Skip to main content

Posts

Showing posts with the label அலம்பல்

அப்பா, நீங்கள் கையாலாகாதவரா?

இரண்டு கலைகளை ஒன்றாக நேசிப்பதையிட்டு, ஒன்றுக்கு நிறம் பூசுதலையும், இன்னொன்றுக்கு நிறம் மக்கி விடுதலையும் பிரிவினையாகக் கொண்டிருக்கிறேன். இரு தெரிவுகளையும்  பல் தேர்வுக்கோட்டு வினாவைப் போல் நன்னாங்கு விடைகளை கொடுத்து தெரிவு செய்கிறேன். விடைப்பரப்பு தெளிவில்லாது போகுமானால், குதிரையோடுதலையும் வழக்கமாகக் கொள்வேன். தேடலுக்கு அப்பால் உள்ள புண்ணிய நதிக்கரையில் எனது கலைகளது தெரிவுகள் விரிந்துகொண்டிருந்தது. அப்பா ! திருத்த முடியாத உங்கள்  மகள் கனவுகளில் இருந்து  மீளப் படக் கூடியவள் என்று எப்போதாவது நினைக்கிறீர்களா? பூமியின் நடுவே தொலைந்து போன சிறிய மின்கம்பிகளைப் பரிசோதிக்கப் போவதாய் உங்கள் கடைசி மகள் கூறிக் கொண்டு ஆய்வுகூடமொன்றை சொந்தமாய் அமைக்கையில் நீங்கள் ஏன் தடுக்கவில்லை ?  விஞ்ஞானிக் குழந்தையொன்றைப் பெற்றெடுத்த சந்தோசத்திலிருந்து அப்போதெல்லாம் நீங்கள் மீளவில்லையா? எனது பிறப்பிலிருந்த கயமையை நான் உதாசீனப்படுத்தக் கூடாதென்று நினைத்தீர்களா? பாய்மரக் கப்பல்களைப் பின்னிக் கொண்டு நான் கடல் கடந்து போவேன் என்று சொன்ன போ...

மூக்கினால்ப் பாருங்கள் ...

                                                                                             என்னிடத்தில் எஞ்சியிருப்பது ஒன்றே ஒன்று மட்டும், அது என் பற்றியதல்ல -  அது , வெட்ட வெளி நிலத்தின் ஊடு பாயும் கதிர்க் கற்றையிலிருந்து, பிளந்து வரும் ஏழாவது நிறத்தின் மக்கிப் போன சாயம் தாங்கிய நிழல் ! அது ஒரு வகை பெருமிதம் ; களிப்பு ! என்னில் இருந்து நிழல் விலகத் தொடங்கும், கடைசிப் பௌர்ணமியின் இருட்டில், அதனது சாயம் வெளுத்துக் கொண்டு போக ஆரம்பிக்கும்... என் மூக்கை தொடர்ந்து உற்று நோக்கினால் , என் வெளுத்த சாயம் வெளியேறுவதை எல்லோரும் அவதானிக்க முடியும்! கண்களினால் பார்ப்ப...

கண்ணன் பாடல்

சொன்ன பொருளிலெலாம் கண்ணா சேதி சொல்ல மறந்தாயோ ! - சேதி-சொன்ன பொருளிலெல்லாம் கண்ணா மீதி சொல்ல மறந்தாயோ- மீதி- சொல்லியிருந்தும் கண்ணா பாதி சொல்லினை மறந்தாயோ- பாதி-சொல்லிலும் ஒரு சொல் சொல்லாமல் நின்றாயோ- சொல்லாமல் நின்றதினால் சோதி என்று ஆனாயோ- சோதி என்று ஆனவனே சேதி ஒன்று தாராயோ ? கேள்வி உன்னைக் கேட்பதற்கே வேள்வி பலம் தாராயோ - வேள்வி நிதம் செய்வதற்கே தோளில் பலம் தாராயோ- தோளில் பலம் சேர்த்து விட்டு தோல்வியினைச் சேர்ப்பாயோ- தோல்வியினைத் தோள் கொடுக்க துன்பமினைத் தருவாயோ- துன்பமிதைச் சேர்த்துவைக்க தொல்லையினைத் தாராயோ- தொல்லைகளின் தொன் முடிவில் உன் புன் முகத்தைத் காட்டாயோ- தோல்வி ஒன்று கண்ணா நீ என் தோளில் வந்து ஏற்றாதே- ஆழி பயில் மன்னா நீ என் காலில் பழி சேர்க்காதே - வாலிபத்தை ஒரு வழியாய் வலி நிறைத்து விற்காதே- உன் விற்பனையை விஞ்சுமொரு விலை மதிப்பைச் செய்யாதே- விலை போவார்க் குலமொழுக கொஞ்சும் படி நிற்காதே- தானாய்க் -கொஞ்சுமொரு அஞ்சுகத்தைக் கச்சவிழத் தள்ளாதே ! தேளை விட்டுத் தேன் பருக, சாலை விட்டுத் தேர் விலக காளை விட்டுப்போன பின்னே புதுப...

இஞ்சித் தேத்தண்ணியும் குருட்டுப் பட்சியும்...

                                                            படபடவென்று, இறக்கையை அடித்துக் கொண்டு அந்தரத்தில் துடிக்கின்ற அந்த இரவுப் பட்சி, இரவின் கவிந்து போன நரையை ரசிகத் தன்மைக்கு அப்பாலே எட்ட நின்று பார்க்கிறது- இருந்தும் கூடக்குறைய அதன் மையப்புள்ளிக்குள் அதனால் இறங்கமுடியவில்லை. நான் சாய்வு நாற்காலியைத்  தேர்ந்தெடுத்து, ஆயாசமாக உட்கார்ந்து கொண்டு இஞ்சித் தேத்தண்ணியை ருசிக்கிறேன். எனக்கு எல்லாவற்றிலும் ரசனையுண்டு. அந்த மாமரத்தில், தளிர் வரத்தொடங்கி நாளாகீற்று- மாம்பூ பூத்துக் குலுங்கும் குடலையின் உன்னத வாசம்...! அன்றைய மாலை, இருண்டு போன சூரியனின் அழைப்பை மீறி வௌவால்களை மரத்துக்கு அழைக்கிறது. எங்கிருந்தோ நெடிய வீச்சத...

எனக்கும், பூமிக்குமான நெருக்கம்.

எனக்கும் நிலவறைக்குமான நெருக்கம்- பூமிக்கும் அதன் பிளவணுக்களுக்குமான தூரத்திலும் குறுகி விட்டது- பல காலம் மலர்ந்த நீலோட்பலத்தின், நெடுஞ்சாண் கிடை நிலை -இன்றைக்கு ஆகாமியமாயச் சரிந்தொழிகின்றது- எனக்குமிருக்கின்றது- வேதனையின் பிரதி பிம்பம். நெடுகாலத் தபோவனச் சாயலின் நிழல்- தபஸ்வியாக என்னை சயனிக்கக் கூறியது. ஹம்..... பெரு நாட்களின் கணக்குப் படி, தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும் நானாகிய ஆணவம். இருந்தும், மெல்லச் சாவென விடப் படுகிறது- சஞ்சலமான இமை முகத்தால். பெருஞ்சல்லாபத்தின் பேரில் நிருவாணந்தாங்கிய கோளச்சிலைகளை- கட்டியணைக்கிறேன்,- சிலை விலகி ஓடுகிறது. சாலை வண்டிகளுக்கு எனது பெருந்துன்பம் தெரியா... புகை கக்குகிறது எனது மரணந்தாங்கிய நடையில். உருவகங்களில், பேதைமை நிறைந்து, திவலைகளாக உருண்டு நிழல்த்தருக்களுள் ஒழிந்து கொண்டு- அப்பப்பா....ஏகப்பட்ட சேட்டைகள்....! கனவு, மிச்சமிருக்கிறது, அவள் வந்து தண்ணீர்க்குவளை நிறைய, பழச் சோடா ரெப்பிக் கொண்டு குடித்து, ஏப்பம் விடுகிறாள்.- சாம்பசிவக் குருக்கள், அதை தட்டி வி...