Skip to main content

Posts

Showing posts with the label ஊர்சுற்றல்

சென்னை

சென்னையில் இருக்கிறேன். சென்னையில் இது எனக்கு முதல் முறை. கொழும்புக்கும் சென்னைக்குமுள்ள வேறுபாடு, கொழும்பையும் அடித்துச் சாப்பிடுமளவுக்கு இங்கே வெயில். மற்றது குப்பை. தெருவெல்லாம் நிறையக் குப்பை. கொழும்பு எவ்வளவோ மேல். அடுத்தது, தமிழர்களைக் கண்டால் துக்கம் விசாரிக்கிற மனநிலை. அங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா என்று விசாரிக்கிற போலி அரசியலும்,போலித்தனமும். குஜராத்தில் பூகம்பம் வந்த போதோ,காஸ்மீரில் குண்டு வெடிக்கும் போதோ, உள்ளூர்வாசிகள் இவ்வளவு இரக்கப்பட்டிருப்பார்களா தெரியவில்லை. ஏன் சிவகாசியில் பட்டாசு ஆலை வெடித்து குழந்தைகள் எல்லோரும் இறந்த போதோ,கும்பகோணத்தில் பள்ளிக்கூடம் எரிந்த போதோ கூட இவ்வளவு கவலை இருந்திருக்குமா தெரியவில்லை. அதில ரகசியமா,இன்னும் ஒருபடி மேலே போய், தலைவர்  இன்னும் இருக்கிறாரா என்றும் கேட்கிறார்கள். என்னத்த சொல்ல, ரஜினி இன்னும் உயிரோட தானுங்களே இருக்கார்...ன்னு சொல்லிட்டு வந்தேன். தட் மிடியல மொமென்ட் ... தைப்பொங்கலுக்கு சூரியன் கையில் விழுந்துவிடும் போல இருந்தது. சிவன் பார்க் பக்கத்தில், ஒப்பிலிராஜா சாலையில்   ஒரு லக்சரி வீட்டை வாடகைக்கு அமர்த...