பழங்கவிதைகள் சிலவற்றை ப்ளாக்கில் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்.இவை அனைத்துமே 2007ஆம் ஆண்டுக்கு முற்பட்டவை. பள்ளிக்கூடக் காலத்தில் எழுதப்பட்டவை. தொலைந்து போன சில தடயங்களைத் தேடித் பகிந்துகொள்வதில் உள்ள ஆவணப்படுத்துகை, ஒருவகை நிறைவானதும், இன்பமானதும் கூட. இன்றைய எழுத்துக்கும் அன்றைய எழுத்துக்குமிடையிலான இடைவெளியை இன்னமும் வியந்துகொண்டிருக்கிறேன். நிலா.லோ 2012 இந்தத் தொப்பி....... இந்தத் தொப்பி யாருக்குப் பொருத்தமென்று இளையோரையெல்லாம் கேட்டு வைத்தான். இன்னோரன்ன இழவுகளாலே இனிப் பொருத்தமென்றால் இது தான் என்றான். அவனைக் கண்டவரெல்லாம் அது அவனுக்குத் தானென்றார். இவனைக் கண்டவரெல்லாம் அது இவனுக்குமென்றார். ஒருவரும் தனக்கென்று சொல்லி தலை கொடாமல் சென்ற போது- அந்தோ அது வந்துதலையில் வீழ்ந்து -தெறித்து, முன்னோர் அலறி முறை கெடும் வண்ணம் வீணாய்ப் போனார் எம்மின மக்காள்! 2004 கற்புடை பாடலொன்று! பூனைக்குட்டிகளைச் சாம்பலக் கிடங்குக்குள் வளர்க்கும் பெண்களைப் பற்றி கற்புடை பாடலொன்று பாடவா? இறுதி முறையாக த...