கதவுகள் லேசுப்பட்டவை அல்ல , எந்தக் காலத்திலும் தட்டத் தட்டத் திறவு கொள்ளாமல் நம்மைப் பழிவாங்கியவை அவை கதவுகள் லேசுப்பட்டவை அல்ல , நாங்கள் தட்டத் தட்டத் திறவு கொள்ளாமல் பழியை வாங்கியவை அவை. எங்கள் வீடுகளில் கதவுகள் மரம் கடைந்தும், வசதிப்பட்ட வீடுகளில் இரும்பும், துரும்புமாயும் காகமிருக்கக் கொப்பாய் உயர்ந்து நெடுந்து , வளர்ந்து காவலிருக்கும். கதவுகள், சின்னஞ்சிறு குழந்தைகள், தொங்கித் தொங்கி ஊஞ்சலாட வாய்ப்புக் கொடுக்கும். எல்லாக் கதவுகளும் யாரையாவது காவலிருப்பது குறித்து ஒரு நாளோ இரு நாளோ தயக்கமடைந்திருக்கும். அல்லது வெட்கப்பட்டிருக்கும். அடைக்கலம் தந்த கதவுகளும் இருக்கின்றன. காட்டிக் கொடுக்கத் திறந்து கொண்ட கதவுகளும் இருக்கின்றன... கதவுகள் எங்கள் பாட்டிகள் மாதிரி, மூதாதைகள் மாதிரி, சின்னச் சின்னக் கதைகளை கதவு இடுக்குகளின் துவாரம் வழியாக யாருக்கும் பதனிடாத புதுக் காற்றில் சேமித்து வைத்திருக்கின்றன. இன்னொரு இன்னொரு தலைமுறைக்காக கதவுகளை நம்பி நாம்...