Skip to main content

Posts

Showing posts with the label கிறுக்கு

சொர்க்கத்தின் குழந்தைகளும், காலத்தின் முரண் பிணக்குகளும்

நிறையக் காலத்துக்கு முன்பாக என்று சொல்லிவிட முடியாது. கிட்டத்தட்ட ரெண்டு மாதங்களுக்கு முன்னதாக...ஒரு படம் பார்த்தேன். அந்தப் படத்தை அதற்கு முன்பாகவும் ஒரு தடவை பார்த்திருக்கிறேன்.  ஏன் எப்போதுமே படங்கள் காலத்தின் பக்கம் சார்ந்தவையாக இருக்கின்றது என்பது பற்றி மட்டும் எனக்குத் தெளிவே இல்லை. சினிமாப் படங்கள் நான் பார்ப்பது மிகக் குறைவு என்று சொல்லலாம், அல்லது பார்த்த படங்கள் மிகக் குறைவு என்று சொல்லலாம், இரண்டுமே ஏறக்குறைய ஒன்று போலத்தான். ஆனால், முந்திப் பார்த்த படங்களை , இப்பக் கொஞ்ச நாளா திருப்பியும் பார்த்துவிட வேண்டும் என்கிற அவா அதிகரித்துக் கொண்டே வருகிறது.  நான் காலத்துடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கும் காலம் இனித் துரிதமடையப் போகிறதா, இல்லை தீர்ந்துவிடப் போகிறதா , இல்லை திடீரென்று வாழ்க்கை பற்றிய தீவிர அவாவா என்று தெரியவில்லை. முந்திக்கும், இப்பவுக்கும் என்னில் நிறைய மாற்றங்கள். ஒரு வேளை காதல்க் கவிதைகளெல்லாம் எழுதுவதில்லை என்று சபதமெடுத்துக் கொண்டிருந்த நான் காதல்க் கவிதைகள் எழுதுகிற அளவுக்கு  வளர்ந்துவிட்டதாலாக இருக்கலாம். ...

முன்னமொரு சகுனிகள்..

                                                முன்னமொரு சகுனிகள் முடிந்து வைத்த கதைகள் பல பின்னையொரு பொழுதிலே பேச்சவிழ்ந்த கதைகள் பல மன்னுமொரு காதல் மருந்தடித்த கதைகள் பல மாட்டிவைத்த அவன் கதையை மாய்ந்து மாய்ந்து-  உரைத்தன பல என்னையொரு நாளில் நீ அடித்துரைத்த கதையும் பல ஏக்கமொருநாளில் ஏங்கி வழிந்த கதையும் பல தோற்க வழியின்றி என்னைத் தோற்பித்த கதையும் பல தாக்க வழியின்றி எனைத் தகர்ப்பித்த கதையும் பல இருட்டிளுந்தன் பேர்தனை இடித்துரைத்த கதைகள் பல இன்னுமின்னும் இங்கிதமில்லாப் பங்கமும் பல கதை அழுக்கு என்று ஆர்ப்பரித்த ஆயிரங்கதை அன்றொருநாள் சொல்லிச் சொல்லி அழுத கதை பாடிப் பரவசம் காண முனைந்த பல கதை, பாடு பொருள் மட்டும் மாறாத பரிதவிப்பும் ஒரு கதை நாடி ஓடி வருங்கனவில் நான் நலிந்து போனதும் ஒரு கதை தேடி இனிதேடி தேய்ந்து போனதும் தொடர...

திரும்புவதற்குச் சாத்தியமற்ற குரல்........

திரும்புவதற்குச் சாத்தியமற்ற உன் குரல் தேடல்கள் தொலைந்து போன ஒரு  அந்தியில் என்னிடம் ஓடி வருகின்றன. நீ கோபப் படுவாய் என்பதற்காய் குரலில் மன்னிப்பு நிறைந்த கெஞ்சலை  அவிழ்த்துப் போட்டுக் கொண்டிருக்கிறேன். மன்னிப்பின் தீவிரத்தில் நீ  திட்ட மறந்த வார்த்தைகள்  நாளைக்காய் கிடப்பிலிருக்கிறது. மெல்ல,  நொடிப் பொழுதில்  நான் உன் கர்வம் என்பது போல் நான் உன்னில் நிறைந்து நிற்கும்  மந்திரக் கணத்தை ஆகர்ஷிக்க முற்படுவேன். உடனேயே, என்னிலிருந்து விலகும் வெளிச் சுவாசம் போல உன்னிலிருந்து விண்டு பிளவு படும் ஆக்ரோஷம் வெட்கமேயின்றி என்னைத் திட்டும். சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த என் மானம் மலினமாகும். மூடு பனியின் நளினங்கள் சாகும். நீ உச்சத்தில் இருப்பாய், நான் பாதத்தில் இருப்பேன். முன்னை விடத் தெளிவாக தீர்மானமாக, எல்லா நாளிலும் என் அழைப்பின் போது நீ சொல்லும்  தாரக மந்திரத்தை இப்போதும் சொல்ல மறக்க மாட்டாய். வழிகிற கன்னங்களை நான்...

கடவுள் பற்றி வாழ்தல் ............

                                                                                                    ....அம்மா, அந்த அனிச்சம் பூ பூக்குமாம்மா?....... பூக்கும் ராசாத்தி.......... 'எப்பம்மா பூக்கும்? .......... ...    மழை நிறையப் பெஞ்சு, காத்தும் சூரிய ஒளியும் தாராளமாக் கிடைக்கிரண்டைக்குப் பூக்கும். ......... "இன் சபிசியன்ட்"   பூட்ஸ் அப்பிடித்தானேம்மா ? ம்ம்ம்........ '' ஏண்டா,  தேவ மகனே , இந்த அனிச்ச மரம் எப்ப பூக்கும்? ......... 'தெரியேல்ல'.............., அது பூத்த அண்டைக்கு அதைப் பிச்சு எனக்குத் தருவியளா? ........... ..........

நான் ஒரு பேசப்படும் பொருள்

மரங்கள் அடர்ந்த காட்டுச் செடிகள் உதிர்ந்து உலருவதைப் போல ஒவ்வொரு இதழாக, உதிரி உதிரியாக நினைவுகளின் அடிக்குறிப்புகள் முகிழ்ந்து எழுந்துகொண்டிருந்தது. எனக்கு நினைவுகளில் இருந்து மீண்டு கொள்கிற தோரணை அல்லது அந்த வித்தை அடிப்படையிலேயே தெரியவில்லை. எனக்கு முன்னால் போகிற நிழல் என்னை விட ஒரு படி முன்னால் போகிறது என்பதை மட்டும் என்னால் உட்கார்ந்து யோசிக்கக் கூடிய தெளிவு இருக்கிறது. மற்றும் படி நான் மிகுந்த குழப்பமான மன நிலையில் இருந்தேன் போலும்.  நான் பழகி வாழ்ந்த தெருக்களில் என்னைக் கவனிப்பவர்கள் குறைந்து போனதையிட்டு ஒருவித மகிழ்ச்சி. இதைத்தான் காலம் பதில் சொல்லும் என்று பலர்  சொல்லுவார்களா என்று எனக்குத் தெரியவில்லை. நான் பேசப்பட்ட காலம் முடிந்து என்னைப் பற்றிப் பேசப்படுகிற காலம் எழுந்த இந்த கூர்ப்பு மாற்றத்தை நான் கொண்டாடுவதா இல்லையா என்றும் தெரியவில்லை. நான் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறேன், ஒரு வணிகப் பத்திரிக்கையின் கிசுகிசுக்களுக்கு ஒப்ப நான் ஒவ்வொருவர் காதுகளிலும் கோலாகலமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறேன்.எனக்கு ஆதரவுகளும் அதிகம், என் பக்கம் நியாயமும் இருக்...

எஞ்சாமி நீயி எப்ப வருவ?...

ஒண்ணுமே சொல்லாம போன எஞ்சாமி ! குத்தமொன்னு சொல்ல- குமுறியழ நீங்க இல்ல- ஒன்னுக்கு ஒண்ணா உசிரா வளத்துப்புட்டேன்-  உக்காந்து தேத்திவிட -நீங்க இல்ல எஞ்சாமி ! இவ கிடக்கா சிறுக்கியின்னு இம்புட்டும் இரங்காம- விறைப்பா நீரு, வில்லங்கமாப் போனீரு, கண்ணுக்குள்ள நீரு வரப்பத் தாண்டுது-  ஆத்தில தண்ணி அடிச்சிகிட்டு ஓடுது- எருக்கம் வித கையிருக்கு- அரளி வித அரைச்சிருக்கு-  எஞ்சாமி நீயி எப்ப வருவ?........... ஒத்தையில நட்டு வெச்ச மரம் போல வாடி நிக்கேன்- வாடிய பயிருக்கு வாழ கொஞ்சம் பச்சை கொடு. கத்தியில கட்டி வெச்ச  காய் போல காஞ்சிருக்கு- காயெல்லாம் தேஞ்சு என் வாய் போல பொளந்திருக்கு- வேணாஞ்சாமி நான் உன்னைக் குறை சொல்ல எல்லாத் தப்பும் எம்மெல்ல எஞ்சாமீ- குடை பிடிச்சு இங்காரும்  நெய் விளக்கு  ஏத்துவாரோ? கோடியில யாரும் கொடி வெச்சு தூத்துவாரோ ? ஐப்பசியில் மழை பேஞ்சு ஆவணியில் காத்தடிச்சா சித்திரையில், செங்கரும்பு சீனிபோல தித்திக்கும்முன்னு, ஒத்தையில போன எறும்புகளைப் புடிச்சி வெச்சி- ஒத்தடம் கொடுத்த...