மூழ்கிச் சா என் கடவுளே உன் உத்தமத்தின் அறுதியில்
அறுதி காண் அம்பலனே ஐம்பெரும் அவத்தையிலே
அறு படுந் தீயில் அயில் பெரும் பரனே
பரமொடு பாங்கர் படுத்துறங்கு முன் பாவைப் பழி ஏகில்
ஆண்டும் நீ தீ தீண்டாமல் திகம்பரனாய் என்னை திசையணி
பற்றுக்கு மேலாய்ப் பரமன் ஒழிந்திடும்
அற்ற குடிலுக்கு ஊற்றாய் வழிந்திடும்
என்னன்னை நீ எற்ற உன்திருக்கால் ஒற்றி
அற்றுப்போகவென இற்றுப் போய் எனதுள்ளம் !
எற்றைக்கும் ஏற்கும் எனப் பணியேனே இச்சை ஆல்.
ஆல் இச்சை ஆவதுமிச்சை கொச்சை மொழியிலுன் கொற்றம் பிடுங்கி
ஓர் பிச்சைப் பாத்திரமேந்தியதன் அட்சய விளிம்பிடுக்கில் அடுத்தடுத்து ஊற்று உன்ரவை
ஊற்றிய உறவுதனை ஒருக்களித்துன்ப துன்ப மில்லாப் பொருதி நீ அளி !
அளித்தோய்க்கும் அளி அமுதம் அள்ளி அளி தோய்த்து ஆற அள்ளி
கிளி தூக்கும் கிளர்ந்தோங்கும் கிளி முனிவ கிழவா
விழவா உன் விழி போலுந் தெளி அசையும் நதிச் சரிவில்-
இலை போல் இல்லா பூப் போல் இல்லா இயல்பிலும் இல்லா
கலை போல் இல்லா கருத்திலும் இல்லா கருணையும் இல்லா
வசை போல் இல்லா வாசியும் இல்லா முது கொன்றளுமில்லா
நரை போல் திரை என்னை மூப்பில் அழைக்க
உரை தேன் உரைப்பாய் உணர்வேன் உளர்வாய்
ஒழித்து பிறழ்வாய் பிறழேன் பொருவாய் ஒரு வாய்
பொய்யாய் உரைப்பாய் புணர்மின் பெறுவேன்
பரு வாய் முகர்ப்பாய் பதி போல் விரிப்பாய் இனி போய்
உணர்வால் ஒன்றி இருவோம் ஒருவோம்!
நிலா-
2010
2010
Comments
Post a Comment