Skip to main content

Posts

Showing posts with the label விமரிசனம்

"செக்கு" நாடகம்;Parakrama Niriyella's 'Sekku'

    இடம்- கொழும்பு தேசிய கலை இலக்கியப் பேரவை. நெறியாள்கை- திரு பராக்கிரம நிரிஎல்ல காலம்-31.01.2010- ஞாயிறு மாலை.   பொதுவாக நாடகங்களின் தன்மைக்கேட்பவே ரசனையாளர்கள் ஏற்படுகின்றார்கள், காலாகாலமாக நாடகங்கள் வீதிகளிலும்,அரங்குகளிலும் ஏற்றப்படுகிரபோது அவற்றினது கவர்ச்சித்தன்மையுடன் ஏதாவது ஒன்று மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்கிற நிர்பந்தம் ஏற்படுகிறது, இதன் அடிப்படியில் நாடகத்துக்கான தனிப்பட்ட ரசிகர்கள் குறைவடைகிரார்கள், பெரும்பாலும் இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள், முற்போக்குக் கருத்துக் கொண்டவர்கள், மக்கள் ஸ்தாபனத்தைத் தாங்குபவர்கள், சமுதாயத்தினதும் அரசியலினதும் பார்வைக்குளிருப்போர் போன்றோரால் தான் முற்போக்கு நாடகங்கள் காலப்போக்கில் வரவேற்கப் படுகின்றன, இதன் காரணமோ என்னமோ நாடகத்தின் உட்பொருளும் இது சார்பாயே இருந்தது. கிட்டத்தட்ட முறையான தமிழ் நாடகங்களையே காணக்கிடைக்காத இந்தக் காலகட்டத்திலே 'ஜனகரளிய' குழுவினரது 'செக்கு' நாடகம் அண்மையில் கொழும்பு தேசிய கலை இலக்கியப் பேரவையின் சிற்றரங்கிலே கடந்த ஞாயிறன்று காணக் கிடைத்தது. வெறுமனே நாடகம் என்று சொல்லிவிட...

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும்...