Skip to main content

Posts

Showing posts with the label அரசியல்

பழங்கவிதைகள் சில ...

பழங்கவிதைகள் சிலவற்றை ப்ளாக்கில் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்.இவை அனைத்துமே 2007ஆம் ஆண்டுக்கு முற்பட்டவை. பள்ளிக்கூடக் காலத்தில் எழுதப்பட்டவை.  தொலைந்து போன சில தடயங்களைத் தேடித் பகிந்துகொள்வதில் உள்ள ஆவணப்படுத்துகை, ஒருவகை நிறைவானதும், இன்பமானதும் கூட. இன்றைய எழுத்துக்கும் அன்றைய எழுத்துக்குமிடையிலான இடைவெளியை இன்னமும்  வியந்துகொண்டிருக்கிறேன். நிலா.லோ 2012 இந்தத் தொப்பி....... இந்தத் தொப்பி யாருக்குப் பொருத்தமென்று இளையோரையெல்லாம் கேட்டு வைத்தான். இன்னோரன்ன இழவுகளாலே இனிப் பொருத்தமென்றால் இது தான் என்றான். அவனைக் கண்டவரெல்லாம் அது அவனுக்குத் தானென்றார். இவனைக் கண்டவரெல்லாம் அது இவனுக்குமென்றார். ஒருவரும் தனக்கென்று சொல்லி தலை கொடாமல் சென்ற போது- அந்தோ அது வந்துதலையில் வீழ்ந்து -தெறித்து, முன்னோர் அலறி முறை கெடும் வண்ணம்  வீணாய்ப் போனார் எம்மின மக்காள்! 2004 கற்புடை பாடலொன்று! பூனைக்குட்டிகளைச் சாம்பலக் கிடங்குக்குள் வளர்க்கும் பெண்களைப் பற்றி கற்புடை பாடலொன்று பாடவா? இறுதி முறையாக த...

காக்கைகளும் நரிகளும் வடையும்...

 நா வலை மேம்பாலத்துக்கருகில் மிகப் பயத்துடன் நடந்துகொண்டிருந்த போது யாரோ என் முதுகுக்குப் பின்னால் இருந்து மிஸ் கந்தையா என்று கூப்பிட்டது நன்றாகக் காதில் விழுந்தது. கூப்பிட்ட குரல் எனக்கானதாக இருக்க வேண்டுமென்றால் என்னுடைய இளம்பிராயத்தில் அறிமுகமானவர்களாக இருக்க வேண்டும். சிறிது குழப்பத்துடன் திரும்பிப் பார்த்தேன். ஆளைச் சரியாக மட்டுக் கட்ட முடியவில்லை. திரும்பிப் பார்த்து நேரம் செலவழியாமல் நடக்க முனைந்தேன். அந்த நபர் என்னை நோக்கி மிக வேகமாக ஓடி வந்து எனக்கு முன் பாதையை வழி மறித்துக் கொண்டு என்னைத் தெரியேல்லையோ எண்டு கேட்டார். எனக்கு சாதுவாகவும் நினைவில்லையாதலால், மன்னிக்கோணும் எனக்கு சற்றைக்கும் நினைவு படுத்த முடியேல்ல என்றேன் . நினைவுப் படுத்துவதில் உள்ள சிரமத்தை விட அவர் எனக்கு முன்பாக வழிமறித்துக் கொண்டு நின்ற விதம் சங்கடமானதாக இருந்தது. இப்ப இங்கையோ இருக்கிறீர் எண்டார் . என்னைப் பொதுவாக யாரும் 'றீர் ' அடைமொழி பாவித்து அழைப்பதே இல்லை எனலாம். எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. எனக்கு சொல்லுவதற்கு ஒரு பதிலும் இருக்கவில்லை. அவர் கொஞ்சம் உரத்த குரலில் சிரித்த...

Sri Lanka, Beginning of Ethnic Conflict and State Language Implementation. Part-2

      BEGINNING OF  ETHNIC CONFLICT IN SRI LANKA  -Part 2  அரசகரும மொழியாக்கம் மற்றும் இலங்கை இனப்பிரச்சினைக்கான ஆரம்பம் .  1948 இல் ஏற்பட்ட அரசியல் மாற்றமானது இலங்கையின் மொழிக் கொள்கையில்  ஏற்படுத்திய மாற்றங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இனப்பிரச்சினையை உண்டு பண்ணின. 1956இல் திரு. பண்டார நாயகம் அவர்களது  ஐக்கிய மக்கள் முன்னணி ஆட்சி பீடம் ஏறியது. ஆட்சிக்கு வந்து 24மணி நேரத்தில் சிங்களம் அரசகரும ,நிர்வாக மொழியாக மாற்றப்படும் என்ற கோரிக்கையுடனேயே அரசு பதவிக்கு வந்தது. சிங்கள மக்களைப் பொறுத்த வரையில் அது ஒரு சிறப்பான நடவடிக்கையாயும் தேர்தல் வாக்கு மூலம் நிறைவேற்றப்படும் உன்னதமான தருணமாயும் இருந்தது .      ஆனால் தமிழ் மொழிக்கு, மக்களுக்கு, அரசினது கடப்பாடு  இல்லாத இச் செயல்  இனவாதத்தை மேலும் அதிகரிக்கும் செயலாக  அமைந்தது. சிங்கள மொழி அரச கரும  மொழியாக்கப் பட்டதன் காரணமாக பல தமிழ் அரச ஊழியர்கள் ஓய்வு பெற நிர்ப்பந்திக்கப் பட்டனர். பலர் வெளி நாடுகளுக்கு வேலை வாய்ப்பு...

Sri Lanka, Beginning of Ethnic Conflict and State Language Implementation. Part-1

      அரசகரும மொழியாக்கம் மற்றும் இலங்கை இனப்பிரச்சினைக்கான ஆரம்பம்.   மொழியானது தொடர்பாடலுக்கும் அறிவைப் பெருக்குதலுக்குமான  ஒரு கருவியாகும். ஒரு நாட்டில் வாழும் மக்களின் பிரதானமான தொடர்பாடல் மையம் மொழி, அது பெரும்பான்மை, சிறுபான்மை  இரு சாராருக்கும் பொதுவானதே. இருப்பினும் பொது வழக்கில் அரச  கரும மொழியாக தத்தமது   சுய   மொழிப் இருப்பது குறித்ததே இன்றைய அச்சம்.  '' உங்களுக்கு இரு மொழியுடனான தேசமா? அல்லது ஒரு மொழியுடனான இரு தேசங்களா வேண்டும் ? எமது நாட்டின் சுதந்திரத்திற்கும் அதன் உட்கூறுகளின் ஒற்றுமைக்கும் ஆனா  வழி,  சமத்துவம் என்றே நம்புகிறோம் . இல்லையென்றால், ஒரு சிறிய நாட்டிலிருந்து இரத்தம் சொட்டுகின்ற துண்டாகிப் போன இரு நாடுகள் தோன்றும் -'' இலங்கையின் தேசிய மொழியாக சிங்கள மொழி மட்டும் என்று சட்டம் -1956நிறைவேறிய போது கலாநிதி கொல்வின் ஆர் டீ சில்வா தெரிவித்தது . இன்றும் இதுவே நாட்டில் இரு மொழி அமுலாக்கம் என்றவுடன் ஞாபகத்திற்கு வருகிறது.    ...