Skip to main content

Posts

Showing posts with the label மாமரம்

இரண்டு மாமரங்கள்; Two Mango Trees

A poem about two Mango trees and this is a picture of my native hometown 'karutha kolumban' Mango tree in Jaffna மாம்பழம் , சாப்பிடுவதற்கென்று ஒரு மரம் வளர்த்தேன். ஒரு மரம் என்றா சொன்னேன்? ஒரு மரமல்ல, ஒன்றுக்குத் 'துணையாய் நிற்கட்டுமே' என்று இன்னொரு கன்றையும் வளர்த்தேன். ஒரு 'கறுத்தக் கொழும்பான்'. மற்றையது, நல்ல நெடுமி- அது 'பிளாட்'!  மரம் காய்க்கத் தொடக்கி, ரெண்டு நாள் இல்லை- வண்டடிச்கிப் போட்டுது. 'கறுத்தக் கொழும்பான்' முழுக்க  மாம்பழ வண்டு. "பிளாட்" ஒரு புனிதனைப் போல  ஓங்கி ஓங்கி வளர்ந்து கொண்டே  இருந்தது- இன்னும் காய்க்கவே இல்லை. இப்போது, வண்டடிச்சாலும் பரவாயில்லை அது தான் ருசி எண்டு பக்கத்து வீட்டுச் சிறுசுகள் மரம் முழுக்க ஏறி, கொம்மாளம் போட்டுக் கொண்டு  பழம் பறிக்கத் தொடங்கினர். காய்ச்ச மரம் எண்டதால அது கல்லெறியும் பட்டது. பிறகு, 'பிளாட்' மரத்தைப் பார்த்து, சனம், இது மலட்டு மரம் எண்டு கதைக்கத் தொடங்கீட்டுது. ...