Skip to main content

Posts

Showing posts with the label காதல்

பொதுவுடைமைப் பாடலொன்று!

முத்தமொன்று முடியும் போது காதல் முடிஞ்சு போகுது -கண்ணையா ! உன் முதுகுத் தண்டில் வீரம் பாய்கையில் அதுவும் பழசாய்ப் போகுது -சின்னையா ! பித்தம் ஏறித் தலைக்கணம் கூடையில் வாழ்க்கை சிதைஞ்சு போகுது -கண்ணையா ! நித்தம் நாமேன் நிமிர்ந்து எழுந்து- யுத்தம் செய்தால் என்னய்யா ? அச்சம் பயிர்ப்பு அடிமைகள் உடைப்பு அவரவர் அளவுக்கு ஏத்தாப் போல் சித்தம் போன போக்கைக் கொஞ்சம் சிதைச்சு வெச்சா என்னய்யா ? அடுத்தவர் பிழைப்பும் அடிமைக்குச் சோறும் அதுவும் நம்ம வாழ்க்கை தான்- அரமணை போல இருக்கிற வாழ்க்கை அதுவும் நமக்கு கீழை தான் ! இருக்கிற சோற்றை இரவலா வாங்கி இனிக்கிற வாழ்க்கை எதுக்கையா? இனி, இனிக்கும் இறுக்கும் எல்லாம் சிறக்கும்-சொன்னால் கொஞ்சம் கேப்பாயா ? ஓடுற நதியில் ஒரு பகல் தின்று ஒடுக்கும் மனிதரை ஓசையில் வென்று ஆடுற மழயில் அரை வரை நனைஞ்சு அங்கொரு தீயைச் சமைப்போமே ! மூழ்கிற வெள்ளம் தலை வரை வந்தால் மொண்டு கடலைக் குடிப்போமே ! சாகிற வரையில் சரிசமனாக சரிஞ்சும் வளைஞ்சும் கொடுப்போமே ! போகிற பாதை புதுசெனத் தெரிஞ்சால் புலரும் வரையில் க...

இந் நதி தீரம் நமக்குச் சொந்தமானது.....

                                                          சித்திரை போய் வைகாசி வந்தாலும் ஆழம் குறையாத அகன்ற நீர்ப்பரப்பு தெளிந்த மனம் போல சிதறாத வான் நிழல் நாணம் பற்றிச் சிந்திக்காத நாமிருவர்-நம்மிடையே நலிந்து தோற்றுப் போன வெட்கம்; சிக்கனம்; இன்னும் பிற கக்கணம். நீண்ட மணற்பரப்பில் நீர் துள்ளி ஓடும் மீன்களற்ற தாழை மடல் கசங்கிக் கிடக்கும். ஆற்றங்கரையின் வளைந்த மூங்கிலுக்குள் கீச்சிடுவேன் நான். கருதுதல் ஒரு பிழையுமஅல்லவே ?-நாங்கள் வாதித்திருப்போம் ! வசந்தங்கள் போய் கோடை வருகையில், குளம் குட்டி மீன்களும் குறுனிப் பேத்தைக்களுமாய்  தவம் கிடக்கும். நல்ல கொக்குகளிற்கு நளினம் பிடிபடாது ! நமக்கென்ன கொக்கு துரத்தும் வேலையா? கொஞ்சம் கூடி பற்றைக்குள் படுத்திருப்போம். புள் உரசு...

திரும்புவதற்குச் சாத்தியமற்ற குரல்........

திரும்புவதற்குச் சாத்தியமற்ற உன் குரல் தேடல்கள் தொலைந்து போன ஒரு  அந்தியில் என்னிடம் ஓடி வருகின்றன. நீ கோபப் படுவாய் என்பதற்காய் குரலில் மன்னிப்பு நிறைந்த கெஞ்சலை  அவிழ்த்துப் போட்டுக் கொண்டிருக்கிறேன். மன்னிப்பின் தீவிரத்தில் நீ  திட்ட மறந்த வார்த்தைகள்  நாளைக்காய் கிடப்பிலிருக்கிறது. மெல்ல,  நொடிப் பொழுதில்  நான் உன் கர்வம் என்பது போல் நான் உன்னில் நிறைந்து நிற்கும்  மந்திரக் கணத்தை ஆகர்ஷிக்க முற்படுவேன். உடனேயே, என்னிலிருந்து விலகும் வெளிச் சுவாசம் போல உன்னிலிருந்து விண்டு பிளவு படும் ஆக்ரோஷம் வெட்கமேயின்றி என்னைத் திட்டும். சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த என் மானம் மலினமாகும். மூடு பனியின் நளினங்கள் சாகும். நீ உச்சத்தில் இருப்பாய், நான் பாதத்தில் இருப்பேன். முன்னை விடத் தெளிவாக தீர்மானமாக, எல்லா நாளிலும் என் அழைப்பின் போது நீ சொல்லும்  தாரக மந்திரத்தை இப்போதும் சொல்ல மறக்க மாட்டாய். வழிகிற கன்னங்களை நான்...

கண்ணன் பாடல்

சொன்ன பொருளிலெலாம் கண்ணா சேதி சொல்ல மறந்தாயோ ! - சேதி-சொன்ன பொருளிலெல்லாம் கண்ணா மீதி சொல்ல மறந்தாயோ- மீதி- சொல்லியிருந்தும் கண்ணா பாதி சொல்லினை மறந்தாயோ- பாதி-சொல்லிலும் ஒரு சொல் சொல்லாமல் நின்றாயோ- சொல்லாமல் நின்றதினால் சோதி என்று ஆனாயோ- சோதி என்று ஆனவனே சேதி ஒன்று தாராயோ ? கேள்வி உன்னைக் கேட்பதற்கே வேள்வி பலம் தாராயோ - வேள்வி நிதம் செய்வதற்கே தோளில் பலம் தாராயோ- தோளில் பலம் சேர்த்து விட்டு தோல்வியினைச் சேர்ப்பாயோ- தோல்வியினைத் தோள் கொடுக்க துன்பமினைத் தருவாயோ- துன்பமிதைச் சேர்த்துவைக்க தொல்லையினைத் தாராயோ- தொல்லைகளின் தொன் முடிவில் உன் புன் முகத்தைத் காட்டாயோ- தோல்வி ஒன்று கண்ணா நீ என் தோளில் வந்து ஏற்றாதே- ஆழி பயில் மன்னா நீ என் காலில் பழி சேர்க்காதே - வாலிபத்தை ஒரு வழியாய் வலி நிறைத்து விற்காதே- உன் விற்பனையை விஞ்சுமொரு விலை மதிப்பைச் செய்யாதே- விலை போவார்க் குலமொழுக கொஞ்சும் படி நிற்காதே- தானாய்க் -கொஞ்சுமொரு அஞ்சுகத்தைக் கச்சவிழத் தள்ளாதே ! தேளை விட்டுத் தேன் பருக, சாலை விட்டுத் தேர் விலக காளை விட்டுப்போன பின்னே புதுப...

எஞ்சாமி நீயி எப்ப வருவ?...

ஒண்ணுமே சொல்லாம போன எஞ்சாமி ! குத்தமொன்னு சொல்ல- குமுறியழ நீங்க இல்ல- ஒன்னுக்கு ஒண்ணா உசிரா வளத்துப்புட்டேன்-  உக்காந்து தேத்திவிட -நீங்க இல்ல எஞ்சாமி ! இவ கிடக்கா சிறுக்கியின்னு இம்புட்டும் இரங்காம- விறைப்பா நீரு, வில்லங்கமாப் போனீரு, கண்ணுக்குள்ள நீரு வரப்பத் தாண்டுது-  ஆத்தில தண்ணி அடிச்சிகிட்டு ஓடுது- எருக்கம் வித கையிருக்கு- அரளி வித அரைச்சிருக்கு-  எஞ்சாமி நீயி எப்ப வருவ?........... ஒத்தையில நட்டு வெச்ச மரம் போல வாடி நிக்கேன்- வாடிய பயிருக்கு வாழ கொஞ்சம் பச்சை கொடு. கத்தியில கட்டி வெச்ச  காய் போல காஞ்சிருக்கு- காயெல்லாம் தேஞ்சு என் வாய் போல பொளந்திருக்கு- வேணாஞ்சாமி நான் உன்னைக் குறை சொல்ல எல்லாத் தப்பும் எம்மெல்ல எஞ்சாமீ- குடை பிடிச்சு இங்காரும்  நெய் விளக்கு  ஏத்துவாரோ? கோடியில யாரும் கொடி வெச்சு தூத்துவாரோ ? ஐப்பசியில் மழை பேஞ்சு ஆவணியில் காத்தடிச்சா சித்திரையில், செங்கரும்பு சீனிபோல தித்திக்கும்முன்னு, ஒத்தையில போன எறும்புகளைப் புடிச்சி வெச்சி- ஒத்தடம் கொடுத்த...

ஒன்றுமே நடக்காதது போல -கவிதை-

-நிலா-  4-4-2009                                          புற்களில் உட்கார்ந்து எழும்   பூச்சிகள் பறக்க,   மாட்டுச்  சாணமோ என்னமோ ஒன்று ,   காலில் மிதி படாமல் ,   லாவகமாகத் தப்பி- தெருக் கரையில் புரண்டோடும் - சிறு வாய்க்காலுக்குள் விழுந்து விடாமல் - சீமெந்துத் தரை பிடித்து ஒண்டிக்கொண்டே - ஆர் மேலும் உரசிக் கொள்ளாமல் நடந்து, எல்லாத்துக்கும் ஒரே புன்னகை தான்-   நிரம்பக் கதைக்க வேண்டும் போல் இருந்தாலும், ஒற்றை வார்த்தை தான். பெரும்பாலும் இருட்டுத் தான் - ஏதாவது   பொதுக் கூட்டத்தின் முடிவிலாய் இருக்கும் - எங்கள் புறப்படும் பயணம்.   நாலடி தள்ளி அல்லது விலகி   சேர்ந்தாட் போல அல்லது முன்னுக்கும் பின்னுக்குமாய் - சீ சீ ...., பொதுவாய்ச் செர்ந்தால்ப் போலத் தான்.. நடக்க நடக்க இன்னும் வீடு, தூரம் போய்ச் சேர வேண்டும் போல் - ஒன்...