நீ என்ன தேவைக்காக என்னை நோக்கிப் படையெடுத்து வருகிறாய் என்றோ, என்ன தேவைக்காக உன் முரட்டுப் படைகளை என்னிடம் அனுப்புகிறாய் என்றோ நான் இதுவரைக்கும் தெளிந்ததில்லை. இருந்தும் என் தேவை குறித்து உன்னிடம் நான் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். சொல்லப் பட்ட தேவைகளுக்குள் இருந்து தெளிவாக, சொல்லப் படல் எனும் வார்த்தையில் மழுப்பிய வார்த்தைகளை நீ கண்டு பிடித்துத் தருகிறாய். நான் சொல்லாத ஒவ்வொரு வார்த்தையையும் எனக்குள்ளே நீவி விட்டு, அடிக்கோடிட்டுக் காட்டுகிறாய். எனக்கு எல்லாக் கோட்டுக்குப் பக்கத்திலும் இன்னொரு கோட்டைப் போட்டு பெரிதாக்கும் பணி தெரியவில்லை. உனக்குத் தெரிந்திருக்கிறது. கோடுகள் பற்றி சமாமாயோ, சமாந்தரமாயோ நாங்கள் வாழ்வது பற்றி நான் உனக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறேன். நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன், என் கேள்விகள் பதில்கள் அற்றுப் போனவையாக உன்னிடம் மட்டும் சோர்ந்து விடுகின்றன. மறுபடியும் ஒரு நாளும் நான் உன் கனவுக்குள் வலுக்கட்டாயமாக ப...