வ ள்ளிநாயகிக்கு இரண்டாம்கட்டப் பரிசோதனைக்கு நேரமாகிக் கொண்டிருந்தது. அம்மா சொல்லிவிட்டிருந்தா , நிறைய இதில மினக்கெடுத்தாத, வாறது தான் வரும்...கிடைக்கிறது தான் கிடைக்குமெண்டு.அவளுக்கேதும் பயமில்லை, ஆனா பரிசோதகரா வாறவர் அவளைக் கண்டோ, அவளோட கதைச்சிட்டோ பயப்பிட்டுவிடக் கூடாதெண்ட நல்ல எண்ணம் அவளுக்கிருந்தது.தெவுமி குரானா சொல்லிக் கொண்டிருந்தாள், நீ கதைக்க வெளிக்கிடாத....கதைச்சால்...உண்ட பரிசோதனை தவிடுபொடியாயிரும் என்று ! அவள் அதையும் கேட்டுக் கொண்டாள்.றஞ்சன பொடிவிதாறன சொன்னான், நீர் கதையும் ...வாறவன் கேக்கிற வரைக்கும் கதையும் ...கதைச்சால் நீர் எக்ஸ்பிளைன் பண்ணுறத்தை எல்லாம் அவன் காது குடுத்துக் கேப்பான், பிறகு அனலைசிங் கமிட்டி எண்டு இன்னொண்டு கூட்டுவான்...அதுக்குப் பிறகு நிச்சயம் வெற்றி மாதிரித் தான். ஆனபடியால் கதையும் என்றான். வள்ளிநாயகி அதையும் கேட்டுக் கொண்டாள். புறபிசர் அல்பிரட் டி சில்வா மட்டும் உம்முனா மூஞ்சிக்குப் பிறந்தவர் மாதிரி முந்த நாள் அதிகாலையில் ஒரு தொலைபேசி அழைப்பு எடுத்துவிட்டு மிஸ்ட் கோலாக்கி விட்டார். பிறகு ஒரு அரை மணிநேரம் கழி...