நான் கொதிக்கும் உலையில் இருந்து விடுபட்டு- அந்தம் ஒழிக்க, எனக்கென இருக்கும் ஒரு பகலோ இருபகலோ போதாமல் போகும். வாமன உருவத்தில் இருந்த வலி காணாமல் நீண்டு பெரும் இராக்கதனாய் அவதரிக்கும். பார்- நீ ஒரு நாள் சினம் கொண்டு எழுதலில் இருக்கும் தீவிரம் அனுதினம் எனக்குள்ளே பொங்கிப் பிரவகிக்கும். கடல் ,வெளிகள் ,மவுன மலைகள் தாண்டி எதிரொலிக்கும். யாரையும் வாழப் பிரியப்படாமல்- ஓசை முறித்துக் கொள்ளும் -உணர்வலைகள் ! பொங்குதலில் உள்ள லாபகரம் என்ன தெரியுமா? ரகசிய சந்திப்புகளில் புரியாத வார்த்தையற்ற விரவும் வெளிகள்- தாம் ! புல் நுனியில் காலம் பனி தட்டி எழுந்து கூத்தாடும். புலர்தலுக்கு முன்னே பூப்பெய்தும். புருட சுகம் ஒன்றினையே புணர்ந்தலையும் ; புல்லுருவி வாழ்க்கையில் இருந்து வெளியேறும். நல்லினக்கமில்லா நகைப்புக்களை நர...