Skip to main content

Posts

Showing posts with the label அலம்பல்....

என் நாளினது சுமை

ம னிதனின் நிலைப்பாடு என்பது எந்தப் புள்ளியில் தங்கியிருக்கிறது என்பதற்கான கேள்வியுடன் ஆரம்பிக்கிறேன். சாதாரணமாக ஆசனத்தில் அமர்ந்து இருப்பீர்கள். அது அவ்வளவு சௌகரியப்படாத போது , காலைக் கொஞ்சம் மடக்கி, பிறகு காலுக்கு மேல் கால் போட்டு இன்னும் பிறகு புழு நெளிவதை போல கால்களைப் பின்னிக் கொண்டும், கொஞ்ச நேரமப்பால், கால்களை நிதானமாக பிரித்துப் போட்டும ஆயாசமான நிலையில் ....... இருக்க எத்தனிப்பீர்கள். இந்த உட்காருதலுக்கான கூர்ப்பே இவ்வளவு நீளுகையில், மனிதனின் நிலைப்பிற்கான கூர்ப்பானது எத்துனை நீண்டதாய் இருக்கும்.?உங்களைக் கடந்து செல்கின்ற நாட்களை ஒவ்வொருவரும் எவ்வாறு  கழிக்கிறீர்கள் ? புதிதாக புலருகின்ற நிதானமேயல்லாத காலைப் பொழுதில் மனமும் உடலும் வெறுப்பைச் சுமந்து கொண்டு உடலைக் காற்றில் மிதக்க வைக்கின்றது. நித்திரையின் இறுதிப்படி இன்னமும் கண்களில் பேராசையைத் தூண்டி , நாளின் அபவாதங்களை ஆராய்கின்றது. இந்த நாளின் தொடக்கம் ஒரு வேளை ஏதாவது ஆராய்ச்சியுடன் ஆரம்பமாகலாம். என்ன, எதுவென்ற கேள்விகளுடன் மணிகளை, விழுங்கி ஏப்பம் விடுகின்ற அவசரத்தில் காலம் நகருகின்றது. ...