Skip to main content

Posts

Showing posts with the label கடவுளாலாபனை

மலபரிபாகம் !

                                         விரிவாக நான் ஒன்றுமே இன்னமும் எழுதவில்லை. என் எழுத்தில் இருந்து விரவி ஓடும் எச்சில் ஈயைப் போல காலத்தின் முன் சிறு முட்களைப் போல இப்படிப் பல 'போல'  வாக நீ தள்ளி ஓடுகிறாய். காப்பிய மானத்தைப் பற்றி அக்கறை கொண்டவனாக நீ இருக்கையில், அதில் பாதி காப்பாற்றிய மானமாவது எனக்கிருக்கக் கூடாதா? இல்லை, இருக்கக் கூடாது. அகம்பாவத்தின் அடிச் செருக்கு நீ, உனக்கேற்றாட் போல உன் மான விபரத்தைக் கூட்டிக் குறைக்கிற பொறுப்பு உன்னிடமில்லை. எந்தவொரு உயிரின் மீது நீ அளவு கடந்த பாசத்தை வைக்கிறாயோ, அந்த நொடி முதல் நீ  மனதாலும் உடலாலும், சமூகத்தாலும் பலவீனனாகிறாய். ஆக நீ கோழையாகி விட்டாய். 'குரு தேவா, நான் மலபரிபாகம் பால் ஆட்கொள்ளப் பட்டவள் என்பதை நீங்கள் தானே சொல்லியிருந்தீர்கள்?'  .....ஹஹ் பூ.....மலபரிபாகமா, நேற்று முதல் நீ அப்படியிருந்திருக்கலாம்,இன்று கடிகார முள்ளைப் பார்த்தாயா, காலத்தின் நிகண்டில் குத்திட்டு நிற்கிறது. ஒருகாலமும் முடியாது,உன்னால் ஒரு காலமும் முடியாது....! ஆக்ரோஷமாய்க் கத்தினார். மலம் என்று சிறப

கடவுள் பற்றி வாழ்தல் ............

                                                                                                    ....அம்மா, அந்த அனிச்சம் பூ பூக்குமாம்மா?....... பூக்கும் ராசாத்தி.......... 'எப்பம்மா பூக்கும்? .......... ...    மழை நிறையப் பெஞ்சு, காத்தும் சூரிய ஒளியும் தாராளமாக் கிடைக்கிரண்டைக்குப் பூக்கும். ......... "இன் சபிசியன்ட்"   பூட்ஸ் அப்பிடித்தானேம்மா ? ம்ம்ம்........ '' ஏண்டா,  தேவ மகனே , இந்த அனிச்ச மரம் எப்ப பூக்கும்? ......... 'தெரியேல்ல'.............., அது பூத்த அண்டைக்கு அதைப் பிச்சு எனக்குத் தருவியளா? ........... .........இல்லை....., மாட்டன். 'ஏன்? ............. அதை உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. ......சரி, அணிச்சம்பூவைப் பிச்சுத் தரவேண்டாம்.அது எப்ப பூக்குதெண்டு பாத்தியள் எண்டா எனக்குச் சொல்லுவியலா? ......... 'இல்லை...., மாட்டன். 'உங்களுக்கு, 'இல்லை'யையும் 'மாட்டனை'யும் தவிர தமிழில வேற ஒன்டுமும் தெரியாதா? .......???? ...........தெரியுமே, திருப்புகழும், த

கண்ணன் பாடல்

சொன்ன பொருளிலெலாம் கண்ணா சேதி சொல்ல மறந்தாயோ ! - சேதி-சொன்ன பொருளிலெல்லாம் கண்ணா மீதி சொல்ல மறந்தாயோ- மீதி- சொல்லியிருந்தும் கண்ணா பாதி சொல்லினை மறந்தாயோ- பாதி-சொல்லிலும் ஒரு சொல் சொல்லாமல் நின்றாயோ- சொல்லாமல் நின்றதினால் சோதி என்று ஆனாயோ- சோதி என்று ஆனவனே சேதி ஒன்று தாராயோ ? கேள்வி உன்னைக் கேட்பதற்கே வேள்வி பலம் தாராயோ - வேள்வி நிதம் செய்வதற்கே தோளில் பலம் தாராயோ- தோளில் பலம் சேர்த்து விட்டு தோல்வியினைச் சேர்ப்பாயோ- தோல்வியினைத் தோள் கொடுக்க துன்பமினைத் தருவாயோ- துன்பமிதைச் சேர்த்துவைக்க தொல்லையினைத் தாராயோ- தொல்லைகளின் தொன் முடிவில் உன் புன் முகத்தைத் காட்டாயோ- தோல்வி ஒன்று கண்ணா நீ என் தோளில் வந்து ஏற்றாதே- ஆழி பயில் மன்னா நீ என் காலில் பழி சேர்க்காதே - வாலிபத்தை ஒரு வழியாய் வலி நிறைத்து விற்காதே- உன் விற்பனையை விஞ்சுமொரு விலை மதிப்பைச் செய்யாதே- விலை போவார்க் குலமொழுக கொஞ்சும் படி நிற்காதே- தானாய்க் -கொஞ்சுமொரு அஞ்சுகத்தைக் கச்சவிழத் தள்ளாதே ! தேளை விட்டுத் தேன் பருக, சாலை விட்டுத் தேர் விலக காளை விட்டுப்போன பின்னே புதுப

பிச்சிப் பெரும்பாடல் !

ஒய்ய நினவாத ஒன்கடலும் வீழாத, பைய நடவாத பாலுருகிப் பாடாத, ஐய, உன்னை அன்றி ஆயகலை அறியாத, செய்ய அறியாத சேதி அறியாத, கொய்ய மலர்ப்பங்கு கோதிக் குலையாத, பொய்ய உரைத்தாலும் போதும் மறையோயே !  வெங்கு புலையோயே வேறு விளையோயே ! அங்கு அலையாயே ஆழி மழையோயே ! பங்கு சிறுத்தாலும் பாதி கறுத்தாலும்- எங்கும் உனைத் தேடி ஏங்க வைத்தாயே ! வெம்புனல் தீ பெய்து,சங்கர,கனல் செய்து, கொங்கு நின் கோ கழல் பூட்டி, அம்புவி ஆர்த்தெழ வேண்டி, என்புரு ஏய்த்து மாய்த்து, அம்பு நின் அன்பு பாய்ச்சி, ஆணவம் அடியோடழித்து, கொன்றையில் கிலுகிலுப்பை செய்து, கிண்டியில் வேதம் பாய்ச்சி, ஒன்று நான் செய்யப் போக, ஒன் நிழல் ஓய்ந்து போச்சு ! உருவுடையார் எலாம் காண நிற்கிலர்- பெருவுடையார் தோற்றமேலாம் போல நிற்கிறர்- கருவுடைக் கொற்றமெலாம் தீது தைக்கிறர்- தெருவிடையோர் போதல் இன்னும் தேக்க மறுக்கிறர்- தேர்ந்து சொல்லும் வாய் முதலே தெரிதல் பிழையோ-  கூர்ந்து கொல்லும் ஆயுதமே குணத்தில் வெல்லோ?  தேர்ந்து சொல்லச் சேதியில்லை - இங்கோ , நானோர்ஆவுடையாக் கோலமென இப்போ வாய் பிளக்கக் கண்டாய்...!  

இயல் ஒன்று தருவே !

                              விழ ஒணாத நீ - வீழ ஒணாத நீ -அழ ஒணாத நீ- ஆள ஒணாத நீ- பகல் ஒணாத நீ- அகல் ஒண்ணாத நீ-  கங்குல் புகழ் ஒணாதபெரும் பயிற்ருப் புலவ நீ - என்றும் தகல் விளங்கா பெரும்  தருக்கமும் நீ ! கன வளவாத கழ வளவாத வின வளவாத விளை நீ பயில் வளவாத பரு வளவாத அரு மருந்தாகும் அயிர் நீ துணை வளவா இணை வளவா பிணை வளவா பெரும் அத்தன் என்னை ஆள்பவன் நீ ! பொன்னுற்றே பொருளுற்றே துகிலும் அகிலுற்றே  கலையுற்று களியுற்ற என் காலக் கிளை பற்றி நின் தன்னும் வேண்டா தனையும் வேண்டா  தானொடு அடங்கலுற்றேனே ! இரு பகல்வா ஒரு பகல்வா முழுதகலா முதல்வா தரு கருக்கும் விழி பருக்கும் சிறை உதிர்க்கும் தணலா விலை மதிக்கும் மதி பதிக்கும் உலை கொதிக்கும் இனி தகிக்கும் இயல் ஒன்று தருவே ! நிலா - 17 .09 .2010  

ஓசைஒலியெலாம் ஆனாய் நீயே........

இது ஒரு பதில்க்கவிதை ; அவ்வளவு  விளக்கம் இப்போதைக்குக்  காணும் என்ன ? ;)   பிரஜாப சங்கல்பத் தீயினின்றும்  எழுந்து வருகிறது-எனக்கான கீதம். ஆழமான லோகத்தின் ஜென்ம அதரங்களிலிருந்து சாபத்தின் சன்னல் வழியே எழுகிறது-அது, மந்தமான சாத்தானின் பிடியிலிருந்து அதர்மத்தின் இழைகளில் பயணிக்கும் என்னை, ஆலகால விடத்தினின்றும் அருட்சிக்கப்பட்டு நிருதூழியமான-எனது நனவிலி மனதுடன் உரையாடல் வைக்கிறது. தேவதேவனின் குமிழிகளுக்குள் ஒளிந்திருக்கின்ற காலச்சக்கரம்  எந்திரம் போல சுழழுகிறது- இது  ஏந்திழை சம்பந்தமானது. சதசித்து சம்மந்தமாக –ஒரு சச்சிதானந்த பிம்பம் தொடருகின்றது- நெடுநாளாய், அது  நித்திய கைங்கூலியத்திலிருந்து ஈடேற்றமற்ற எனதான்மாவைப்பிளக்கிறது.- அதற்குள்,  நியமம் தவறாத அகிற்புகை கிளம்புகிறது- உன் இசை சம்பந்தமாக....... சவரிக்கப்படாத என் அந்தங்களில் மோட்ச நிருவாணம் உணர்த்தப்படுகிறது! அதீதத்தின் அதீதமே, தேவ தேவா – உன் இரட்சிப்பு  எத்துனை ஆகாம்மியமானது? ரஸமானது? இன்னல் தரும் உன் இசை, ஸ்மரணம், மரணம், கடந்து லஜ்ஜையின்றிய க்

பெரும் பரனோடு பாவி -கவிதை

      மூழ்கிச் சா என் கடவுளே உன் உத்தமத்தின் அறுதியில் அறுதி காண் அம்பலனே ஐம்பெரும் அவத்தையிலே   அறு படுந் தீயில் அயில் பெரும் பரனே பரமொடு பாங்கர் படுத்துறங்கு முன் பாவைப் பழி ஏகில் ஆண்டும் நீ தீ தீண்டாமல் திகம்பரனாய் என்னை திசையணி   பற்றுக்கு மேலாய்ப் பரமன் ஒழிந்திடும்    அற்ற குடிலுக்கு ஊற்றாய் வழிந்திடும் என்னன்னை நீ எற்ற உன்திருக்கால் ஒற்றி    அற்றுப்போகவென இற்றுப் போய் எனதுள்ளம் ! எற்றைக்கும் ஏற்கும் எனப் பணியேனே இச்சை ஆல். ஆல் இச்சை ஆவதுமிச்சை கொச்சை மொழியிலுன் கொற்றம் பிடுங்கி ஓர் பிச்சைப் பாத்திரமேந்தியதன் அட்சய விளிம்பிடுக்கில் அடுத்தடுத்து ஊற்று உன்ரவை ஊற்றிய உறவுதனை ஒருக்களித்துன்ப துன்ப மில்லாப் பொருதி நீ அளி ! அளித்தோய்க்கும் அளி அமுதம் அள்ளி அளி தோய்த்து ஆற அள்ளி கிளி தூக்கும் கிளர்ந்தோங்கும் கிளி முனிவ கிழவா விழவா உன் விழி போலுந் தெளி அசையும் நதிச் சரிவில்-   இலை போல் இல்லா பூப் போல் இல்லா இயல்பிலும் இல்லா கலை போல் இல்லா கருத்திலும் இல்லா கருணையும் இல்லா வசை போல் இல்லா வாசியும் இல்லா முது கொன்றளுமி