட்ட சேட்டைகள்....! கனவு, மிச்சமிருக்கிறது, அவள் வந்து தண்ணீர்க்குவளை நிறைய, பழச் சோடா ரெப்பிக் கொண்டு குடித்து, ஏப்பம் விடுகிறாள்.- சாம்பசிவக் குருக்கள், அதை தட்டி வி...