அண்டைக்கு எதோ விரத நாள் .சனி விரதம். அவள்பாடிக் கொண்டிருக்கிறாள் . அவள் பாடிக் கன காலம் . ஒரு சுமூக கானம்.இதுவரைக்கும் எச்சந்தர்ப்பத்திலும் இது போல உணர்ந்ததே கிடையாது. இயற்கையின் கல்பிதம்! காற்று, மழை, இடி, புயல் எல்லாமுமாய்க் கலந்தது. ஒரு மெல்லிய பூவினது மணம் நுகரக் கற்றுக் கொடுப்பது போல அந்த நரம்புக் கருவி நீண்ட நேரம் ஓசையாகிக் கொண்டேயிருந்தது . ...