Skip to main content

Posts

Showing posts with the label சமத்துவம்

பொதுவுடைமைப் பாடலொன்று!

முத்தமொன்று முடியும் போது காதல் முடிஞ்சு போகுது -கண்ணையா ! உன் முதுகுத் தண்டில் வீரம் பாய்கையில் அதுவும் பழசாய்ப் போகுது -சின்னையா ! பித்தம் ஏறித் தலைக்கணம் கூடையில் வாழ்க்கை சிதைஞ்சு போகுது -கண்ணையா ! நித்தம் நாமேன் நிமிர்ந்து எழுந்து- யுத்தம் செய்தால் என்னய்யா ? அச்சம் பயிர்ப்பு அடிமைகள் உடைப்பு அவரவர் அளவுக்கு ஏத்தாப் போல் சித்தம் போன போக்கைக் கொஞ்சம் சிதைச்சு வெச்சா என்னய்யா ? அடுத்தவர் பிழைப்பும் அடிமைக்குச் சோறும் அதுவும் நம்ம வாழ்க்கை தான்- அரமணை போல இருக்கிற வாழ்க்கை அதுவும் நமக்கு கீழை தான் ! இருக்கிற சோற்றை இரவலா வாங்கி இனிக்கிற வாழ்க்கை எதுக்கையா? இனி, இனிக்கும் இறுக்கும் எல்லாம் சிறக்கும்-சொன்னால் கொஞ்சம் கேப்பாயா ? ஓடுற நதியில் ஒரு பகல் தின்று ஒடுக்கும் மனிதரை ஓசையில் வென்று ஆடுற மழயில் அரை வரை நனைஞ்சு அங்கொரு தீயைச் சமைப்போமே ! மூழ்கிற வெள்ளம் தலை வரை வந்தால் மொண்டு கடலைக் குடிப்போமே ! சாகிற வரையில் சரிசமனாக சரிஞ்சும் வளைஞ்சும் கொடுப்போமே ! போகிற பாதை புதுசெனத் தெரிஞ்சால் புலரும் வரையில் க