அரசகரும மொழியாக்கம் மற்றும் இலங்கை இனப்பிரச்சினைக்கான ஆரம்பம்.
மொழியானது தொடர்பாடலுக்கும் அறிவைப் பெருக்குதலுக்குமான ஒரு கருவியாகும். ஒரு நாட்டில் வாழும் மக்களின் பிரதானமான தொடர்பாடல் மையம் மொழி, அது பெரும்பான்மை, சிறுபான்மை இரு சாராருக்கும் பொதுவானதே. இருப்பினும் பொது வழக்கில் அரச கரும மொழியாக தத்தமது சுய மொழிப் இருப்பது குறித்ததே இன்றைய அச்சம்.
'' உங்களுக்கு இரு மொழியுடனான தேசமா? அல்லது ஒரு மொழியுடனான இரு தேசங்களா வேண்டும் ? எமது நாட்டின் சுதந்திரத்திற்கும் அதன் உட்கூறுகளின் ஒற்றுமைக்கும் ஆனா வழி, சமத்துவம் என்றே நம்புகிறோம் . இல்லையென்றால், ஒரு சிறிய நாட்டிலிருந்து இரத்தம் சொட்டுகின்ற துண்டாகிப் போன இரு நாடுகள் தோன்றும் -''
இலங்கையின் தேசிய மொழியாக சிங்கள மொழி மட்டும் என்று சட்டம் -1956நிறைவேறிய போது கலாநிதி கொல்வின் ஆர் டீ சில்வா தெரிவித்தது .
இன்றும் இதுவே நாட்டில் இரு மொழி அமுலாக்கம் என்றவுடன் ஞாபகத்திற்கு வருகிறது.
அரசியலமைப்புக்கான 16ம் திருத்தச் சட்டத்தின் கீழ் ஏதாவது ஒரு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மொத்த சனத்தொகையில் சிங்கள, அல்லது தமிழ் மொழிச் சிறுபான்மையினரின் விகிதாசாரத்தைக் கருத்திட் கொண்டு ,ஏதேனும் பிரதேச செயலகப் பிரிவொன்றில், சிங்களம், அல்லது தமிழ், அல்லது இரு மொழிகளையும் அரச கரும மொழியாக்கக் கூடிய நிறைவேற்று அதிகாரம் நாட்டின் சனாதிபதிக்கு உண்டு என்பது இங்கு முக்கிய அம்சமாகும். இருப்பினும் இந்நிலை நீண்ட காலமாக தேக்கத்திலேயே உள்ளதும் குறிப்பிடத்தக்கது .
நாட்டில் வாழும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான நிரந்தரக் குடி மக்களின் மொழி ரீதியான உரிமையை நசுக்கி விட்டு எந்தவொரு சனநாயகமும் சிங்கள மொழியை தனியே அரச கரும மொழியாக்குவது கண்டிக்கத்தக்கது. மொழி உரிமை தெரியாத சிறுபான்மையினரின் முன்னேற்றத்திற்கு தடை போடுவதே இது. அரச மொழி தெரியாத ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அரச சேவையின் கதவு மூடப்படக் கூடாது. மூல மொழியில் சேவைகள் நிரந்தரமாக்கப் பட வேண்டும் .
இலங்கையைப் பொறுத்த மட்டில் இரு சிறுபான்மையினரான முஸ்லிம்கள் , தமிழர், இருவரது பொது மொழியாகவும் தமிழ் இருக்கின்றது. ஒருவர் தனது சொந்த நாட்டில் தனது சொந்த மொழியை பூரணமாக உபயோகிக்கக் கூடிய உரிமை சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப் பட்டுள்ள இந்நிலையில் தமிழ் மொழி அரசகரும மொழியாகுதலில் ஏகப்பட்ட சிக்கல்கள்.
இலங்கையில், 1930களிலேயே மொழியுரிமை, உரையாடலுக்குரிய சர்ச்சையாக வெளிவந்து விட்டது. ஆரம்பகாலத்தில் பிரித்தானியக் காலனியாதிக்கத்தில் அரச கரும மொழியாயிருந்த ஆங்கிலத்திற்குப் பதிலாக, சிங்கள, தமிழ் மொழிகளை அரச கரும மொழியாக்குதல் பற்றியமைந்தது அது. ஆனால் சுதந்திரத்துக்குப் பின்னைய இலங்கையில், சிங்கள மொழியை ஒரே அரச கரும மொழியாக்கியமை மூலம் தமிழ் மொழியின் சம அந்தஸ்து மறுக்கப்பட்டமை இனப்பிரச்சினைக்கான உணர்வு பூர்வமான ஆதிக்கமாயிற்று.
அதற்கான சில சட்டரீதியான ஆதாரங்கள் பின்வருமாறு.
# 1965 ம ஆண்டில் பாராளுமன்றத்தில் சிங்கள மொழி இலங்கையின் ஒரே அரச கரும மொழியாதல் வேண்டும் என்ற விதந்துரைப்பு ஏற்படுத்தப் பட்டமை.
# 1972ம ஆண்டு யாப்பின் படி சிங்கள மொழி அரச கரும மொழியாக்கப் பட்டது . தமிழ் மொழியின் உபயோகம் அனுமதிக்கப் பட்டாலும் நாட்டின் நிர்வாக மொழியாகவோ அரச கரும மொழியாகவோ அது இருக்கவில்லை.
#அதே ஆண்டு( 1972 ) மேன்முறையீட்டு நீதிமன்றங்களில், தீர்ப்புகள், மேன் முறையீடுகள், நிகழ்வுகள், அனைத்தும் சிங்கள மொழியிலேயே இருக்கும் என்ற விதந்துரைப்பும் ஏற்படுத்தப் பட்டது . இவை சிறுபான்மை மக்களின் அத்தியாவசியத் தேவைப் புறக்கனிப்புக்கொத்தவையாகும் .
# 1987 இல் இந்தியா இலங்கை ஒப்பந்தத்தின் பெயரில் தமிழ் மொழி ஒரு அரச கரும மொழியாக 18ம் உறுப்புரை திருத்தியமைக்கப்பட்டு மாற்றப்பட்டது, இருப்பினும் அதன் விளைவுகள் ஏற்படவே இல்லை.
அரசியல் யாப்புக்கள் எப்படித்தான் மாற்றப்பட்ட போதிலும் 2008 ம ஆண்டு உட்படுத்தப்பட்ட ஆய்வின் படி 77 சதவீதத்திற்கு இற்கு மேற்பட்டவர்கள் பொதுத்துறையில் தமிழ் மொழியைப் பயன்படுத்தும் திறன் குறைந்தவர்களாகவே காணப்படுகின்றனர்.
மேலும் 2006ம் ஆண்டு வரவு செலவுத்திட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்த 960 திணைக்களகங்களிலும் 114 மட்டுமே, தமிழ் மொழியை அரச கரும மொழியாக்குதலுக்கான நிதி ஒதுக்கீட்டுக் கோரிக்கைக்கு உடன்பட்டிருந்தன. அரச மொழிக் கொள்கையாக தமிழ் மொழியைப் பயன்படுத்துவதட்கு, ௨/3 அரச நிறுவனங்கள் இன்னும் தயாராகவில்லை என்பதையே இது குறிக்கிறது. இதனால் பாதிப்படையக் கூடிய மக்கள் பிற மொழி மட்ட அறிவில்லாத சிறுபான்மையினரே ஆவர்.
# அரச கரும மொழியாக, தமிழ் மொழி- அமுலாக்கம்.
#அரச சேவையில் இணைவதற்கான பரீட்சையின், மொழி மூலமாக தமிழ் அமுலாக்கம்.
#வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களில், நிர்வாக மொழியாக தமிழ் மொழி அமுலாக்கம் போன்றன, அமுல்ப்படுத்த சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப் பட்டும் இன்னும் இவை சீரான அமுலாக்கத்தில் இல்லை.
தமிழ் மொழி பேசும் மக்களில் அநேகமானவர்கள் ,அதாவது வடக்கு, கிழக்கு, மலையகத்தைச், சார்ந்த மக்களே வாழ்கின்றனர். 2006ஆம் ஆண்டளவில் இவர்களது எண்ணிக்கை 2937900ஆக இருந்ததுடன், நாட்டில் தமிழ் பேசும் சனத்தொகையில் 64 சதவீதமாகிறார்கள் . அதனால் இந்த மாகாணங்களில் தமிழ் மொழியில் நிருவாக சேவைகளை வழங்குதலில் தீவிரமாக்கப்பாடல் வேண்டும்.
தொகை மதிப்பு புள்ளிவிபரத்தினக்களம்2000 ம் ஆண்டில் மேற்கொள்ளப் பட்ட கணக்கெடுப்புப் படி இந்த ஆண்டில் 835651 சேவையாளர்கள் இருந்தனர் . தற்போதைய எண்ணிக்கை 900000இலும் கூடியதாக இருக்கும் என நம்பப் படுகிறது.
இலங்கை நிருவாக அரசு ,இலங்கை திட்டமிடல் சேவை , நீதித்துறை அலுவல்கள், இலங்கைப் போலீஸ் பிரிவு, சட்ட அலுவலர்கள், சுங்க சேவையாளர்கள், இலங்கை விஞ்ஞான பொறியியல் சேவையாளர்கள், அரச மருத்துவ சுகாதாரப் பரிசோதகர்கள், கிராம அலுவலர்கள், இலங்கைக் கல்வி சேவையில் இருப்போர் போன்றவர்களுக்கு அறிமுக தமிழ் மொழி அத்தியாவசியமாகிறது. மக்களின் அத்தியாவசியத் தேவைகளுடன் பரீட்சார்த்தம் கொண்டவர்கள் கட்டாயமாக இருமொழிக் கொள்கையுடன் உடன்பட்டிருத்தல் வேண்டும்.
இதன் மூலம்,
# நிர்வாக நடவடிக்கைகளை இரு மொழிகளிலும் எடுத்துச் செல்லக் கூடிய நிலை தோன்ற வேண்டும்.
# அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் அந்தஸ்தானது நேரடியாக பாராளுமன்றத்துடன் தொடர்புடையதாக்கப் பட வேண்டும்.
# சகல பிரஜைகளதும், சகல மட்ட எதிர்ப்பார்ப்புக்களை அரசாங்கம் பூர்த்தி செய்ய வேண்டும் .
பல தசாப்தங்களாக நிலவி வரும் இன முரண்பாட்டை சுமூகமாக்குதளுக்கு மொழிப் பன்மைத்துவக் கலாசாரம் அவசியமாகிறது இதற்காக நிர்வாக சீர்திருத்தங்களில் இரு மொழி கொள்கையை அரசு ஏற்க வேண்டும் .
1987ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இரு அரச கரும மொழிக் கொள்கையின் அமுலாக்கத்தின் மோசமான நிலைமையை இப்போது அனுபவித்து வருகிறோம். தமிழ் பேசும் மக்களுடனான தொடர்புகளின் போதும், அவர்களுக்கான சேவைகளை வழங்குதலின் போதும் அவர்களது மொழிப் பயன்பாட்டில் குழப்பமில்லாத நிலை பேணப்பட வேண்டும் என்பது மொழி உரிமை ஆவணங்கள் அதிகரித்தலுக்கான தேவை மட்டுமல்ல, சிங்கள,தமிழ் மொழிகளுக்கிடையிலான, மக்களுக்கிடையிலான சமத்துவ நிலையினை பாரபட்சமின்றிப் உறுதிப்படுத்தக் கூடியதாயும் அமையும் . இனக்குழுமங்களின் மறுக்கப் பட்ட உரிமைகளை பூர்த்தி செய்வதையும் அமையும்.
பல்வேறு கால நிலைமைகளில் அரச மொழியாக்கம் குறித்து பல்வேறு உரையாடல்களும், உறுதிப் படுத்தப் பட்ட போதிலும் அரச கரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் என்பது பொறிமுறை ரீதியில் அமுலாக்கத்திட்கு வரவேயில்லை. தேர்தல் சூடு பிடிக்கும் இக்கால கட்டத்தில் இது பற்றி மீள ஆய்வுக்குத் படுத்துவது சிறப்பானதாய் இருக்கும்.
இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் வாழக்கூடிய பதுளை மாநகரசபையில், 450உத்தியோகத்தர்களுள் ஒருவரே தமிழில் எழுத வாசிக்கத் தெரிந்தவர். கொழும்பு தலைநகர, மாநகரசபையில் 12000பேர்களுள் 100பேரே தமிழில் எழுத வாசிக்கத் தெரிந்தவர். ஹட்டன் போலீஸ் நிலையத்தில்250 பேரில் 20பேரும் , கண்டி கச்சேரிப் பதிவாளர் அலுவலகத்தில் 60பேரில் ஒருவருமில்லை.நுவர எலியா ஆதார வைத்திய சாலையில் 450பேரில் 85மட்டுமே, மேலும் இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் 60இல் தமிழ் மொழி மூலம் தகவல் தெரிவிக்கக் கூடியவர் ஒருவருமே இல்லை. இவை அரச காரியாலயங்களில் மேற்கொள்ளப்பட்ட அண்மைய புள்ளி விபரங்கள் . மக்களுக்கு அரசிடமிருந்து சேவை தேவைப்படும் இவ்வாறான இடங்களில் சிறுபான்மையினர் புறக்கணிக்கப் படுகின்றமை இங்கு கண் கூடு இவை சில உதாரணங்களாகும ;
இலங்கையில் தமிழ் மொழியை, சிங்கள மொழியுடன் இணைந்து அரச கரும மொழி, மற்றும் நிருவாக மொழியாக்கல் மூலம் , சிறுபான்மை மக்களது பாதுகாப்பு, நிர்வாகத்திறன், பொதுவுடைமை, அரச மற்றும் பிற தொழில் முன்னேற்றம், சமூக ரீதியிலான பாரிய கட்டமைப்பு மாற்றம்,பொருளாதார, கல்விநிலை ஏற்றம் என்பன நாட்டில் ஏற்படக் எதுவாகவிருக்கும் . ஆதிக்க மொழியினது பயன்பாட்டாளர்களின் நிர்ணயம் மாற்றப் படுதலுடன் நாடு ஒரு குடைக்குக் கீழே கொண்டு வரப்படும். இலங்கையில் தற்போதைய சூழ் நிலையில் இது கட்டாயமும் நியதியுமாகும்.
(மேலே கூறப்பட்ட அனைத்து புள்ளி விபரங்களும், சட்டக் கோர்வைகளும் உண்மையான, நம்பகமான தகவல்களே, அரசாங்க புள்ளி விபரத் திணைக்களத்திலிருந்து பெறப்பட்டவை .)
நிலா
புதிய தகவல்கள்...
ReplyDeleteஅறிந்திராத தகவல்கள்
ReplyDeleteஉங்கள் தேடுலுக்கு வாழ்த்துக்கள். நிறைய விடயங்கள் சொல்லியிருக்கின்றீர்கள். கொல்வினால் தான் நாம் இப்படி இருக்கின்றோம் என எனது தாத்தாவுடன் நான் அடிக்கடி சண்டை பிடித்திருக்கின்றேன். காரணம் எங்கள் குடும்பம் அந்த நாளில் இருந்து கொல்வின் சமசமாயக் கட்சி அவரின் சின்னம் திறப்பு என நினைக்கின்றேன்.
ReplyDeleteஇருமொழியும் (ஆங்கிலம் தவிர்ந்த) தெரிந்தவர்களே அரச சேவையாளர்களாக இருக்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தால் சுமார் 80 வீதத்துக்கும் அதிகமானோர் தங்களுடைய வேலைகளை இழக்க நேரிடும்.
ReplyDeleteஆனாலும், எதிர்காலத்திலாவது இரு மொழி அறிந்தவர்கள் அரச சேவைகளில் இணைக்கப்படுவதன் மூலம், இரு சமூகத்துக்குமிடையிலுள்ள மன கசப்புக்களை ஓரளவு குறைக்க முடியும்.
அத்துடன், சாமானிய மக்களின் அரச மற்றும் அலுவலக நடைமுறைகள் ஓரளவு இலகுபடுத்தப்படும். நல்ல பதிவு தர்ஷாயினி.
////வந்தியத்தேவன் said 11/1/10 9:08 AM
ReplyDeleteஉங்கள் தேடுலுக்கு வாழ்த்துக்கள். நிறைய விடயங்கள் சொல்லியிருக்கின்றீர்கள். கொல்வினால் தான் நாம் இப்படி இருக்கின்றோம் என எனது தாத்தாவுடன் நான் அடிக்கடி சண்டை பிடித்திருக்கின்றேன். காரணம் எங்கள் குடும்பம் அந்த நாளில் இருந்து கொல்வின் சமசமாயக் கட்சி அவரின் சின்னம் திறப்பு என நினைக்கின்றேன்./////
கொல்வின் ஆர். டி சில்வா இலங்கை அரசாங்கத்தில் அமைச்சரானதும் தெரிவித்த கருத்துக்கள் என்னவென்று தெரியும்தானே வந்தியரே…..
பல தசாப்தங்களாக நிலவி வரும் இன முரண்பாட்டை சுமூகமாக்குதளுக்கு மொழிப் பன்மைத்துவக் கலாசாரம் அவசியமாகிறது இதற்காக நிர்வாக சீர்திருத்தங்களில் இரு மொழி கொள்கையை அரசு ஏற்க வேண்டும் . //
ReplyDeleteஅப்படிப்போடுங்க.. அடிக்கடி என்னை மாதிரி பாமர மக்களுக்கு புரியுமாறும் இப்படிப்பட் ட பதிவுகளை போடுமாறு வேண்டிக்கொள்கிறேன்.. நல்ல தேடல்.. எங்களுக்கும் பயனாயிருந்தது.. ஆனால் இத நடக்கு மா தெரியாது.. :(
இலங்கை விஜயகாந்தி... ;)
ReplyDeleteநான் சொல்ல வந்தவற்றை ஏற்கனவே நம்மவர்கள் சொல்லிவிட்டதால் என் வேலையை இத்தால் இலகுவாக்கிக் கொள்கிறேன்...
//உங்கள் தேடுலுக்கு வாழ்த்துக்கள். நிறைய விடயங்கள் சொல்லியிருக்கின்றீர்கள் //
இது...
//அப்படிப்போடுங்க.. அடிக்கடி என்னை மாதிரி பாமர மக்களுக்கு புரியுமாறும் இப்படிப்பட் ட பதிவுகளை போடுமாறு வேண்டிக்கொள்கிறேன்.. நல்ல தேடல்.. எங்களுக்கும் பயனாயிருந்தது.. ஆனால் இத நடக்கு மா தெரியாது.. :( //
இது....
நல்ல பதிவு.... :)
மிகச் சிறந்த ஒரு பதிவு!
ReplyDelete”இரு மொழி, ஒரு நாடு - ஒரு மொழி, இரு நாடு” எனச் சொன்ன இதே கொல்வின் ஆர் டி சில்வா தான் 1972ம் ஆண்டின் 1ம் குடியரசு யாப்பை வரைந்த பிதாமகர்! இலங்கையில் சிங்களத்தை ஆட்சிமொழியாகவும், பௌத்தத்தை ஆளும் மதமாகவும் பிரகடனப்படுத்திய முதலாவது அரசியலமைப்பை வரைந்த குழுவின் தலைவர் கொல்வின். இதெல்லாம் செய்து விட்டு அரசியலமைப்பு பிரகடன உரையில் “இது கொல்வின் ஆர் டி சில்வாவின் (எனது) அரசியலமைப்பல்ல - ஸ்ரீமாவோ அரசாங்கத்தின் அரசியலமைப்பு” எனச் சொன்னார்!
சும்மா இருந்த தேசத்தில் - ஏதாவது புதுப்பிரச்சினையைக் உருவாக்கினால் தான் - தான் ஆட்சிக்கு வரமுடியும் என எண்ணிய பண்டாரநாயக்கதான் இந்த அதீத இனவாதத்தின் சூத்திரதாரி. முன்னரெல்லாம் அரசியலளவில் இனவாதம் இருந்திருந்தாலும் மக்கள் மத்தியில் அது பெரிதாக இருக்கவில்லை, நல்ல சுமுக உறவிருந்தது - அதை மாற்றி மக்கள் மத்தியில் இனவாதத்தைத் திணித்து சிங்கள பௌத்த வாதத்தை அதீதமாக தூண்டிவிட்டது பண்டாரநாயக்க தான் - அதன் படி தான் தேர்தல் வெற்றியின் பின் 1956ம் ஆண்டின் அரசகரும மொழிச் சட்டம் கொண்டுவரப்பட்டது (தனிச் சிங்களச் சட்டம்).
நல்ல பதிவு - இது போன்ற இன்னும் அதிகமான பதிவுகளை எதிர்பார்க்கின்றேன்.
இதை சிங்களத்தில் எழுதக்கூடிய ஆக்கள் யாராவது இருக்கினமோ?
ReplyDeleteபல விஷயங்களை தெரிந்துக்கொண்டேன்..தர்ஷாயணீ! அசர வைக்கிறது தொகுத்திருக்கும் பாங்கு! நல்ல இடுகைக்கு நன்றி!
ReplyDeleteஉங்கள் பதிவை வாசிக்கிறேன்.
ReplyDelete// இல்லாமைக்கும் இருப்புக்கும் ஏதடா பேதம்? .......//
ReplyDeleteவார்த்தைகள் இல்லை, உனை வணங்க.
//என்.கே.அஷோக்பரன் said,
ReplyDeleteமிகச் சிறந்த ஒரு பதிவு!
”இரு மொழி, ஒரு நாடு - ஒரு மொழி, இரு நாடு” எனச் சொன்ன இதே கொல்வின் ஆர் டி சில்வா தான் 1972ம் ஆண்டின் 1ம் குடியரசு யாப்பை வரைந்த பிதாமகர்! இலங்கையில் சிங்களத்தை ஆட்சிமொழியாகவும், பௌத்தத்தை ஆளும் மதமாகவும் பிரகடனப்படுத்திய முதலாவது அரசியலமைப்பை வரைந்த குழுவின் தலைவர் கொல்வின். இதெல்லாம் செய்து விட்டு அரசியலமைப்பு பிரகடன உரையில் “இது கொல்வின் ஆர் டி சில்வாவின் (எனது) அரசியலமைப்பல்ல - ஸ்ரீமாவோ அரசாங்கத்தின் அரசியலமைப்பு” எனச் சொன்னார்!
சும்மா இருந்த தேசத்தில் - ஏதாவது புதுப்பிரச்சினையைக் உருவாக்கினால் தான் - தான் ஆட்சிக்கு வரமுடியும் என எண்ணிய பண்டாரநாயக்கதான் இந்த அதீத இனவாதத்தின் சூத்திரதாரி. முன்னரெல்லாம் அரசியலளவில் இனவாதம் இருந்திருந்தாலும் மக்கள் மத்தியில் அது பெரிதாக இருக்கவில்லை, நல்ல சுமுக உறவிருந்தது - அதை மாற்றி மக்கள் மத்தியில் இனவாதத்தைத் திணித்து சிங்கள பௌத்த வாதத்தை அதீதமாக தூண்டிவிட்டது பண்டாரநாயக்க தான் - அதன் படி தான் தேர்தல் வெற்றியின் பின் 1956ம் ஆண்டின் அரசகரும மொழிச் சட்டம் கொண்டுவரப்பட்டது (தனிச் சிங்களச் சட்டம்).
நல்ல பதிவு - இது போன்ற இன்னும் அதிகமான பதிவுகளை எதிர்பார்க்கின்றேன்.//
//நல்ல சுமுக உறவிருந்தது - அதை மாற்றி மக்கள் மத்தியில் இனவாதத்தைத் திணித்து சிங்கள பௌத்த வாதத்தை அதீதமாக தூண்டிவிட்டது பண்டாரநாயக்க தான் //
மகாஜன எக்சத் பெரமுன வெற்றியின் காரணம் மிகச் சாதாரண மக்களுடன் புழங்கும் மனிதர்களை சூழ்ச்சியால் மேடைஎற்றியமையே...
எம். எஸ் .தேமிஸ் என்ற தபால்க்காரர், பௌத்தபிக்குவும் கவிஞருமான சாரங்க பாலசூரிய எனும் காவியுடை தரித்தவர், டி. பி. தென்னக்கோன் எனும் நாட்டுப் புற பாடகர் ....இவர்களைத் தயார்ப் படுத்தியே மக்கள் வாக்கைப் பெற்றார் பண்டாரநாயகம்.....
1956மொழியினைப் பிரதான தொனிப் பொருளாகக் கொண்ட மக்கள் ஐக்கிய முன்னணி 51தேர்தல்த் தொகுதிகளைக் கைப்பற்றியதுடன், கொல்வினது சமசமாஜக் கட்சி 14ஆசனங்களையும் பெற்றது. இது பெரிய நகைச்சுவை.
பண்டாரநாயகா அரசாங்கத்தின் தேர்தல் வெற்றியின் பின்னர், தேர்தல் காலத்தில் அறிவித்திருந்த வாக்குறுதிப்படி பெரும்பான்மை மக்கள், சிங்கள மொழியை அரச கரும, நிர்வாக மொழியாக மாற்றக் கூறினர். அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும், சிங்களத்தில் பணியாற்ற முடியாதவர்கள் மொழிமாற்றத்திற்கு பழக்கமடைவதட்கு ஒரு கணிசமான கால நீட்சியை வழங்கினர்.
சிங்கள மொழியை தேசிய மொழியாக்கப்படுவதட்கான சட்டத்தினை ஏற்படுத்தவல்ல பாராளுமன்றக் குழுவானது 1960ஜனவரி முதலாம் திகதி வரை ஆங்கிலம், மற்றும் தமிழை சாதாரண நிர்வாகத்தின் பொது பயன்படுத்திக் கொள்ள ஒரு உப சரத்தினை வழங்கியது,
மக்கள் ஐக்கிய முன்னணி ஆதரவாளரும் இலங்கை பல்கலைக் கழகத்தின் பொருளியல் விரிவுரையாளருமான கல்வி மான் எப்.ஆர். ஜெயசூர்ய , இந்த அரைச் சட்டத்திற்கு எதிராக, பாராளுமன்ற வளாகத்துக்கு முன்பாக உண்ணாவிரதம் இருந்தவர்.... இந்த உபசரத்தை மறுசீரமைப்பதாக பிரதமர் பண்டாரநாயக்கா தெரிவித்ததும் தான் ஓய்வுக்கு வந்தார்.
இவர் தான் சிறுபான்மை மொழியமுலாக்கத்தின் கண் அதிக பங்கு கொண்டவர், கொல்வினார் டீ சில்வாவை விட....
இன்னும் நிறைய எழுத வேண்டி இருக்கிறது,
அருமையான கருத்துப் பகிர்வுக்கு நன்றி அஷோக்பரன்..!
யாழ்தேவி நட்சத்திரவார வாழ்த்துக்கள்....
ReplyDelete//சிங்கள மொழியை தேசிய மொழியாக்கப்படுவதட்கான சட்டத்தினை ஏற்படுத்தவல்ல பாராளுமன்றக் குழுவானது 1960ஜனவரி முதலாம் திகதி வரை ஆங்கிலம், மற்றும் தமிழை சாதாரண நிர்வாகத்தின் பொது பயன்படுத்திக் கொள்ள ஒரு உப சரத்தினை வழங்கியது,
ReplyDeleteமக்கள் ஐக்கிய முன்னணி ஆதரவாளரும் இலங்கை பல்கலைக் கழகத்தின் பொருளியல் விரிவுரையாளருமான கல்வி மான் எப்.ஆர். ஜெயசூர்ய , இந்த அரைச் சட்டத்திற்கு எதிராக, பாராளுமன்ற வளாகத்துக்கு முன்பாக உண்ணாவிரதம் இருந்தவர்.... இந்த உபசரத்தை மறுசீரமைப்பதாக பிரதமர் பண்டாரநாயக்கா தெரிவித்ததும் தான் ஓய்வுக்கு வந்தார். //
உண்மையில் அரசியலின் மறுபக்கங்களைப் பார்த்தால் அவை சிரிப்பை மட்டுமல்ல வெறுப்பையும் தரும். எஃப்.ஆர்.ஜெயசூரிய உண்ணாவிரதம் இருந்தார் ஆனால் அரசியலில் நான் கண்ட, கேள்விப்பட்ட உண்மையின் படி என்னால் உணர முடிகிறது அது கட்டாயம் பண்டாரநாயக்கவின் அப்பட்டமான நாடகம் தான். சில விஷயங்களை இப்படி, இப்படிச் செய்வதில் பண்டாரநாயக்க, ஜே.ஆர் ஆகியோர் மலைகள். அவர்கள் செய் என்று சொன்னால் பல “கல்விமான்கள்” செய்யத் தயாராகவிருந்தார்கள் என்பது அப்பட்டமான, கேவலமான உண்மை! - இலங்கையை வாழ வைத்தவர்கள் மட்டுமல்ல வீழவைத்ததிலும் இந்தக் “கல்விமான்களின்” பங்கு அதிகம் இருக்கிறது!
யாழ்தேவி நட்சத்திரவார வாழ்த்துக்கள்....& பொங்கலோ பொங்கல் .....
ReplyDelete//என்.கே.அஷோக்பரன் said,
ReplyDelete//சிங்கள மொழியை தேசிய மொழியாக்கப்படுவதட்கான சட்டத்தினை ஏற்படுத்தவல்ல பாராளுமன்றக் குழுவானது 1960ஜனவரி முதலாம் திகதி வரை ஆங்கிலம், மற்றும் தமிழை சாதாரண நிர்வாகத்தின் பொது பயன்படுத்திக் கொள்ள ஒரு உப சரத்தினை வழங்கியது,
மக்கள் ஐக்கிய முன்னணி ஆதரவாளரும் இலங்கை பல்கலைக் கழகத்தின் பொருளியல் விரிவுரையாளருமான கல்வி மான் எப்.ஆர். ஜெயசூர்ய , இந்த அரைச் சட்டத்திற்கு எதிராக, பாராளுமன்ற வளாகத்துக்கு முன்பாக உண்ணாவிரதம் இருந்தவர்.... இந்த உபசரத்தை மறுசீரமைப்பதாக பிரதமர் பண்டாரநாயக்கா தெரிவித்ததும் தான் ஓய்வுக்கு வந்தார். //
உண்மையில் அரசியலின் மறுபக்கங்களைப் பார்த்தால் அவை சிரிப்பை மட்டுமல்ல வெறுப்பையும் தரும். எஃப்.ஆர்.ஜெயசூரிய உண்ணாவிரதம் இருந்தார் ஆனால் அரசியலில் நான் கண்ட, கேள்விப்பட்ட உண்மையின் படி என்னால் உணர முடிகிறது அது கட்டாயம் பண்டாரநாயக்கவின் அப்பட்டமான நாடகம் தான். சில விஷயங்களை இப்படி, இப்படிச் செய்வதில் பண்டாரநாயக்க, ஜே.ஆர் ஆகியோர் மலைகள். அவர்கள் செய் என்று சொன்னால் பல “கல்விமான்கள்” செய்யத் தயாராகவிருந்தார்கள் என்பது அப்பட்டமான, கேவலமான உண்மை! - இலங்கையை வாழ வைத்தவர்கள் மட்டுமல்ல வீழவைத்ததிலும் இந்தக் “கல்விமான்களின்” பங்கு அதிகம் இருக்கிறது!//
கல்வி மான் எப் ஆர் ஜயசூரியவை பாராளுமன்ற அமைச்சர்கள் கூட்டத்திற்கு நடுவில் உரையாற்ற அனுமதித்ததும் தான் உண்ணாவிரதத்தை கைவிட்டார். அந்த உரைக்குப் பின் ஆளுங்கட்சியானது சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்கும் அனைத்து உபசரத்துக்களையும் இல்லாமல்ச் செய்ய முடிவு செய்தது.
இதிலிருந்து தெரிகிறதே பிரதமரின் முற்கூட்டிய ஒத்திகை இது என்பது.......,,,