சென்னையில் இருக்கிறேன். சென்னையில் இது எனக்கு முதல் முறை. கொழும்புக்கும் சென்னைக்குமுள்ள வேறுபாடு, கொழும்பையும் அடித்துச் சாப்பிடுமளவுக்கு இங்கே வெயில். மற்றது குப்பை. தெருவெல்லாம் நிறையக் குப்பை. கொழும்பு எவ்வளவோ மேல்.
அடுத்தது, தமிழர்களைக் கண்டால் துக்கம் விசாரிக்கிற மனநிலை. அங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா என்று விசாரிக்கிற போலி அரசியலும்,போலித்தனமும்.
குஜராத்தில் பூகம்பம் வந்த போதோ,காஸ்மீரில் குண்டு வெடிக்கும் போதோ, உள்ளூர்வாசிகள் இவ்வளவு இரக்கப்பட்டிருப்பார்களா தெரியவில்லை. ஏன் சிவகாசியில் பட்டாசு ஆலை வெடித்து குழந்தைகள் எல்லோரும் இறந்த போதோ,கும்பகோணத்தில் பள்ளிக்கூடம் எரிந்த போதோ கூட இவ்வளவு கவலை இருந்திருக்குமா தெரியவில்லை.
அதில ரகசியமா,இன்னும் ஒருபடி மேலே போய், தலைவர் இன்னும் இருக்கிறாரா என்றும் கேட்கிறார்கள்.
என்னத்த சொல்ல, ரஜினி இன்னும் உயிரோட தானுங்களே இருக்கார்...ன்னு சொல்லிட்டு வந்தேன். தட் மிடியல மொமென்ட் ...
தைப்பொங்கலுக்கு சூரியன் கையில் விழுந்துவிடும் போல இருந்தது. சிவன் பார்க் பக்கத்தில், ஒப்பிலிராஜா சாலையில் ஒரு லக்சரி வீட்டை வாடகைக்கு அமர்த்திக் கொண்டோம். சென்னையில் லக்சரி என்பது, கொழும்பில் சாதாரண வீடுகளை விட தரம் குறைந்ததோ என்று யோசிக்கத் தோனுகிறது.

ஏ/சி போட்டுத்தருகிறேன் பேர்வழி என்று பட்டப்பழைய மிசினை போட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். சுடுநீர் வசதி இருப்பதாகச் சொன்னார்கள். குளிக்கும் போது போய்ப்பார்த்தால் அப்பிடி ஒரு ஐட்டத்தையே காணோம். அதுக்கும் பிறகு போராடி போட்டுக் கொள்ள வேண்டியதாய்ப் போயிற்று.
சுற்றுலா என்பதை, வதை எனுமளவுக்கு சில இடங்களில் பிழிந்து விடுகிறார்கள்.
பிறகு ஒரு முக்கியமான விஷயம், ஜகுஸி கழிவறையாக இருந்தாலும், சென்னையில் எந்த ஹோட்டல்களிலும் ஸ்ப்ரே வோஷர் இருப்பதில்லை. வெட்கமே இல்லாமல் பக்கட் வைத்திருக்கிறர்கள். என்ன கொடுமை சரவணா இது?
சென்னையில் மட்டுமல்ல,மதுரையில் YMCA ஹோட்டலில் தங்கியபோது அங்கும் கூட இதே நிலை தான். அங்கு ஓரளவுக்கு ஏ/சி அறை சொல்லிக்கொள்ளுமளவுக்கு இருந்தது. மதுரை,திருச்சி பற்றி அடுத்தடுத்து பதிவுகளில் தருகிறேன்.
சென்னை, சினமாப் படங்களில் பார்த்த ஒரு ஆர்வம் தரக் கூடிய சிட்டியாக இருக்குமென்றால், நிறைய ஏமாற்றமும், நெரிசலும், கட்டுப்பாடும் நிறைந்த இடமாக இருக்கிறது. சென்னை நண்பர்கள் கோவித்துக் கொள்ளுவார்களா என்று தெரியவில்லை, இதுவே உண்மை. ஆனால் மனிதர்கள் ஒவ்வொருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே செல்வது எனக்கு மிகப் பிடித்திருந்தது.
ரங்கநாதன் தெருவுக்கு போயிருந்தோம். பெட்டா போகும் ஒவ்வொரு சமயமும், புறக்கோட்டை எனக்கு வெறுக்கும். ரங்கநாதன் தெருவுக்குப் பிறகு, எதையுமே வெறுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தேன்.
சிலோன்கார்களை இலகுவாக கண்டுபிடித்து ஏமாற்றிவிடுகிறார்கள். உடையோ, பேச்சு வழக்கோ எதுவோ ஒன்று அவர்களுக்க் கண்டுபிடிக்க தோதாக இருந்து விடுகிறது. சென்னை டவுனில் கூட ஜீன்ஸ் போட்டுப் போனால் பப்பரப்பே...என்றும், ஒரு திணுசாகவும் பார்க்கிறர்கள். அத்தனைக்கும் நான் ஒரு இத்துணூண்டு பொண்ணு.
ஒரு நல்ல அனுபவம். சிவன் பார்க் வழியாக கொஞ்சத் தூரம் இளைப்பாற நானும் அக்காவும், அக்காவின் ஒரு வயதுக் குழந்தையும் நடந்துகொண்டிருந்தோம். நான், ஜீன்ஸ் போட்டால் தான் பராக்குப் பாக்கிறார்கள் என்று ஸ்கேர்ட்,ப்ளவுஸ் அணிந்திருந்தேன்.
ஒரு பூக்கார அம்மா எங்களை நோக்கி வந்தார். வந்தவர்,
என்னம்மா இது சப்பான் ஜாக்கட்டா...என்று கேட்டார்.
நாங்களும் எதோ, குழந்தையின் உடுப்பைப் பார்த்துக் கேக்கிறார் என்று, பார்த்தால்....மனுசி, போகும் போது, "என்ன எழவோ...எழவெடுத்த உடுப்பு...என்று என்னைத்தான் திட்டிக் கொண்டே போகிறது....
மறுபடியும் என்ன கொடுமைடா சரவணா!
சில காரணங்களால் சென்னை வெறுத்தது. ஆனாலும் கொண்டடுவதற்கு நிறைய இருந்தது. தமிழ்நாட்டில் இருந்த இரண்டு மாதங்களும் கம்பஸ் இல்லை, காலமையே எழும்பத் தேவையில்லை. ஒரு வேலை வெட்டியும் இல்லை. முழுசா சுற்றுலா மூட். ஜாலி மூட் வேற....இதைத் தவிர ஆனந்தப் படுறதுக்கு புதுசா காரணம் தேவையா?
சென்னை சங்கமம், நாட்டுப்புற நிகழ்ச்சி கூட நாங்கள் அங்கிருந்த சில நாட்களில் நடைபெற்றது. ஒரே கூட்டம், அந்தக் கூட்டத்துக்குள் நெருக்குப் பட்டு பார்த்து முடித்தோம். அங்கு நிறைய பேஸ் புக் நண்பரகளையும் சந்திக்க முடிந்தது.
ஜனவரியில் மற்றுமொரு நிகழ்வு, சென்னை புத்தகத் திருவிழா...தோழர் திலகபாமா அன்ரியை, திருமாவளவன் அங்கிள் கனடாவிலிருந்து அறிமுகப் படுத்தி வைத்தார். புத்தகக் கண்காட்சியில் உங்களுக்கு உதவுவார் என்று.
நான் தொலைபேசியில் திலகபாமா அன்ரியோடு கதைத்தேன். அன்பானவராக இருந்தார். கண்காட்சியில் உதவுவதாகச் சொன்னார்.
நானும் அம்மாவும்,எங்களுடன் வாகனம் ஒட்டிக்கொண்டு வந்த தேவா அங்கிளுமாக புத்தக திருவிழா போனால்...அந்தக் கூட்டத்துக்குள்ள எங்க திலகபாமா அன்ரியை தேடித் பிடிக்க? நானும் அவரும் மாறி மாறி, அங்க நிக்கிறேன், இங்க நிக்கிறேன் என்று தொலைபேசிக் கொண்டிருந்தது தான் மிச்சம். பாவம் அவர். என்னால் அலைக்கழிந்துவிட்டார். பிறகு நானே, பரவாயில்லை, நாங்களே சுற்றிப் பார்த்துக் கொள்கிறோம், சிரமத்துக்கு மன்னிக்கவும் என்று சொன்னேன். பாவம், பாடாய்ப்பட்ட அவர் தப்பித்துக் கொண்டார்.
அங்கேயும் கூட்டத்தான் அதிகம். எதுக்கெடுத்தாலும் சென்னையில் கூட்டந்தான் போல. சிவகுமார் கம்பராமாயணம் பற்றி ஒரு பக்கத்தில் மேடை போட்டு நடுங்கின குரலில் கதைத்துக் கொண்டிருந்தார். அம்மா, சின்னவயது சிவகுமார் பான்.
ஐஸ்கிறீம்,சோளப்பொறி,பிறகு கடலைக் குழம்பு (சென்னையில் பிடித்த விடயங்களில் ஒன்று), இதெல்லாம் சாப்பிட்டு ஏப்பம் வரும் தருவாயில் புத்தகம் வாங்கிற எண்ணம் வந்தது.
சாகித்திய அகாதமி பதிப்பகத்தில் சில மொழிபெயர்ப்பு புத்தகங்களையும், காலச்சுவட்டில் கொஞ்சத்தையும், வேறு நண்பர்களுக்கு சில புத்தகங்களையும் வாங்கி முடிய, யார் புத்தகங்களை தூக்குவது என்ற பாடாகிவிட்டது. நேரமும் ஆகிக் கொண்டிருந்தது. கொஞ்ச எழுத்தாளர்களை அடையாளங் காணக் கூடியதாக இருந்தாலும் கதைக்கவில்லை. அதில தமாசு, நம்மளையும் ரெண்டு பேர் இணங்கண்டு கதைச்சாப்ல....
சென்னையில் சினமாப் படம் பார்க்கப் போகக் கூடாது என்று முடிவு எடுத்திருந்தேன். பொதுவாகவே நான் திரையரங்கம் போய் படம் பார்ப்பதில்லை. அதிலும் சென்னையில் பார்க்கவே கூடாது என்று இருந்தேன்.
எங்கள் வீட்டுக்கு முன்னாள் இருந்த வீடு, சூட்டிங் வீடாம். ஒரு புதுமுக திரைப்படத்துக்கு சூட்டிங் எடுத்தார்கள். ஒரு நாள் அவர்களோடு நேரம் போனது. வீடு மாறுகிற ஸீன். பொருட்கள் ஏற்றுவது போல சூட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.படத்துக்கு பெயர் "கம்பன் கோட்டம்" என்று சொன்னார்கள். அப்படி தாவது படம் வந்திருக்கிறதா?
அப்படி ரெண்டொரு தடவை சூட்டிங்கும் பார்க்க நேர்ந்தது. அதைவிட எனக்குப் பிடித்தமானது, காலையில் எழுந்து எல்லோருமே கோலம் போடுகிறார்கள். தலைக்கு பூ வைத்துக் கொள்கிறர்கள். நான் கூட பூக்காரம்மாவிடம் பூ கொண்டுவரச் சொன்னேன். சரமாயும்,மாலையையும் பூ கட்டிக் கொண்டுவந்தார்.
காலையில் எழுந்து, வீட்டு ஓனர் ஆன்டியிடம் கோலப் பொடி வாங்கி, கோலம் போட்டு, பூ வைத்துக் கொண்டேன். ஒரு செல்பி எடுத்து பேஸ் புக்கில் போட்டதும் தான், நின்மதியாக இருந்தது.
நான் ஒரு போதும், இத்தனை காலையில் எழுந்து பூ வைத்து, கோலம் போடப் போவதில்லை என்று தெரிந்ததும், அந்நிகழ்வு ஆனந்திக்கத்தக்கதானது :) எப்போவாவது traditional ஆக வாழ்வதில் சும்மா ஒரு ஆனந்தம்.
கோயில் கும்பிடுவதில் ஆர்வமில்லாத போதும்,தமிழ்நாட்டு கோயில்கள் பூரா சுற்றிப் பார்க்க ஆர்வமிருந்தது. சின்னவயதில சமயத்தில நிறையப் பற்றிருந்ததும், பாடல் பெற்ற தலங்கள் மீதும்,வரலாறு மீதுமிருந்த ஆர்வமும், ஊர் சுற்றிப் பார்ப்பதிலுள்ள கிளுகிளுப்பும் சொல்ல முடியாத பரவசம்.

ஊர்சுற்றுவதில் இருக்கும் விருப்பம் புத்தகம் வாசிப்பதிலும் அதிகம். புத்தகம், ஒரு வட்டத்துக்குள் இருக்க, ஊர்சுற்றல் என்பது அலாதியான அனுபவம். அது ஒரு கொடுப்பனை.
வயசில சின்னப்பிள்ளையாவும், இன்னும் படிச்சுக் கொண்டிருக்கிறதாலையும்
தனியா எங்கேயும் ஊர் சுற்ற இதுவரைக்கும் அம்மா விட்டதில்லை. இந்த தடவை குடும்பமா ஊர் சுற்றினோம். நான் நினைக்கிற மட்டில் குடும்பமா ஊர் சுற்றிய முதல் தடவை என்று நினைக்கிறேன். பெரும்பாலும் யாராவது ஒருவரோ,இருவரோ மிஸ் ஆவார்கள். இந்த முறை எல்லோரும் இருந்தோம்.
சென்னை
2011,ஜனவரி
Comments
Post a Comment