புத்தனை, போதையில் சந்தித்தேன். இன்று அவனிடம் எதுவுமில்லை ஒரு ,காவியையும் , சதக் காகாசுகளையும் தவிர..... காலத்தின் அழுகிய நாற்றத்தால் போதியில் சந்திக்க வேண்டிய அவனை .............................. .......................................................... பொம்மைகளின் யாசகர்கள் பற்றியும் வானம் வழுக்கி விழுந்த தடம் பற்றியுமாய் அவன் பதில்கள் இருக்கவில்லை. 'வாசவதத்தை' பற்றியும், தீண்டப்ப டாத, வீணை பற்றியுமாய் இருந்தது.... அவன் பதில் ..... புனையப்படாத ஓவியத்திலிருந்து வரும் அவனின் பௌர்ணமி ,.... பெருத்துப் போன பெருச்சாளி போன்றிருந்தது....! அவனுக்கும் தெளிவில்லை , எனக்கும், தெளிவில்லை..... காவிக்கும் , கர்த்தாவுக்குமான உட்கிடக்கையில்........... அரச மரத்து அணில் சொன்னது........ இவன் நெடுகாலமாய் இங்குதான் கிடக்கிறான்..... வேலையத்த பயல்..... மௌனத்தின் காற்று வெளி - படபடத்தது.... அவனுக்கு மூல வியாதி வரக்கூடாமைக்கு வேண்டி - மீண்டு வந்தேன். அவன் சீடன் சொன்னான், நானும் புத்தனாகி விட்ட ...