Skip to main content

Posts

Showing posts with the label காத்திருத்தல்

இந் நதி தீரம் நமக்குச் சொந்தமானது.....

                                                          சித்திரை போய் வைகாசி வந்தாலும் ஆழம் குறையாத அகன்ற நீர்ப்பரப்பு தெளிந்த மனம் போல சிதறாத வான் நிழல் நாணம் பற்றிச் சிந்திக்காத நாமிருவர்-நம்மிடையே நலிந்து தோற்றுப் போன வெட்கம்; சிக்கனம்; இன்னும் பிற கக்கணம். நீண்ட மணற்பரப்பில் நீர் துள்ளி ஓடும் மீன்களற்ற தாழை மடல் கசங்கிக் கிடக்கும். ஆற்றங்கரையின் வளைந்த மூங்கிலுக்குள் கீச்சிடுவேன் நான். கருதுதல் ஒரு பிழையுமஅல்லவே ?-நாங்கள் வாதித்திருப்போம் ! வசந்தங்கள் போய் கோடை வருகையில், குளம் குட்டி மீன்களும் குறுனிப் பேத்தைக்களுமாய்  தவம் கிடக்கும். நல்ல கொக்குகளிற்கு நளினம் பிடிபடாது ! நமக்கென்ன கொக்கு துரத்தும் வேலையா? கொஞ்சம் கூடி பற்றைக்குள் படுத்திருப்போம். புள் உரசு...

முன்னமொரு சகுனிகள்..

                                                முன்னமொரு சகுனிகள் முடிந்து வைத்த கதைகள் பல பின்னையொரு பொழுதிலே பேச்சவிழ்ந்த கதைகள் பல மன்னுமொரு காதல் மருந்தடித்த கதைகள் பல மாட்டிவைத்த அவன் கதையை மாய்ந்து மாய்ந்து-  உரைத்தன பல என்னையொரு நாளில் நீ அடித்துரைத்த கதையும் பல ஏக்கமொருநாளில் ஏங்கி வழிந்த கதையும் பல தோற்க வழியின்றி என்னைத் தோற்பித்த கதையும் பல தாக்க வழியின்றி எனைத் தகர்ப்பித்த கதையும் பல இருட்டிளுந்தன் பேர்தனை இடித்துரைத்த கதைகள் பல இன்னுமின்னும் இங்கிதமில்லாப் பங்கமும் பல கதை அழுக்கு என்று ஆர்ப்பரித்த ஆயிரங்கதை அன்றொருநாள் சொல்லிச் சொல்லி அழுத கதை பாடிப் பரவசம் காண முனைந்த பல கதை, பாடு பொருள் மட்டும் மாறாத பரிதவிப்பும் ஒரு கதை நாடி ஓடி வருங்கனவில் நான் நலிந்து போனதும் ஒரு கதை தேடி இனிதேடி தேய்ந்து போனதும் தொடர...