எனக்கும் நிலவறைக்குமான
நெருக்கம்-
பூமிக்கும் அதன் பிளவணுக்களுக்குமான
தூரத்திலும் குறுகி விட்டது-
பல காலம் மலர்ந்த நீலோட்பலத்தின்,
நெடுஞ்சாண் கிடை நிலை -இன்றைக்கு
ஆகாமியமாயச் சரிந்தொழிகின்றது-
எனக்குமிருக்கின்றது- வேதனையின்
பிரதி பிம்பம்.
நெடுகாலத் தபோவனச் சாயலின் நிழல்-
தபஸ்வியாக என்னை சயனிக்கக் கூறியது.
ஹம்.....
பெரு நாட்களின் கணக்குப் படி,
தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும் நானாகிய ஆணவம்.
இருந்தும், மெல்லச் சாவென விடப் படுகிறது-
சஞ்சலமான இமை முகத்தால்.
பெருஞ்சல்லாபத்தின் பேரில்
நிருவாணந்தாங்கிய கோளச்சிலைகளை-
கட்டியணைக்கிறேன்,- சிலை விலகி ஓடுகிறது.
சாலை வண்டிகளுக்கு
எனது பெருந்துன்பம் தெரியா...
புகை கக்குகிறது எனது மரணந்தாங்கிய நடையில்.
உருவகங்களில்,
பேதைமை நிறைந்து, திவலைகளாக உருண்டு
நிழல்த்தருக்களுள் ஒழிந்து கொண்டு-
அப்பப்பா....ஏகப்பட்ட சேட்டைகள்....!
கனவு,
மிச்சமிருக்கிறது,
அவள் வந்து தண்ணீர்க்குவளை நிறைய,
பழச் சோடா ரெப்பிக் கொண்டு
குடித்து, ஏப்பம் விடுகிறாள்.-
சாம்பசிவக் குருக்கள், அதை தட்டி விட்டு வேடிக்கை
பார்க்கிறார்.-
எளிய படையலின் எச்சீல்...,ச்சய்க்.....!
விருட்டென, அவள் நடந்து
அறைக்குள் போய்- ஆயாசமாக அழுகிறாள்.
எதைச்சொன்னாலும் கேட்டுக்கொள்ளும்,
தலையணைக் குறிப்புகள்- நள்ளிரவு சொல்கின்றன.
'எனக்கு போயும் போயும்' -
ச்சீய்க் ......!
சுசீலாவுக்கு வருத்தம் நிறைய-
கதைப் புத்தகத்தை பிரித்துப் படிக்கிறாள்-அதில்
கோகுலன், சீத்தம்மாவை-
வீட்டை விட்டு துரத்துகிறான்- அடக் கருமமே..!
சீத்த்ம்மா எங்கே போனாள்...?
சீத்தாம்மா கதவு தட்டினாள்- சுசீலா
வரவேற்றாள்-
கொஞ்சம் குளிர்ச்சியான பழச் சோடா கொடுத்து,
...........................................................................................
தாறு மாறாக புகார்- கோகுலன் பற்றி,
சுசீலா தேற்றினாள்- சாம்பசிவக்குருக்கள் நல்ல(கெட்ட)நித்திரை-
அடடா - சுசீலாவுந்தான்.
எனக்கும் சுசீலாவுக்குமான நெருக்கம்
பூமிப் பிளவுக்கும், நதி தீரத்துக்குமான
அளவையுங் காட்டிலும் சிறிசு-
யதார்த்தமாக சொல்லப் போனால்,
சீத்தம்மாவுக்கும், சுசீலாவுக்கும்
உள்ளதைப் போல...!
கோகுலன் கனவிலே,
சுசீலா, தனியே உறங்கிக் கொண்டிருந்தாள்-
சாம்பசிவக்குருக்களார்- ஒரு ஏறியில் ஏறி
புடலங்காய்க்கு கல்லுக்கட்டிக்கொண்டிருந்தார்.
அடடா, கோகுலன்
கல்லுக் கட்டிக் கொடுத்துதவினான்-
சாம்பசிவக் குருக்களார் மெத்த மகிழ்ச்சி
என்றார்.
எனக்கும் நிலவறைக்குமான நெருக்கம்,
பூமியினதும், படலங்களினதும் நெருக்கத்தையும்
தாண்டி,
சீத்தம்மாவுக்கும், சுசீலாவுக்கும் உள்ளதையும்
தண்டு தாண்டேன்று தாண்டி,
சாம்பு மாமாவுக்கும் எனக்கும் உள்ளதையும்
இன்னோருக்கால் தாண்டீ......,
இறுக்கமாய்க் கிடக்கு.!
இனி,
இனக்கும் எதுவுக்கும் நெருக்கம்
இல்லாமலேயே போச்சு...!
நிலா-
2007
ஓடட்டும்.. ஓடட்டும்..
ReplyDeleteநல்லாருக்குங்க...இன்னும் எழுதுங்க..பொங்கல் நல்வாழ்த்துகள்!
ReplyDeleteநல்ல கவிதை.
ReplyDelete"எளிய படையலின் எச்சீல்"
வரிகள் மனதைக் கனதியாக்குகின்றன.
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
நல்லா இருக்கு அக்கா.. இனிற தைப்பொங்கல் வாழ்த்துக்கள்..;)
ReplyDeleteரசித்தேன், தமிழர் திருநாள் வாழ்த்துகள்
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்துக்கள். சில நாட்களுக்கு என்னை பின்நவீனத்துவப் பதிவுகள் படிக்கவேண்டாம் என டொக்டர் பதிவானாந்தா சொல்லியிருக்கின்றார். ஆகவே அரசியல் எழுதவும்.
ReplyDeleteஇனி,
ReplyDeleteஇனக்கும் எதுவுக்கும் நெருக்கம்
இல்லாமலேயே போச்சு...!
இதுதான் கவிதையின் முற்றிய நிலையா?!
ம்ம்.. நிறையப் புரிகிறது..
ReplyDeleteஓசைக்காக அல்லாமல் அர்த்ததுக்கான இவ்வாறான கவிதைகள் வேண்டும்..
நன்றாக இருக்கிறது