சொன்ன பொருளிலெலாம் கண்ணா சேதி சொல்ல மறந்தாயோ ! -
சேதி-சொன்ன பொருளிலெல்லாம் கண்ணா மீதி சொல்ல மறந்தாயோ-
மீதி- சொல்லியிருந்தும் கண்ணா பாதி சொல்லினை மறந்தாயோ-
பாதி-சொல்லிலும் ஒரு சொல் சொல்லாமல் நின்றாயோ-
சொல்லாமல் நின்றதினால் சோதி என்று ஆனாயோ-
சோதி என்று ஆனவனே சேதி ஒன்று தாராயோ ?
கேள்வி உன்னைக் கேட்பதற்கே வேள்வி பலம் தாராயோ -
வேள்வி நிதம் செய்வதற்கே தோளில் பலம் தாராயோ-
தோளில் பலம் சேர்த்து விட்டு தோல்வியினைச் சேர்ப்பாயோ-
தோல்வியினைத் தோள் கொடுக்க துன்பமினைத் தருவாயோ-
துன்பமிதைச் சேர்த்துவைக்க தொல்லையினைத் தாராயோ-
தொல்லைகளின் தொன் முடிவில் உன் புன் முகத்தைத் காட்டாயோ-
தோல்வி ஒன்று கண்ணா நீ என் தோளில் வந்து ஏற்றாதே-
ஆழி பயில் மன்னா நீ என் காலில் பழி சேர்க்காதே -
வாலிபத்தை ஒரு வழியாய் வலி நிறைத்து விற்காதே-
உன் விற்பனையை விஞ்சுமொரு விலை மதிப்பைச் செய்யாதே-
விலை போவார்க் குலமொழுக கொஞ்சும் படி நிற்காதே-
தானாய்க் -கொஞ்சுமொரு அஞ்சுகத்தைக் கச்சவிழத் தள்ளாதே !
தேளை விட்டுத் தேன் பருக, சாலை விட்டுத் தேர் விலக
காளை விட்டுப்போன பின்னே புதுப் பாலையொரு பசு தருமோ!
ஆளை விட்டு ஊர் புழங்க, ஊளை விட்டு நரி கலங்க
மாலை இடப் போன கையை மறப்பாளோமலர்க்க்கணிகை !
கோழி போலக் கொத்தி வந்து மடிக் கொய்யகத்தில் கட்டி வந்து-
பல்லிழிக்கும் பல்லி போலே பலமார்கதையே சொல்லிடுவேன் -
உள்ளிருக்கும் உன் நேசம் எட்டு எள்ளெனப் பிரித்தாலும்
கள் மணக்கும் காம் -பூவாய் காய் மணப்பேன்- பின் பூப்பூப்பேன் !
சோலையிலே சொல்லெடுத்து ஆலையிலே கரும் பூ - வெடுத்து-
காலையிலே கண் வளர்ப்பேன்- காணாத இரவைக் காட்டி!
ஆன மொத்தம் நீ மருகா இந்த ஏழை பக்கம் ஏன் உருகாய் -
ஆளில்லாத கிழம் போல் ஏன் அடுப்படியில் இன்னும் கிடந்தாய்!
ஆம்பல் மலர்க் கொய்து உன்றன் கால் பணிய ஆசை !
என்றன் ஆழி பயிர் மொண்டு வந்து சேவை செய்ய மாஞ்சை!
மோகம் என்னை வாட்டும் வரை-
என் தேகம் எங்கே தேக்கம்.
என் தேகம் எங்கே தேக்கம்.
தாகம் என்று சொல்ல மாட்டேன் தர்க்கம் இல்லை கண்ணா-
ஆன மட்டும் ஆக விடு என் ஆவியினைப் போகவிடு
போன வுயிர் புறக்கணிக்க -
உன் புண்ணியத்தை மறந்து விடு!
உன் புண்ணியத்தை மறந்து விடு!
-நிலா-
இந்தப்பாட்டு / கவிதை "வலஜி" ராகத்தை அடிப்படையா மனதில வெச்சுக் கொண்டு மெட்டுப் போடாமலேயே ஒரு இறுக்கமான இடை ராத்திரியில், கிறுக்கினது :)
இந்தப்பாட்டு / கவிதை "வலஜி" ராகத்தை அடிப்படையா மனதில வெச்சுக் கொண்டு மெட்டுப் போடாமலேயே ஒரு இறுக்கமான இடை ராத்திரியில், கிறுக்கினது :)
2010
Comments
Post a Comment