என்னிடத்தில் எஞ்சியிருப்பது ஒன்றே ஒன்று மட்டும்,
அது என் பற்றியதல்ல -
அது ,
வெட்ட வெளி நிலத்தின் ஊடு பாயும் கதிர்க் கற்றையிலிருந்து,
பிளந்து வரும் ஏழாவது நிறத்தின் மக்கிப் போன சாயம் தாங்கிய நிழல் !
அது ஒரு வகை பெருமிதம் ; களிப்பு !
என்னில் இருந்து நிழல் விலகத் தொடங்கும்,
கடைசிப் பௌர்ணமியின் இருட்டில்,
அதனது சாயம் வெளுத்துக் கொண்டு போக ஆரம்பிக்கும்...
என் மூக்கை தொடர்ந்து உற்று நோக்கினால் ,
என் வெளுத்த சாயம் வெளியேறுவதை எல்லோரும் அவதானிக்க முடியும்!
கண்களினால் பார்ப்பதைத் தவிர்த்து மூக்கினால் பார்ப்பதற்கு
அவன் என்னைப் பழக்கினான்.
மூக்கினால் பார்ப்பவர்களுக்கு மட்டும் வெளுப்பின் நிறம், மக்கிய சாயம்,
ஆவி போல் அந்தரத்தில் அலைவது தெரியும்.
கடவுள், நிழலை ஒரு சன்னத்தின் தெறிப்பாய்ப் படைத்திருக்கிறார்.
சன்னம் தெறிக்கையில் என் மீ உந்தம் ,
இடப் பரவலில் இருந்து ஒடுங்கிக் கொண்டு விடுகிறது.
அந்த அற்புதங்கள் மூக்கினால்ப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே புரியும்.
மூக்கின் இரண்டாவது இடைத் துவாரத்தின்,
பிசிர்த் தசையை ஆழ உள்ளே இழுத்து ஒண்டிக் கொண்டு,
மூக்கின் ஏதாவது ஒரு மையம் தொடர்பாக,
தொண்டை அண்ணத்தை மூச்சுப் புகாமல் இழுத்து விட்டுக் கொண்டால்,
புரையேறிச் சாவது போலும்,
கடும் குளிர்த் தொண்டைக் கரப்பான் போலவும்
உலாவும் உணர்ச்சியில்

அவன், மூக்கினால்ப் பார்ப்பவர்களுக்குத் தென்படுவான்.
மூக்கினால்ப் பார்த்தல் என்பது
களிப்பின் உச்சம்; உவகையின் பெரும் பிரயாசை.
மிகச் சிறந்த சோகக் கதையொன்றின் பின்னான இருண்ட வானம் போல்,
என் கதைகளைக் கேட்கும் போது இருக்கக் கூடாதென்பதாலும்,
என் கதைகள் சோகமில்லை என்று நம்புங்கள்,
என மன்றாட ஆயத்தமாவதாலும்,
என்னை மூக்கினால்ப் பாருங்கள்.
மூக்கினால்ப் பார்த்தல்
சில்லறை விடயங்களுக்கென்று மட்டும் ஒதுக்கப்பட்ட
கடவுளைக் கரித்துக் கொட்டுவதிலும்
இலகுவானது என்றால் நம்புவீர்கள் அல்லவா?
மூக்கினால்ப் பாருங்கள் !

நிலா-
23/7/2011
Hi Nila,
ReplyDeleteEvery time you surprise me with your phenominal writing. A real unique literary style..
நன்றி மாதுமை, ஒவ்வொரு தடவையும் உங்களைப் பிடிக்க முடியிறதில்லை.இன்னொருக்கா , மின்னஞ்சல் முகவரியை அஞ்சலிடுங்கோ, கதைப்பம்.
ReplyDelete