அண்டைக்கு எதோ விரத நாள் .சனி விரதம். அவள்பாடிக் கொண்டிருக்கிறாள் . அவள் பாடிக் கன காலம் .
ஒரு சுமூக கானம்.இதுவரைக்கும் எச்சந்தர்ப்பத்திலும் இது போல உணர்ந்ததே கிடையாது. இயற்கையின் கல்பிதம்!
காற்று, மழை, இடி, புயல் எல்லாமுமாய்க் கலந்தது. ஒரு மெல்லிய பூவினது மணம் நுகரக் கற்றுக் கொடுப்பது போல அந்த நரம்புக் கருவி நீண்ட நேரம் ஓசையாகிக் கொண்டேயிருந்தது .
சாமியறையின் விளக்கு நூர்ந்தது கூடத் தெரியாமல் ....வானம் பூமியிலிருந்து விண்டு வெடித்து தனியே பிளவு படுவது தெரியாமல், பாடிக்கொண்டே இருந்தாள்.
இயற்கை அவளை முற்றிலுமாக வசீகரித்திருந்தது. அவளும் இயற்கையும் ஒன்றே தான். பாடுகின்ற பொழுதில் அவள் தான் கடவுள்! அவள் பாட , கண்களில் கண்ணீர் தளும்புகிறது.
'இப்படியே பாடீட்டிருந்தா செத்திருவாவா மாமா இவ...?
.................இல்லடா, அவ பாடாட்டாத் தான் இந்த வையமே செத்துடும். புல், பூண்டு, பூச்சி, மனுசர், விலங்கு ஒண்ணுமே இந்த வையத்துலே இருக்காதுடா.
..........'கடவுள்' இருப்பாரா....?
...........அவோ தாண்டா கடவுள்- அவ மட்டும் வியாபிச்சுக் கொண்டே போவாள். சர்வ கிரகணமும் அவளோட அங்கத்திலே....அவ கடவுளோட கலந்துட்டா... சாம வேதத்தோட ஜீவண்டா...!!!
முழங்கையை மடியிலே ஊன்றியிருந்த சின்னத்தங்கச்சி, முகத்தை ஒரு தினுசான மருட்சியில் விழிக்க விட்டு, ஏம்மாமா இவ மட்டும் இப்பிடி ?
......இவன் ஒன்றும் பேசவில்லை.
குரலிலே ஏமாற்றம். எழுந்து கொண்டான். இப்போ யாரும் அவ பக்கத்திலே இருக்கக் கூடா, உபத்திரவம் பண்ணாமல் ரெண்டு பேருமாப் போய் கோடியில வெளாடுங்கோ.
எழுந்து வாசல்ப்பக்கம் நகர்ந்தான். காலிலே செருப்பில்லை. வைகாசி மாசத்து வெயில் , உடம்பிலே தோலை உரிச்சது போல, காலைச் சாப்பாடும் இன்னுமில்லை.
ஸ்டாண்டைத் துருத்தி, சைக்கிளை, பெல்- சகிதமாய் பியூன் நகர்த்திக் கொண்டிருந்தான். இவன் அவனையே பார்த்தான்.
'வெளிநாட்டுக் காகிதம் வரப் போல ..............!
ஒரு பூர்வாங்க இடைவெளிக்குப் பின் ஏமாற்றத்துடன், அந்த நிழல்த்தருவைப் பார்த்துக் கொண்டே நின்றான். ப்யூன் போய் விட்டான் . மணிச்சத்தமும் காதிலிருந்து அகன்று கொண்டே வந்தது.
..................... 'மாமா ....உங்கம்மா கூப்பிட்றா ...!...
ஒரு வாண்டு சட்டையைத் தூக்கிக் கையில் திரட்டிக் கொண்டே சொன்னது.
......ஏண்டா ?...
சாப்பிட.....,
சொல்லிவிட்டு அது ஓடிவிட்டது.
சொல்லிவிட்டு அது ஓடிவிட்டது.
தலைக்கு மேலே கரு வண்டுகள் ஊர்வது போலவிருந்தது. தலை கிறுகிறுத்தது. வெய்யிலினது மிரட்சி! கொஞ்சத் தூரம் நடந்து விட்டு , வீட்டருகே போக ,
..............அந்தப் பாட்டுச் சத்தம்,....
அவளது மனோ கீத வியாபகம் உலகத்தை சங்கமிக்கச் செய்கிறது. சுருதி ,தாளக் கலப்படமில்லாத ஜனன ஒலி, அடித்துவாரத்தின் ஹீனஸ்வரத்தைப் போல ,பாறைகளில் மோதி மோதிப் பிளவுண்டு ,பிரவாக மேலெழுச்சியில் களித்து, மழை நீரில் கரையும் மண் குடிலைப் போல உருகி....,
அவளது மனோ கீத வியாபகம் உலகத்தை சங்கமிக்கச் செய்கிறது. சுருதி ,தாளக் கலப்படமில்லாத ஜனன ஒலி, அடித்துவாரத்தின் ஹீனஸ்வரத்தைப் போல ,பாறைகளில் மோதி மோதிப் பிளவுண்டு ,பிரவாக மேலெழுச்சியில் களித்து, மழை நீரில் கரையும் மண் குடிலைப் போல உருகி....,
மரங்கள், இதழ்கள், மகரந்தங்கள்,தேனீக்களெல்லாம் ஒருவகைச் சந்தத்திலே மூழ்கி, ஒரு வகை சாமத்தின் இரைச்சலைத் தந்தன.
நான் நடந்து வந்து, திண்ணையில் உட்கார்ந்தேன். அந்த முள்முரூக்கை மரத்திலிருந்த செம் பூ , உதிர்ந்து விழுந்தது. அதை காக்கை ஒன்று கொத்திக் கொண்டோடியது.
...'மாமா' உங்கம்மா உங்களே, கூப்பிட்டு விட்டா ..., -மறுபடியும்-
'.....போடா, நான் வர்றேன் ....
சின்னத்தங்கச்சி வந்தாள். முகமெல்லாம் ஒரே அருவருப்பு.
இந்த 'ஸிப்பைப்' போட்டு விடு...,
முதுகுத் தண்டை நெரித்து வயிற்றை முன் தள்ளிக் கொண்டே கேட்டாள். அவள் கால்களில் கொலுசுக் கூட்டம், மூன்று மூன்று மணிகள் சேர்த்துக் கட்டியது,அவள் நடக்க, ஒட, ஒரே அலாதியான சப்தந்தான். அதனால் அவள் நிற்பதேயில்லை; உட்காருவதேயில்லை; ஒரே ஓட்டந்தான்........நாலு காலப் பாய்ச்சல்....!
முதுகுத் தண்டை நெரித்து வயிற்றை முன் தள்ளிக் கொண்டே கேட்டாள். அவள் கால்களில் கொலுசுக் கூட்டம், மூன்று மூன்று மணிகள் சேர்த்துக் கட்டியது,அவள் நடக்க, ஒட, ஒரே அலாதியான சப்தந்தான். அதனால் அவள் நிற்பதேயில்லை; உட்காருவதேயில்லை; ஒரே ஓட்டந்தான்........நாலு காலப் பாய்ச்சல்....!
'ஸிப்பைப்' போட்டு, பெல்ட்டைக் கட்டி விடூ.......,,,,,,
நான் அவளைக் கால் இறைக்குள் கெட்டியாகப் பிடித்த படி, இந்த 'ஸிப்' பிஞ்சு போச்சு, 'பெல்ட்டை' மட்டும் கட்டி விடுறன், உள்ளே போய் ஊசி வாங்கிட்டு வா குத்தி விடுறன்.
.......ஒன்னும் வேணாம் ,போ ....,நா, காச்சட்டை போடப் போறன்...., அவள் நாலு காலப் பாய்ச்சலில் ஓடினாள் .
மறுபடி ஓடி வந்து சட்டையையும் நிக்கரையும் கழற்றி உதறிவீசிவிட்டு, அண்ணனின் கால்ச்சட்டையைப் போட்டுக் கொண்டு, 'க்ளுக்''''..... மறுபடி நாலு கால் ஓட்டம். வேலிச்சந்துக்குள் உடலை வளைத்து, நுழைந்து, அடுத்த வீட்டுப் பையன்களுடன் ஒரே அமர்க்களம்.!
......அம்மா கூப்பிட்டு விட்டிருந்தாள்.
......................................................................................................................................
இன்னும் விரத காரியம் முடியவில்லை, சமச்சத காகத்துக்கு வெச்சிட்டு வந்தா, சோறு போட்டிருவன், இண்டைக்கு சனி விரதம், வாரந்தவராம பிடிச்சுக் கொண்டால், அடுத்த வாரம் எள் எண்ணெய் எரிச்சு விளக்கிடலாம், அதுக்கும் ஒருக்கா கோயில் வர போகவிருக்கும். எதுக்கும் நீ, அடுத்த வாரம் திருப்ப வர வேண்டியிருக்கும்.....
இன்னும் விரத காரியம் முடியவில்லை, சமச்சத காகத்துக்கு வெச்சிட்டு வந்தா, சோறு போட்டிருவன், இண்டைக்கு சனி விரதம், வாரந்தவராம பிடிச்சுக் கொண்டால், அடுத்த வாரம் எள் எண்ணெய் எரிச்சு விளக்கிடலாம், அதுக்கும் ஒருக்கா கோயில் வர போகவிருக்கும். எதுக்கும் நீ, அடுத்த வாரம் திருப்ப வர வேண்டியிருக்கும்.....
...நான் இங்க தான் நிக்கப் போறன் - என்றேன் , -அம்மா சிரித்தாள். நாம் நினைக்கிறதொண்டு, நடக்கிறதொண்டு, தெய்வம் எல்லாத்தையும் பாத்துத் தானே செய்யுது. விடுபட்ட விரதத்தை முடிச்சிட்டால் எல்லாம் சுபமாகிரும்.
இவன், வெறுப்பும் அவமானமுமாக அந்த கொய்யா மரக் குற்றியில் அமர்ந்தான். மரத்தில் கார், பஸ், குருவி பொம்மைகள் எல்லாம் காய்த்துத் தொங்கின.
செருப்பைக் கொண்டாந்து கட்டி வெச்சாக் காயும் காய்க்கும், இப்பப் பாரேன்,,,,அவள் புறந்துணியால் வாயை மூடிக் கொண்டு ,நாணி இழித்தாள் , காரணமாக ! இவன் பேசாமலேயே இருந்தான்.
காதெல்லாம் ஒரே கனமாக இருந்தது. மறுபடி அவள் உரக்கப் பாடினாள். அது வானத்தின் அந்தத்தில் எதிரொலித்து வீட்டுச் சுவற்றில் மோதி, அவன் காதை அடைத்தது. தளிர் இலைகளுக்குள் தங்க நாகம் ஊடுருவுவதைப் போல, மிக நுணுக்கமான ராகமது.
தேன் வதையைப் போல ஒட்டிக் கொண்டே, ஒரு மயக்க மீழ் நிலையை உண்டு பண்ணியது.
ஆகாயத்தின் நட்சத்திரங்கலெல்லாம் திரண்டு காதுக்குள் ரசம் ஊற்றுவதைப் போன்ற பொய்மை ரணம்......... மிக மிருதுவான பூனைக் கரங்களுடன் வருடுகிறது,,,,,,
தேன் வதையைப் போல ஒட்டிக் கொண்டே, ஒரு மயக்க மீழ் நிலையை உண்டு பண்ணியது.
ஆகாயத்தின் நட்சத்திரங்கலெல்லாம் திரண்டு காதுக்குள் ரசம் ஊற்றுவதைப் போன்ற பொய்மை ரணம்......... மிக மிருதுவான பூனைக் கரங்களுடன் வருடுகிறது,,,,,,
.........'இந்தாடா, இதை காகத்துக்கு வெச்சிட்டு முகங்கழுவீட்டு வா, சோறு போடுறன்,
அம்மா, கா...கா... எனாமல், ஹா ஹா ஹா..என்று ஒரு சங்கீதத்தில் காகத்தைக் கூவினாள்.
வானத்தில் காகந்தவிர எல்லாமும் பறந்தது !
வாழையிலையைக் கையில் ஏந்தியபடி, மதில்ப்பக்கமாகச் செல்ல யனித்தேன்,
............. 'ரேய்.... முன் வாசல்ப்பக்கம் வேப்பமரத்தண்டை காக்கா நிறைய இருக்கும், போ ...அங்கெ போ........!!!
முன் வராந்தாவை தாண்டிப் போக, ஒரு வித சுவாசம் ....சாமந்திப் பூவோ, செவ்வரளியோ,மகிழம்பூவோ...அதென்ன...பவளமல்லியோ......இனம்பிரிக்க முடியாதபடிக்கு கலந்து போன வாசனை!
தண்ணீர்ப் பொய்கை நிறையப் பூ, கொஞ்சம் வெண்காந்தளும், மகிழம்பூவும்....கொத்தாகக் கையிலே எடுத்து நுகர்ந்து...சுவாசத்துக்கு எவ்வளவு இலகுவாக இருக்கிறது....? கடவுளின் இனியதொரு ஆராதனைப் பாடலைப் போல, இமை பொத்தி அந்தப் பூக் குடலையோடே ஒன்றிப் போய்....,
.....'அம்மம்மா...மாமா, சாமிக்கு வச்சிருந்த பூவே வாசம் பாத்துட்டான்........,
..........'என்னடா அங்கெ சத்தம்.....?
நான் நடந்து வெளியே சென்றேன். ஏம்மாமா நீங்க வாசம் பாத்தா மட்டும் அம்மம்மா பேசவே மாட்டா...? நா, ஒருநாள் சாமிக்கு வெச்சிருந்த தாமரேப் பூவ எடுத்து ...வாசம், பா.......,,,, அவ ஓங்கி முதுகிலே வெச்சுட்டா.....,
.
......இப்போதும் வலிக்கிரதைப் போல முகத்தைச் சினுங்கினாள்...... ம்ம்...அம்மம்மா, அடிக்க இவ ஓன்னு அழத்தொடங்கினா ........- சின்னத்தங்கச்சியும் சொன்னாள்.
......இப்போதும் வலிக்கிரதைப் போல முகத்தைச் சினுங்கினாள்...... ம்ம்...அம்மம்மா, அடிக்க இவ ஓன்னு அழத்தொடங்கினா ........- சின்னத்தங்கச்சியும் சொன்னாள்.
...'எ ....., சாணி, மாமா, 'வ்வேக்'...! சின்னத்தங்கச்சி, கொலுசு சப்திக்க நாலு காலப் பாய்ச்சலில் சாணித் தரவாட்டை விட்டு குதித்து ஓடினாள் .
சின்னன் ரெண்டு கையாலையும் காகத்தைக் கூப்பிட்டது. ஒன்னையும் காணோம்.
நான் அக்காவே கூட்டிட்டு வரப் போறன். அது உள்ளே ஓடியது.
மரத்தடி நிழலில் ஒரு உயர்ந்து இடிந்த மதிலில் சாதத்தை வைத்து விட, அந்த பப்படத்தை மட்டும் சின்னத்தங்கச்சி எட்டி எடுத்தாள் .
........'எ...சாமி அடிக்கும், காக்கா சாப்பிடட்டுக்கும். புடுங்கி இலையில் வைத்தேன். சின்னன் போய் பூவரச மரத்து இலையைப் பிய்த்து, 'பீப்பீ' செய்யுங்கோ மாமா...........,,
நான் இலையை கோணலாகக் கிழித்து உருட்டி, நுனியைக் கிள்ளிக் கொடுத்தேன்.
.......................
' பீப்..பீ....பீ.......பீ.... அது ஊதிக் கொண்டே ஓடித்திரிந்தது.
...........'பீப்பீ' ஊதினா காகம் போடும்...வராது...!
சத்தத்திற்கு அக்கா வந்தாள். கூப்பிட்டிங்களா மாமா?..................
சத்தத்திற்கு அக்கா வந்தாள். கூப்பிட்டிங்களா மாமா?..................
' .....இல்லையே சுசீலா........,,,,
அவள், சட்டையை இழுத்துக் கூட்டிவந்த வாண்டுகளுக்கு அடித்தாள்.
...........'சுசீலா'..........., இந்தக் காக்காயைக் காணோம், நீ கூப்பிடேன்,....
நானா........., க்கா...கா...அவள் வெட்கப்பட்டுக் கொண்டே வாய்க்குள்ளாறே கூப்பிட்டாள். ம்ஹீம்......, வரக்காணோம்.
தொலைவிலே ஒரு கரண்டுக் கம்பத்திலே ஒரே ஒரு காக்காய் இருந்தது.அதை வரவழைக்கத் தான் இத்தனை பிரயத்தனம்.
........சுசீலா, அந்த முள்முருக்கை மரத்துப் பூவப் பிச்சு, மதில்ல வெய்யன்...காகம் தானா வரும்...
....சிவப்புப் பூ...! சின்னன், கை கொட்டியது.
சுசீலா போனாள், வாண்டுகளும் போயின., எ, ...நீங்க நில்லுங்க, முள்ளுக்குத்தும்.
குழந்தைகள் படலைக்குள் போயே விட்டன.
அந்த முள்முருக்கை மரம் யாருடையதோ கல்யாணத்தில் நட்ட ஞாபகம். கற்பக விருட்சம் !!!
நீண்ட நெடி கலந்த அந்த இசை, மறுபடியும்,....!
ஒரு நீர்க்குமிழி உடைந்து ஒழுகுவதைப் போல, மெத்து மெத்தான இருள்கேசத்தைப் போல அலை பாய்ந்து, மேகத்துக்குள் இருக்கும் நீரைப் பிரித்துக் கொட்டுவதைப் போல, சோக ரசம், சந்தோசம், விரக்தி, சாத்விகம், ராக்கதம்,தாமசம்,எரிச்சல்,பொறாமை, காமம், குரோதம், மோகம்,மதம், மாச்சரியம்...இன்ன பிற லாவகா எண்ணங்களை எல்லாம், ராக பாவனையில் கொண்டு தந்தது.
சுரத்துக்குச் சுரம் வேறுபாடு ! மந்தரஸ்தாயியிலிருந்து , உச்சத்திற்கு, மறுபடி, இன்னொரு இழுப்பு, கமகம், பிருகாக்கள், ...குளிர்க் கமண்டலத்தைக் கவிழ்த்துக் கபாலத்தில் வார்ப்பது போன்ற பிரேமை...!!!
அந்த கீதம், என்னை மாயாலோகத்துக்குள் இழுத்துச் செல்லுகிறது, அது முழுதுமாக பிரேமை நிறைந்த தேசம், அது நிறைய மகரந்தப் பூக்கள், .....
ஒரு விளக்க முடியாத பரிதவிப்பு, பாவக் குவியலை, ஜன்மா ஜன்மமாக காவுவதைப் போல வலி....!, அது இன்னது தானென்று சொல்ல முடியாத ...ஒரு...ஒரு வகை..ஊழி நிறைவுக் கூத்தைப் போல என்னுள் நர்த்தனமாடியது.
பிரபஞ்சாண்ட கீடங்களை குறுக்குமறுக்காக கிழித்துப் போட்டு, போதை கொள்ளச் செய்தது ! அக இருளில் தத்தளிக்கச் செய்தது. ஆன்மாவின் அந்தரங்கத்தை உரசிக்கொண்டேயிருந்தது.
...மாமா, இதோ பூ......!
........'அதை அங்கெ மதில்லே வை...! என்னதிது இன்னும் காகம் வர்ற பாடில்லை.
ஒரு வேளை நாங்கள் நிக்கிறது, அதுக்கு பிடிபடேல்லையோ .?
............'எ,,வாண்டுகளா உள்ளே ஓடிப் போங்க, நானும் சுசீலாவுமா இங்கே நிக்கிறோம்.படலையைத் தாண்டிச் சென்ற போது ,காகம் வேப்ப மரத்து உச்சிக்கு வந்தது.
'எ...வர்து வர்து ....காக்கா , சோத்தக் கொத்தப் போகுது.........,,,,,, !
..........உஷ்....சத்தம்...!!
காக்காய் கிட்டே வந்து உட்கார்ந்து, அண்ணார்ந்து பார்த்துக் கரைந்து விட்டு இப்பாலே வெகுதூரம் பறந்து பாச்சா காட்டிவிட்டது.
'ச்சே...காகம் போட்டுதே.....! எருமேக் காகம்....உன்னை...!அவள் கல்லெடுத்தாள்....
'காகம்', ஈஸ்வரனோட வாகனம், பிறகு உன்னை ஒத்தக் காலாலே உதைப்பாராம்.
................ஏன் ஒத்தைக் கால்?.....
சனீஸ்வரனுக்கு ஒத்தைக் கால், ஒரு கால் முடம்.சூரியனோட பிள்ளை, சித்திர குப்தனோட தம்பி, யமனுக்கும் தம்பி, கர்ணனோட கூடப் பிறந்தவன்....குடும்பமே அழிச்சாட்டியமானது. கர்ணனைத் தவிர்த்து...!
நான், எதோ விகல்ப்பமில்லாமலுக்கும், சம்பந்தமில்லாமலுக்கும் சொன்னேன்.
நான், எதோ விகல்ப்பமில்லாமலுக்கும், சம்பந்தமில்லாமலுக்கும் சொன்னேன்.
...............'போ போ'...உனக்கு ஏழரை ஆரம்பிச்சது.......!
'இல்லே எனக்கு அஞ்சிலே சனி, எனக்கென்ன கல்யாணமா ஆயிடுத்து? குழந்தை பெற....அஞ்சிலே சனியிருந்தால் குழந்தை பிறக்காதாமே ?..அடுத்த வீட்டு மாமிக்கு........
எனக்கு பகீரென்றது. எதோ உள்ளுக்குள் சுட்டது .
................இன்னமும் அந்த இசையினது கிறக்கம் மறையவே இல்லை.
முடிவில்,
'சுசீலா' காகம் இன்னைக்கு வராது போல, போங்க எல்லாரும் போய்ச்சாப்பிடுங்க..வர்ற வாரம் பாக்கலாம்.
'ஐயோ , காக்கைக்கு சோறு வைக்காட்டில் சாப்பாடே தொடப்படாது....இது வைதீகத்திலே இருக்கு...அதுவுமின்னைக்கு சனி விரதம்....!
......'டேய் ஆயாச்சா....,காகம் கொத்திட்டா? அம்மா அடுக்களைக்குளிருந்து கத்தினாள்.
'சுசீலா, என்னடி செய்ய...? மணி மூன்றை ஆகப் போகுது சின்னவங்கள் பசிக்கப் போகுதுகள்.
வேற ஏதாவது பிராணிக்கு வைக்கக் கூடாதா?...................
சிங்கப் பூரில என்ன செய்வாங்க...?
....'அவங்க வெரதமே பிடிக்கிறதில்லை.............,,,,,,
'ஆடு ,மாட்டுக்கு- வைக்கலாமோ?.....
......பிரமாதம்...!!!
காகம், இல்லாட்டி, ஆடு, ஆடு இல்லாட்டி மாடு....மாடு, இல்லாட்டி, நாய், நாய் இல்லாட்டி பூனை...பூனை இல்லாட்டி புலி...நல்ல ஐடியா !
'எல்லாப் பிராணியுமே கடவுள்ளே அன்பாத் தான் இருக்கு,, மனுஷனைத் தவிர.அவன்தான் கடவுள் மேல அனுதாபமாத் திரியறான்.
அவள் பாடுகிறாள்.,,,,,
' மைப்படிந்த கண்ணாளனும் தானுங்கச்சி,
மயானத்தான் வார்சடையான் எண்ணினல்லன்,
ஒப்புடையனல்லன் ஒருவனல்லன்,
ஒரூரனல்லன் ஒரூவனுமல்லி,
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவனருளே கண்ணாகக் காணினல்லால்-
இப்படியே இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்,
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொணாதே....! - பாட்டை நிறுத்தி விட்டு,
மாட்டே எங்க புடிக்க...?...............
'வா...காலாற நடந்துவிட்டு வரலாம், எங்கயாச்சும் மாடு கெடைக்கும்.
நடக்க ஆரம்பித்தோம். வாண்டுகளும் கூடவே ஓடி வந்தன.
ஆறுமுகத்தின் வீட்டிலே ,மாட்டுத் தொழுவம்,அந்தக் காளை மாட்டுக்குக் கொடுத்தேன் சோற்றை.
..............' மாமா...பசுவுக்கே தான் கொடுக்கோணும்...!
.
காளை மாட்டின் பாதி இலையை நகர்த்தி பசுமாட்டிற்கருகே வைத்தோம், அது 'உவக்க்க்க்க்' ம்ம்மா ...மா.........! இலையைத் தள்ளி விட்டது.
'...எச்சி இலையைத் தின்னாது மாமா பசு...,,,,,,
'வா போகலாம்..............,,,,,,
அப்போ சோறு......?
ஆறுமுகம் பார்த்துக் கொள்வான். அவளை இழுத்துக் கூட்டிக் கொண்டு வீடு வந்தேன்.
ஒரு வித சப்தமும் இல்லை. அந்த சங்கீதத்தின் வாசமே இல்லை !ஒரு வித துரு நாற்றத்துடன் வீடு வெறுமையாய்....,,,,,.
முற்றத்திலே செத்த எலியைக் கொன்று கூறு போட்டு தின்ற படியிருந்தன ஏக காகக் கூட்டம் !
***
நிலா -
2007
2007
ஸ்ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ண கட்டுதே... சரி
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....
புதிய ஆரம்பம்..
ReplyDelete2010 புதுவருட தினம் உத்தியோகபூர்வமாக தமிழ்ப்பெண்கள் திரட்டி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
http://tamilpenkal.co.cc/
உங்கள் நண்பிகளுக்கும் தமிழ்ப்பெண்கள் திரட்டியை அறிமுகப்படுத்துங்கள்.
என்ன சில நாட்களாக இடுகைகளக் காணவில்லையே என்று பார்த்தேன். புது வருடத்தில் கலக்குங்கள். நல்ல இடுகை...
ReplyDeleteஆங்கில புதுவருட வாழ்த்த்துக்கள்.
பெரிய பதிவு ஆனா உங்களுக்கு நிறைய அறிவு! :)
ReplyDeleteமுடிஞ்சா நம்ம பக்கம் வந்து உங்க ஓட்டும், மேலான கருத்தும் சொல்லிட்டு போங்க.. நன்றி
ReplyDeleteவாழ்த்துக்கள் நிலா!
ReplyDeleteஷப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே நிலா, தட்டச்சு செய்ய எத்தனை மணித்தியாலம் சென்றது? 2007ல் எழுதிய கதை என்றால் சின்ன வயதிலையே நீங்கள் இப்படித்தான் சிந்தித்தீர்களா? வாழ்த்துக்கள்
ReplyDelete//வந்தியத்தேவன் Said 6/1/10 11:04 PM
ReplyDeleteஷப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே நிலா, தட்டச்சு செய்ய எத்தனை மணித்தியாலம் சென்றது? 2007ல் எழுதிய கதை என்றால் சின்ன வயதிலையே நீங்கள் இப்படித்தான் சிந்தித்தீர்களா? வாழ்த்துக்கள் //
அப்படியே விழுந்து விழுந்து வழிமொழிகிறேன்....
என்னப்போல சின்னப் பெடியளுக்கு உவளாத்தயும் வாசிக்க 2,3 நாள் தேவை.....
சொல்ல மறந்திற்றன்.... ரெம்ப்ளற் நல்லாயிருக்கு...
ReplyDelete(யாழ்ப்பாணம் போயிருந்தபடியா எல்லாம் பிந்தியே சொல்றன்....)