Skip to main content

Posts

Showing posts with the label பயணம்

போன வழிப் பயணம்...

பாகம்- 01 பயணக் கட்டுரை.     மழை சொட்டுச் சொட்டாகப் பெய்து கொண்டிருந்தது, காதுக்குள்ள அடர்த்தியான காத்து வீசிக் கொண்டே இருந்தது, நல்ல கறுப்புக் கலர் இரவு, நானும் அம்மாவும் மட்டுந்தான், அம்மா கேட்டா இப்ப வந்திருமா..? வந்திரும் வந்திரும்...- நான், இன்னுங் காணேல்ல...?.... வரும் வரும்...வராமப் போகாது.... ஒரு வேளை விட்டிட்டுப் போயிட்டால்...? ..............நான் ஒருக்கா அம்மாவை நிமிர்ந்து பார்த்து விட்டு, விட்டுட்டுப் போனாப் பரவாயில்ல, கருத்து உருண்டு திரண்டிருந்த மேகங்களின் பஞ்சுப் பொதியில உங்களை இருக்க வெச்சு ..ஆகாய மார்க்கமாக் கூட்டீட்டுப் போறன் ம்மா...எண்டன்,,,       நல்ல காலம் அம்மாக்கு எதுவுமே கேக்கேல்ல, இரவு முழுக்க பனிக்க நிக்க வேண்டாமேண்டால் கேக்க்கிரதில்லை...., வாய்க்குள்ள அம்மா முணுமுணுத்துக் கொண்டு கைக்கெடியாரத்தில நேரம் பார்த்தா... ஒன்பதே முக்கால்..., எண்ட கடியாரத்தில பத்து....! ரெண்டு பேருக்கும் எவ்வளவு ஜெனரேஷன் கப்? .....................................................................................................