ஜெ ர்மன் நாட்டுக் கவிஞர் ஒருத்தர் ஒரு நாவல் எழுதினார். அந்த நாவல் பூராவும் உழுவான் வண்டு (Colfax plowing bee) வளர்த்தல் தொடர்பான கதை. உழுவான் வண்டு செர்மனியில் இருக்கிறதா எண்டு நம்பிறதுக்கு எனக்கு சுமார் இரண்டு ஆண்டுகள் பிடித்தன. உழுவான் வண்டே நாலு குல பேதங்களில் ஆறு வர்ணங்களில் கிடைக்கிறது. கரச்சான் உழுவான்,நண்டு உழுவான்,பேய் உழுவான்,குதிரைப்பாச்சான் எண்டு நாலு குலங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது. சாணிப்பச்சை,அரியதரக் கலர், தவிட்டுக்கலர்,அழுகின விளாம்பழ நிறம், மேலும் சொல்ல முடியாத சில வஸ்துக்களின் நிறம் எண்டு சுமார் எட்டு வகையான நிறங்களில் உழுவான் வண்டு பறந்தும், நடந்தும், ஊர்ந்தும், உழுதுகொண்டும் திரிகிறது. உழுவான் வண்டைப்பற்றி இந்த சேர்மன் நாட்டுக் கவிஞர் எழுதியதெல்லாம் உழுவான் வண்டை வீட்டில் செல்லப்பிராணியாக வளர்ப்பது எப்படி என்றே.சேர்மன் மொழி எனக்குத் தெரியாததால், ஆங்கிலத்தின் அதன் ஆறாம் பதிப்பொன்றை கொஞ்சக் காலத்துக்கு முன்பு ஒரு ரயில்ப்பயணத்தில், தண்ணீர்க் கடை ஒன்றில் வாங்கின புத்தகமொன்றில் படித்தேன். இதில என்ன விசேடமென்றால் உழுவான் வண்டு ஒன்ற...