படபடவென்று, இறக்கையை அடித்துக் கொண்டு அந்தரத்தில் துடிக்கின்ற அந்த இரவுப் பட்சி, இரவின் கவிந்து போன நரையை ரசிகத் தன்மைக்கு அப்பாலே எட்ட நின்று பார்க்கிறது- இருந்தும் கூடக்குறைய அதன் மையப்புள்ளிக்குள் அதனால் இறங்கமுடியவில்லை. நான் சாய்வு நாற்காலியைத் தேர்ந்தெடுத்து, ஆயாசமாக உட்கார்ந்து கொண்டு இஞ்சித் தேத்தண்ணியை ருசிக்கிறேன். எனக்கு எல்லாவற்றிலும் ரசனையுண்டு. அந்த மாமரத்தில், தளிர் வரத்தொடங்கி நாளாகீற்று- மாம்பூ பூத்துக் குலுங்கும் குடலையின் உன்னத வாசம்...! அன்றைய மாலை, இருண்டு போன சூரியனின் அழைப்பை மீறி வௌவால்களை மரத்துக்கு அழைக்கிறது. எங்கிருந்தோ நெடிய வீச்சத...